கொரோனாவிற்கு எதிராக போராடும் மலிவு விலை மாஸ்க்.. எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!
கொரோனாவிற்கு எதிராக போராடும் வகையில் கண்ணாடி முக மாஸ்க்கினை பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தற்போது உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, சுய பாதுகாப்பு என்பது அத்தியாவசியங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதையேதான் மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை மீறுவோர்மீது அபராதம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு வைரசின் அதி-தீவிரமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த வைரஸ் மூக்கு, வாய், கண்கள் ஆகியவற்றின் வாயிலாக மனிதனுக்குள் பரவி சுவாச மண்டலங்களைக் குறி வைத்து தாக்குகின்றது.
குறிப்பாக, வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் தும்புவது மற்றும் இரும்புவது போன்ற செயல்களினால் வெளிவரும் நுண் குமிழ்களின் மூலமே, மிக எளிதில் பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றது கொரோனா.

இதனாலயே மக்களை வெளியில் வராத வண்ணம் தடுக்கும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தி வருகின்றது. அவ்வாறு, வெளியில் வரும்போதுகூட முக கவசம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு அம்சங்களை அணிந்தவாறு வெளியில் வருமாறு கூறப்பட்டு வருகின்றது.

தற்போது, இந்த பாதுகாப்பு கவசங்களின் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகின்றது. சில இடங்களில் முகமூடிகள் மற்றும் கிருமி நாசினிகள் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழும்பிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், முக கவச தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் கண்ணாடி முக கவசத்தை பிரபல மாவோக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனம் ஓர் ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். தற்போதைய சந்தையின் தேவையை உணர்ந்து கண்ணாடி மாஸ்க்குகளை அது தயாரித்துள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்ள் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் இந்த மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வைரஸ் தொற்றைத் தவிர்க்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருப்பதாக மாவோக்ஸ் தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் மாஸ்க்குகளுக்கு போட்டியாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இந்த மாஸ்க்குகள் இருக்கின்றன.
அதாவது, இதனை ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கிய எறிய வேண்டிய அவசியம் இல்லை. இதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே, மாஸ்க்கின் தனி சிறப்பம்சம் ஆகும்.

இதனால், தினந்தோறும் புதிய மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே இதனை மறு நாள் பயன்படுத்த வேண்டும் என மாவோக்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு, சுத்தம் செய்து பயன்படுத்தினாலும் இதனை நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்த முடியும் என்ற உறுதியையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும், இது இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில், மலிவான விலையில் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக மாவோக்ஸ் தெரிவிக்கின்றது.
நீண்ட கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு பாலிகார்பனேட் விசர் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இது கீரல்கள் மற்றும் விரிசல்கள் போன்றவற்றை தாங்க உதவும்.

தொடர்ந்து, தலையின் அளவிற்கு ஏற்பவாறு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளகூடிய அம்சமும் இந்த மாஸ்க்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி, அதிக ஒலி காரணமாக கண்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க யுவி பூச்சும் அதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, தலைவலி, கண் எரிச்சல், பார்வை கோளாறு உள்ளிட்டவற்றை இந்த மாஸ்க் வழங்காது. முக்கியமாக இது ஐஎஸ்ஐ தரம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

முழு முகத்தையும் மூடி மறைக்கின்ற வகையில் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த மாஸ்க் பக்கவாட்டு பகுதியையும் வைரஸ் தொற்றிடமிருந்து காக்கும் வகையில் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது.
அதேசமயம், இந்த மாஸ்க்கை தூய்மைப் படுத்த அந்நிறுவனம் சில டிப்ஸ்களை வழங்கியிருக்கின்றது.

அதாவது, சோப்பு கரைசல் அல்லது ஐசோப்ரொபைல் ஆல்கஹால் போன்ற கிருமிநாசினி கரைசலில் குறைந்தபட்சம் 5 நிமிடங்களுக்கு ஊர வைக்க வேண்டும். இததைத்தொடர்ந்து, துணி அல்லது காகித துண்டைக் கொண்டு அதனை சுத்தம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு, செய்தால், அந்த மாஸ்க்கில் கிருமி தொற்று ஏற்பட்டிருந்தாலும், அது நம்மை தாக்கது.


Click it and Unblock the Notifications








