தல ஸ்டைலில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு! என்னனு தெரியுமா?

மாளவிகா மோகனன் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

தமிழ் உள்பட பல்வேறு மொழி திரையுலங்களிலும், மிகவும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதை போலவே, பைக் ஓட்டுவது என்றாலும் மாளவிகா மோகனனுக்கு மிகவும் பிடிக்கும்.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

பைக் ஓட்டுவதை அவர் மிகவும் நேசிக்க கூடியவர். கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்டிருந்த காணொளி அதற்கு சாட்சி. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள புத்தா சர்வதேச சர்க்யூட்டில் (Buddh International Circuit), மாளவிகா மோகனன் ரேஸ் பைக் ஓட்டும் காட்சியை அந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிந்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

அந்த சமயத்தில் சமூக வலை தளங்களில் அந்த காணொளி வேகமாக பரவியது. இது கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட காணொளி ஆகும். அந்த சமயத்தில் தலைசிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் இணைந்து, புத்தா சர்வதேச சர்க்யூட்டில் மாளவிகா மோகனன் ரேஸ் பைக் ஓட்டியிருந்தார். அதனை நினைவுகூறும் விதமாக, கடந்த ஏப்ரலில் இந்த காணொளியை மாளவிகா மோகன் பகிர்ந்திருந்தார்.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இந்த வரிசையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று (அக்டோபர் 16) ஒரு சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது லடாக் பகுதியில், மாளவிகா மோகன் பைக் பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். இந்த பயணத்தின்போது, ராயல் என்பீல்டு பைக்கை மாளவிகா மோகனன் பயன்படுத்தியுள்ளார்.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

ராயல் என்பீல்டு பைக்கில், லடாக் பிராந்தியத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் பலருக்கும் இருந்து வரும் ஒரு கனவு. பல்வேறு சவால்கள் நிறைந்த லடாக் சாகச பயணத்தை, பலர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இன்னும் பலர் அங்கு செல்லும் கனவுடன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

மாளவிகா மோகனன் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டவை? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தனக்கு பைக்கில் ஊர் சுற்றுவதற்கு மிகவும் பிடித்தமான இடமாக இமயமலை மாறியுள்ளதாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார். மேலும் அங்கு பைக் ஓட்டும்போது கிடைக்கும் சிலிர்ப்பான அனுபவத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இதன்படி காற்று, மழை, சில சமயங்களில் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை முகத்தில் தாங்குவது என்பது மிக சிறப்பான அனுபவம் என மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இந்த காரணத்திற்காகதான் இமயமலையில் பைக் பயணம் மேற்கொள்வதற்கு பலரும் ஆசைப்படுகின்றனர். சொகுசான காரில் சென்றாலும் கூட, காற்றும், ஆலங்கட்டி மழையும் முகத்தை தழுவும் சிலிர்ப்பான அனுபவத்தை பெற முடியாது.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இதற்கிடையே விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என பேராவலுடன் காத்திருப்பதாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார். அப்போதுதான் தன்னால் மீண்டும் பைக் பயணம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாளவிகா மோகனன் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

மாளவிகா மோகனன் வெளியிட்டிருக்கும் பதிவிற்கு கீழே ஏராளமான ரசிகர்கள் கருத்து பதிவிட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதில், ஒரு சிலர் எங்களையும் கூட்டி செல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ, பாதுகாப்பாக பைக் பயணம் செய்யுங்கள் என அக்கறையுடன் அறிவுரை கூறி வருகின்றனர்.

இத பாத்தா தளபதியே அசந்து போயிருவாரு... இமயமலையில் மாஸ்டர் ஹீரோயின் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

பொதுவாக நடிகர் அஜீத் பைக் ரைடர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அவர் அடிக்கடி பைக் பயணம் செய்யக்கூடியவர். நடிகர் அஜீத் பாணியில், நடிகை மாளவிகா மோகனனும் மோட்டார்சைக்கிள்கள் மீது காதல் கொண்டவராக இருக்கிறார். அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
'Master' Heroine Malavika Mohanan Says She Can’t Wait To Go For A Motorcycle Ride. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X