ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

மிக மிக மலிவு விலையில் ப்ளூடூத் வசதிகொண்ட தலைக் கவசம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் ஹெல்மெட் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்காரணமாகவே, இந்திய மோட்டார் வாகன சட்டம் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் வலியுறுத்துகின்றது. இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றவகையில், அவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஆனால், நம்ம ஊரு இளைஞர்களோ இந்த விதியை துளியளவும் மதிப்பதில்லை. போலீஸாரை சாலையோரத்தில் பார்க்கும்போது மட்டுமே ஹெல்மெட் பயன்படுத்துகின்றனர். அவர்களை, கடந்த வேகத்திலேயே அந்த ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேங்க் மீது வைத்துக்கொள்கின்றனர்.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஆனால், இதில் ஒன்றை மட்டும் அவர்கள் அறிந்துக் கொள்ள தவறுகின்றனர். ஹெல்மெட் அணிவது போலீஸாரின் பாதுகாப்பிற்காக அல்ல, நம்ம பாதுகாப்பிற்காக மட்டுமே.

இந்நிலையில், ஹெல்மெட் பயனர்களை அதிகரிக்கச் செய்யும் விதமாக, மாவோக்ஸ் நிறுவனம் மலிவு விலைக்கொண்ட பாதுகாப்பு நிறைந்த ஹெல்மெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஹோன்சோ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெல்மெட்டில் ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயமாக உள்ளது. இந்த ஹெல்மெட்டிற்கு மாவோக்ஸ் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 999 என்ற குறைந்த விலையை நிர்ணயித்துள்ளது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த மலிவான விலையில் ப்ளூடூத் வசதியை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக மாவோக்ஸ் இருக்கின்றது. மேலும், இந்த மலிவு விலையில் பல நிற தேர்வினையும் இந்த ஹெல்மெட்டில் மாவோக்ஸ் வழங்குகின்றது.

இந்த புதிய ஹெல்மெட்டின் அறிமுகத்துடன் மாவோக்ஸ் நிறுவனம் அதன் புதிய லோகோவையும் அறிமுகம் செய்துள்ளது. அதில், "பீட் தி ஓட்ஸ்" என்ற வாசகங்கள் புதிதாக இடம்பெற்றிருக்கின்றது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

மாவோக்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டே இந்தியாவில் அறிமுகமாகியது. ஆகையால், மிகவும் இளம் நிறுவனமாக இது இருந்து வருகின்றது. சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக இந்த மலிவு விலை ப்ளூடூத் இணைப்பு வசதியுடைய ஹெல்மெட்டை தற்போது இந்தியாவில் மாவோக்ஸ் களமிறக்கியிருக்கின்றது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இசிஇ சான்று வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அப்படியானால், இது ரைடர்களுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும் ஹெல்மெட்டுகளை தயாரித்து வருகின்றது என்று பொருள்.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாவோக்ஸ் ஹான்சோ ஹெல்மெட்டில் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், வாய் மற்றும் தலைப் பகுதியில் திறப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு புழுக்கம் போன்ற அசௌகரியமான உணர்வில் இருந்து விடுதலையளிக்கும்.

இந்த திறப்புகளை தேவையில்லை என்றால் மூடிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், மழை மற்றும் வெயில் ஆகிய இரு காலங்களிலும் இந்த ஹெல்மெட்டை தங்கு தடையின்றி பயன்படுத்த முடியும்.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதுமட்டுமின்றி, மாவோக்ஸ் ஹான்சோ ஹெல்மெட்டில் ஆன்டி-ஃபாக் எனப்படும் மூடு பனியில் எதிர்வினையாக செயல்படக்கூடிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த ஹெல்மெட்டின் மவுத் குவார்ட் பகுதியில் கூடுதலாக ஏர் ஃபில்டரை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த புதிய ஹெல்மெட் இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) மற்றும் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஐஎஸ்ஐ ஆகியவற்றின் தரநிலைகளின் படியே இந்த ஹான்சோ ஹெல்மெட்டுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக மாவோக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் மாவோக்ஸ் ஹான்சோ ஹெல்மெட்டிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த புதிய ஹெல்மெட்டுகள் வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என மாவோக்ஸ் தெரிவித்துள்ளது. அவை, மூன்று விதமான வேரியண்ட் மற்றும்ம பல வண்ண தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஹெல்மெட் மலிவு விலையைக் கொண்ட ப்ளூடூத் இணைப்பு வசதியைக் கொண்டிருப்பதால் இந்திய இளைஞர்கள் மத்தியில் கூடுதலாகவே எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அதன் ஸ்டைலான தோற்றும் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவை ஹெல்மெட்டைப் பயன்படுத்த விரும்பாதவர்களைக் கூட பயன்படுத்த வைத்துவிடும் என நம்பப்படுகின்றது.

ப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த ஹெல்மெட்டின் அறிமுகத்தைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சந்தர் அம்கின் கூறியதாவது, "வாகனத்துறையில் நாங்கள் இருப்பதை உறுதிச் செய்கின்ற வகையில் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகின்றோம். இத்துடன், எங்களின் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய தயாரிப்பு இதற்கு வழி வகுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்" என்றார்.

Source: bikeadvice

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2020, 19:12 [IST]
English summary
Mavox Honcho Helmet Launched At Rs.999 With Bluetooth Tech. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+