அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!
இந்தியாவின் முதல் மெக்லாரன் 750எஸ் சூப்பர்கார் புக் செய்த கஸ்டமருக்கு டெலிவிரி செய்யப்பட்டு உள்ளது. யார் அந்த கஸ்டமர்? எங்கு உள்ளார்? அவர் வாங்கியுள்ள இந்த மெக்லாரன் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் சூப்பர் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் விலையுயர்ந்த சூப்பர் கார்களை வாங்குவதை பலமுறை செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், மெக்லாரன் காரை வாங்கியவர்களை பற்றி அதிகளவில் பார்த்தது இல்லை.

ஏனெனில், இந்தியாவில் மெக்லாரன் நிறுவனம் கடந்த 1 வருடமாக தான் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முன் வரையில், மெக்லாரன் காரை வாங்க வேண்டும் என்றால் வெளிநாட்டில் வாங்கி, அதன்பின் பிரத்யேகமாக இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டி இருந்தது. அவ்வாறு மெக்லாரன் வாங்குவதை மிகவும் செலவுமிகுந்த வேலையாக இருந்தது.
இதனையடுத்தே, மெக்லாரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது. இருப்பினும், மெக்லாரன் கார்கள் இப்போதும் வெளிநாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின் அவை கப்பல் மூலமாக மும்பைக்கு கொண்டுவரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுகின்றன. முன்பு இந்த வேலைகளை காரை வாங்கும் ஓனர்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
ஆனால், தற்போது இந்த வேலைகளை மெக்லாரன் நிறுவனம் செய்துக் கொடுக்கிறது. இதன் காரணமாக, மெக்லாரன் கார்களை வாங்கும்போது கஸ்டமர்களுக்கு சில இலட்சங்கள் மிச்சம் ஆகிறது. இந்தியாவில் தற்போதைக்கு மும்பையில் மட்டுமே மெக்லாரன் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம் உள்ளது. இங்கிருந்து கடந்த 1 வருடத்தில் பல கோடீஸ்வரர்களுக்கு மெக்லாரன் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் தற்போது, விலையுயர்ந்த மெக்லாரன் 750எஸ் கார் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டெலிவிரி செய்யப்பட்ட முதல் மெக்லாரன் 750எஸ் கார் இதுவென கூறப்படுகிறது. இந்த டெலிவிரியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் வலது கை டிரைவ் கொண்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இடது கை டிரைவ் கொண்ட வாகனங்கள் இயக்கப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போது மும்பையில் டெலிவிரி செய்யப்பட்டுள்ள இந்த மெக்லாரன் கார் இடது கை டிரைவ் கொண்ட கார் ஆகும். அதாவது, காரினும் ஸ்டேரிங் சக்கரம் இடது பக்கத்தில் உள்ளது.
ஆகையால் இந்த கார் மெக்லாரன் நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் டெலிவிரி செய்யப்பட்டு இருக்காது என கூறப்படுகிறது. இவ்வாறு லக்சரி கார்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதற்கு என்றே கார்னெட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அவ்வாறு பிரைவேட்டாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் கார்களில் தான் ஸ்டேரிங் சக்கரம் அந்த நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இடது கை டிரைவ் கொண்ட கார்களை ஓட்டுவதற்கு நம் இந்தியாவில் முற்றிலுமாக தடை ஒன்றும் கிடையாது. சில கட்டணங்களை செலுத்தினால் ஓட்டலாம். ஆனால், நாட்டின் மொத்த போக்குவரத்து கட்டமைப்பும் வலது கை டிரைவ் வாகனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் சூழலில், நீங்கள் மட்டும் இடது கை டிரைவ் வாகனங்களை பயன்படுத்துவது சற்று சிரமமான விஷயமாகும். இவ்வளவு விலையுயர்ந்த காரில் ஸ்டேரிங் சக்கரத்தை மாற்றுவது இன்னும் செலவுமிக்கதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








