இந்த காரை விற்க இந்தியாவிலேயே ஒரேயொரு ஷோரூம் தான் இருக்கு! கொஞ்ச காலத்திலேயே அபரித வளர்ச்சியை கண்ட தொழிலதிபர்!

மெக்லாரன் (McLaren) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நிச்சயமாக நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஆனால், அதனை நிஜமாக்குபவர்கள் யாரென்று பார்த்தால், பெரும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு இந்திய தொழிலதிபர் தனது பிறந்த நாளை முன்னிட்டு விலையுயர்ந்த மெக்லாரான் 750எஸ் (750S) காரை வாங்கி உள்ளார்.

காரை பற்றி பார்ப்பதற்கு முன்னர், இந்த இந்திய தொழிலதிபரை பற்றி பார்ப்போம். பிறந்த நாளை முன்னிட்டு விலையுயர்ந்த மெக்லாரன் 750எஸ் காரை வாங்கியுள்ள தொழிலதிபரின் பெயர், ரோகித் போடா (Rohit Boda) ஆகும். ஜே.பி போடா க்ரூப்பின் நிர்வாக இயக்குனராக ரோகித் போடா உள்ளார்.

indian businessman rohit boda bought mclaren

இந்த ஜேபி போடா க்ரூப் (J.B Boda Group) ஆனது ஓர் மறுகாப்பீட்டு தரகர் நிறுவனம் ஆகும். இத்தகைய நிறுவனத்தின் உயர் அதிகார பதவியில் இருக்கும் ரோகித் போடா, தனது பிறந்த நாளில் மனைவி மற்றும் குடும்பத்தினர் உடன் மெக்லாரன் கார் ஷோரூமுக்கு சென்று, ஏற்கனவே முன்பதிவு (Booking) செய்து வைத்திருந்த பிராண்ட்-நியூ 750எஸ் காரை டெலிவிரி (Delivery) பெற்றுள்ளார்.

தொழிலதிபர் ரோகித் போடா வாங்கி இருப்பது எலைட் ஐஸ் சில்வர் என்கிற மிகவும் அரிதான நிறத்திலான மெக்லாரன் 750எஸ் காரை ஆகும். இந்தியாவில் மும்பையில் மட்டுமே ஒரேயொரு மெக்லாரன் டீலர்ஷிப் ஷோரும் (Dealership Showroom) உள்ளது. நிச்சயமாக அதன் வழியாகவே தனது புத்தம் புதிய 750எஸ் காரை இந்த தொழிலதிபர் வாங்கி இருப்பார்.

indian businessman rohit boda bought mclaren

ஒரேயொரு ஷோரூம் மட்டுமே இந்தியாவில் இருப்பதால், இந்த மும்பை மெக்லாரன் ஷோரூமில் விற்பனை சிறப்பாக உள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் மூன்று மெக்லாரன் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் சூப்பர் கார் நிறுவனமான மெக்லாரன் இந்தியாவில் தற்சமயம் மொத்தம் ஐந்து கார்களை விற்பனை செய்கிறது.

அர்டுரா, அர்டுரா ஸ்பைடர், 750எஸ், 750எஸ் ஸ்பைடர் மற்றும் ஜிடிஎஸ் என்பன அந்த ஐந்து சூப்பர் கார்களாகும். இதில், தொழிலதிபர் ரோகித் போடா வாங்கி இருக்கும் 750எஸ் காரின் எக்ஸ்-ஷோரும் விலை தற்சமயம் ரூ.5.91 கோடியாக உள்ளது. மேற்கூரையை தேவைக்கேற்ப நீக்கி பயன்படுத்தக்கூடிய கன்வெர்டபிள் காராக மெக்லாரன் 750எஸ் விளங்குகிறது.

indian businessman rohit boda bought mclaren

ஸ்டாண்டர்ட், ரேசிங் இன்ஸ்பிரைட், எலைட் மற்றும் MSO என நான்கு விதமான கலர் பிளேட்களில் இந்த கன்வெர்டபிள் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ரோகித் போடா வாங்கி இருப்பது எலைட் கலர் பிளேட் ஆகும். வெளிப்பக்கத்தை போன்று 750எஸ் காருக்கு உள்ளேயும் அல்காண்டரா, பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டெக்லக்ஸ் என மூன்று விதமான கலர் ஆப்ஷன்களை மெக்லாரன் நிறுவனம் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெக்லாரன் 750எஸ் காரின் உட்புறத்தை எந்த கலர் ஆப்ஷனில் ரோகித் போடா வாங்கி உள்ளார் என்பது தெரியவில்லை. ஏனெனில், அவரது புதிய மெக்லாரான் காரின் உட்புற கேபின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எப்படியிருந்தாலும், அதிக மதிப்பு கொண்ட கலர் ஆப்ஷனை தான் தேர்வு செய்திருப்பார். இருப்பினும், நம்ம ஊர் சாலைகளுக்கு தாழ்வான உடலமைப்பை கொண்ட மெக்லாரன் 750எஸ் போன்ற கார்கள் எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும் என்பது தெரியவில்லை.

Source: Cartoq

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 11:06 [IST]
English summary
Mclaren 750s supercar bought by indian bussinessman rohit boda
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X