சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

என்னதான் சொகுசு கார்கள் இருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் இன்னமும் மாருதி 800 காரை ஓட்டுகிறார். இதுகுறித்து சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளுக்கு இன்று (ஏப்ரல் 24) பிறந்த நாள். இந்தியா மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கே இவரை பற்றி அறிமுகம் தேவையில்லை. ஆம், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் களத்தில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

ஆனால் அந்த சாதனைகளை பற்றி நாங்கள் இங்கே பேசப்போவதில்லை. அனேகமாக அவை அனைத்துமே உங்களுக்கு தெரிந்திருக்கும். கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக சச்சின் அதிகம் நேசிக்கும் விஷயங்களில் கார்களும் ஒன்று. எனவே மாஸ்டர் பிளாஸ்டரின் அட்டகாசமான கார் கலெக்ஸன் பற்றிய ருசிகரமான தகவல்களைதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

மாருதி 800 (Maruti 800)

இந்தியர்கள் பெரும்பாலானோரின் முதல் கார் மாருதி 800-ஆகதான் இருக்கும். சச்சின் டெண்டுல்கரின் கார் கலெக்ஸனும் மாருதி 800 உடன்தான் தொடங்கியது. ஆம், இதுதான் அவரது முதல் கார். தொழில்முறை கிரிக்கெட் வீரராக உருவெடுத்த பின், சச்சின் அவரது சொந்த பணத்தில் வாங்கிய கார் இது. எனவே இன்றைக்கும் கூட அவரது கராஜில் அந்த மாருதி 800 நின்று கொண்டிருக்கிறது.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கரிடம் இன்று விலை உயர்ந்த, அதிவேகத்தில் பறக்க கூடிய பல்வேறு கார்கள் இருந்தாலும் கூட, மாருதி 800 அவரது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இதனால் இந்த காரை விற்பனை செய்வதில்லை என சச்சின் சபதம் எடுத்துள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சச்சின் இன்னமும் கூட இந்த காரை ஓட்டுவதாக கூறப்படுகிறது.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

ஃபெராரி 360 மடோனோ

ஒரு கடவுளிடம் இருந்து மற்றொரு கடவுளின் கைகளுக்கு வந்த கார் இது. ஆம், பார்முலா ஒன் சாம்பியனான மைக்கேல் சூமேக்கர்தான், ஃபெராரி 360 மடோனோ (Ferrari 360 Modena) காரை சச்சினுக்கு பரிசாக வழங்கினார். பிராட்மேனின் 29 டெஸ்ட் சதங்கள் என்ற சாதனையை கடந்த 2002ம் ஆண்டு சச்சின் சமன் செய்தார். இதற்காக அவருக்கு கிடைத்த பரிசுதான் இந்த கார்.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

ஆனால் ஃபெராரி 360 மடோனோ காரை சச்சின் கடந்த 2011ம் ஆண்டு விற்பனை செய்து விட்டார். 'ஃபெராரி கீ சவாரி' (Ferrari ki Savari) என்ற பாலிவுட் திரைப்படத்தில், சச்சின் டெண்டுல்கரின் ஃபெராரி கார் இடம்பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

பிஎம்டபிள்யூ ஐ8

சச்சின் டெண்டுல்கரிடம் ஏராளமான பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன. பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார் என்பது மட்டும் இதற்கு காரணம் கிடையாது. உண்மையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களை எல்லாம் சச்சின் டெண்டுல்கர் அதிகம் விரும்பக்கூடியவர்.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கரிடம் இருக்கும் பிஎம்டபிள்யூ கார்களில் ஐ8 (BMW i8) முக்கியமானது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதன்மையான ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்று. பிஎம்டபிள்யூ ஐ8 கார் அதிகபட்சமாக 357 எச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. எனவே சீறிப்பாயலாம் என்பதில் சந்தேகமில்லை.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

பிஎம்டபிள்யூ எம்6 கிரான் கூபே

சச்சினிடம் பிஎம்டபிள்யூ எம்6 கிரான் கூபே (BMW M6 Gran Coupe) காரும் இருக்கிறது. இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ எம்6 கிரான் கூபே கார் மாஸ்டர் பிளாஸ்டருக்குதான் டெலிவரி செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. இந்த காரின் இன்ஜின் 500+ எச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 750எல்ஐ எம் ஸ்போர்ட்

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 750எல்ஐ எம் ஸ்போர்ட் (BMW 7-Series 750Li M Sport) காரும் சச்சினிடம் உள்ளது. இந்த காரில், 4.4 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 450 எச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி சாலைகளில் சீறி பாய்ந்து செல்ல கூடியது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள்.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

பிஎம்டபிள்யூ எம்5

அதிக பவரை வழங்கும் லிமிடெட் எடிசன் '30 ஜாஹரே எம்5' (30 Jahre M5) காரையும் சச்சின் வைத்துள்ளார். இந்த காரில் 4.4 லிட்டர், வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 600 எச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பிஎம்டபிள்யூ எம்5 (BMW M5), பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை, 4 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடக்கூடியது.

சச்சின் எடுத்த சபதம்... சொகுசு கார்கள் இருந்தாலும் மாருதி 800 காரை இன்னமும் ஓட்டுவது ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கரிடம் இருக்கும் கார்களிலேயே, வேகமான கார்களில் பிஎம்டபிள்யூ எம்5 மாடலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிற்கு நிகராக கார்களையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு இந்த கார்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக கார்களை அவர் வாங்குவதற்கு வாழ்த்துக்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Master Blaster Sachin Tendulkar Car Collection - Maruti 800 To BMW i8. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X