இந்த காசு படுத்தும் பாடு இருக்கே!! ரூ.25 கோடிக்கு காரை வாங்கி, யூஸ் பண்ண முடியல... இளம் தொழிலதிபரின் வேதனை!

ஆஸ்திரேலியாவில் இளம் தொழிற்நுட்ப தொழிலதிபர் ஒருவர் தனது விலையுயர்ந்த மெக்லாரன் சென்னா ஜிடிஆர் (McLaren Senna GTR) ஸ்போர்ட்ஸ் காரை தான் வசிக்கும் கட்டிடத்தின் 57வது மாடிக்கு கிரேன் மூலம் கொண்டு சென்றுள்ளார். யார் இந்த இளம் தொழிலதிபர்? எதற்காக இவ்வாறு செய்துள்ளார்? என்பது குறித்த கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

பணம் சந்தோஷத்தை தராது என்பார்கள், ஆனால் அவர்களிடம் மெக்லாரன் கார் ஒன்றை வாங்கும் அளவிற்கு காசை கொடுத்தால் தானாக அவர்களது முகம் மலர்ந்துவிடும். இன்றைய உலகில் பணம் படுத்தும் பாடு அவ்வாறு உள்ளது. அப்படித்தான் இங்கு ஒருவர் சாலையில் ஓட்ட வேண்டிய காரை 57 மாடி உயரத்திற்கு கொண்டு சென்று பத்திரமாக தனது வீட்டினுள் வைத்து கொண்டுள்ளார்.

mclaren senna gtr lifted to 57th floor apartment

ஆஸ்திரேலியாவில் இளம் டைகூனாக விளங்கும் இந்த நபரது பெயர், அட்ரியன் போர்டெல்லி ஆகும். 34 வயதான இவர் தொழிற்நுட்ப தொழிலதிபராக விளங்குகிறார். ஆஸ்திரேலியாவில் இவர் மெல்போர்ன் நகரத்தில் ஓர் மிக பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் 57வது மாடியில் குடியிருக்கிறார். சமீபத்தில் இவர் மெக்லாரன் சென்னா ஜிடிஆர் என்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 30 இலட்ச டாலர்கள். இந்திய ரூபாயில் ஏறக்குறைய சுமார் ரூ.25 கோடி ஆகும்.

இவ்வளவு விலைமிக்க காரை தனது அப்பார்ட்மெண்ட்டிற்கு கொண்டுச் செல்ல விரும்பிய அட்ரியன் இதற்காக ஒரு கிரேனை வரவழைத்து, அதன் கொக்கியில் தனது புத்தம் புதிய மெக்லாரன் காரை கட்டி தான் வசிக்கும் கட்டிடத்தின் 57வது மாடிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்படியென்றால் எதற்கு இந்த காரை இவ்வளவு காசு கொடுத்து வாங்குனீர்கள்? என அதிர்ச்சி உடன் கேட்க தோன்றுகிறது அல்லவா... இதற்கு அட்ரியன் பதிலளித்துள்ளார்.

mclaren senna gtr lifted to 57th floor apartment

அவர் கூறியதாவது, "இது ஓய்வறையில் உட்கார போகிறது. நீங்கள் எனது அப்பார்ட்மெண்ட்டிற்குள் செல்லும்போது பார்க்கும் முதல் விஷயமாக இது இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். மேலும், நீங்கள் காரை பார்க்கிறீர்கள் மற்றும் முழு மெல்போர்னையும்" என்றார். அதாவது இந்த காரை ஓட்ட நான் வாங்கவில்லை, வீட்டில் அலங்கார பொருளாகவே பயன்படுத்த உள்ளேன் என்பதைதான் அட்ரியன் இவ்வாறு கூறுகிறார்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அட்ரியன் இந்த மெக்லாரன் காரை எப்போதோ வாங்கிவிட்டார். ஆனால் ஆஸ்திரேலிய நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளினால் இந்த ஸ்போர்ட்ஸ் காரை பொது சாலையில் இயக்க முடியாமல், இவ்வாறு 57வது மாடியில் இருக்கும் வீட்டிற்குள் அலங்கார பொருளாக கொண்டுவந்துள்ளார், அட்ரியன். "இந்த காரை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்ய முடியாது. மேலும் இது தூசிகளை தனது பின்பக்கத்தில் சேர்த்து கொள்ளும், நான் வசிக்கும் பகுதி அப்படித்தான் உள்ளது" என்கிறார் அட்ரியன்.

mclaren senna gtr lifted to 57th floor apartment

காரை கிரேன் மூலமாக கொண்டுவருவதற்காக 57வது மாடியில் உள்ள தனது வீட்டில் சில பல மாற்றங்களை அட்ரியன் செய்துள்ளார். குறிப்பாக, கீழே இருந்து மேலே கொண்டுவரப்படும் காரை வைப்பதற்காக தற்காலிக பிளாட்ஃபாரம் ஒன்று கட்டிடத்தில் இருந்து வெளியே உருவாக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலமாக அந்த பிளாட்ஃபாரத்தில் கார் வைக்கப்பட்ட பின்னர், கார் அங்கு இருந்து வீட்டிற்குள் ஓட்டி செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்த படங்களை அட்ரியன் போர்டெல்லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆஸ்திரேலியா போன்ற நாட்டிற்கு இவ்வாறான ஸ்போர்ட்ஸ் கார் ஏற்றதாக இருக்காது. ஏனெனில் ஆஸ்திரேலியா வெப்பம் & தூசி மிகுந்த நாடு. அப்படியென்றால், இந்த காரை எதற்காக அட்ரியன் வாங்கினார் என்பது தெரியவில்லை. நிச்சயமாக அவர் கூறுவதுபோல், வீட்டிற்குள் நிறுத்துவதற்காக வாங்கி இருக்க மாட்டார். வேறு வழியில்லாத காரணத்தினாலேயே தற்போது 57வது மாடியில் உள்ள வீட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 11:30 [IST]
English summary
Mclaren senna gtr sports car lifted to 57th floor apartment in australia
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X