மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

கருப்பு நிற மெக்லாரன் 720எஸ் கார் ஒன்று இங்கிலாந்தில் கோர விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

உலகம் முழுவதிலும் சாலை விபத்துகள் அவ்வப்போது நடைபெறக்கூடியவை தான். நாம் இந்த செய்தியை படிக்கின்ற நேரத்தில் கூட உலகின் ஏதேனும் ஒரு மூலையில் விபத்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதில் சில விபத்துகள் மட்டுமே பெரியதாக பேசப்படும்.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

குறிப்பாக சூப்பர் கார்களினால் ஏற்படும் விபத்துகள் தனி கவனத்தை பெறும். அவ்வாறான சூப்பர் கார் விபத்தினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த விபத்தின் முக்கிய ஹைலைட் என்னவென்றால் விபத்தில் சிக்கிய இந்த மெக்லாரன் சூப்பர் கார் சுமார் 321kmph வேகத்தில் அந்த சமயத்தில் இயக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

இங்கிலாந்தில் க்ரான்ச் மூர் என்ற பகுதியில் அரங்கேறியுள்ள இந்த விபத்து, 1.7 கோடி ரூபாய் மதிப்புள்ள மெக்லாரன் 720எஸ் சூப்பர்கார் மணிக்கு 321கிமீ வேகத்தில், முன்னே சென்று கொண்டிருந்த ஃபோர்டு ஃபோக்கஸ் காரை முந்த முயன்ற போது நிகழ்ந்துள்ளது.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

Image Courtesy: WYP_RPU/Twitter

இதில் ஃபோர்டு ஃபோக்கஸ் என்ற ஹேட்ச்பேக் காருக்கு தான் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மெக்லாரன் காருடன் பக்கவாட்டில் மோதி கொண்ட இந்த ஃபோர்டு கார் அதன்பின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி, அருகே இருந்த புல்வெளியில் தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

இருப்பினும் இந்த ஃபோர்டு காரில் பயணித்தவர்கள் எவருக்கும் பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை. இதில் 6 மாத குழந்தையும் அடங்கும். குழந்தை உள்பட பயணிகளுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. அதேபோல் மெக்லாரன் காரில் வந்தவர்களுக்கும் பெரிதாக எந்த காயமும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

இதுகுறித்து மெக்லாரன் 720எஸ் காரின் ஓட்டுனரிடம் போலீஸார் விசாரித்ததில், தனது கவனக்குறைவால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஒப்பு கொண்டுள்ளார். மற்றப்படி இந்த மெக்லாரன் காரினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, முழுக்க முழுக்க அதனை ஓட்டி வந்த ஓட்டுனர் மீது தான் தவறு உள்ளது.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

உலகின் தற்போதைய பிரபலமான சூப்பர் கார்களுள் மெக்லாரன் 720எஸ் மாடலுக்கும் தவிர்க்க முடியாத ஓர் இடம் உள்ளது. இதனால் தான் இந்திய சந்தையில் நுழைய ஆயத்தமாகி வரும் மெக்லாரன் நிறுவனம் முதலாவதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நான்கு கார்களுள் 720எஸ் மாடலும் ஒன்றாகும்.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளிலேயே எட்டிவிடக்கூடிய இந்த மெக்லாரன் சூப்பர் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 341கிமீ வேகம் வரையில் இயக்க முடியும். இதில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

மணிக்கு 321கிமீ வேகத்தில் வந்த மெக்லாரன் கார்!! கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த கோர விபத்து!

இரட்டை-சுருள் டர்போசார்ஜர்களை கொண்ட இந்த என்ஜினின் மூலம் 710 எச்பி மற்றும் 770 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இந்த என்ஜின் உடன் விரைவாக கியரை மாற்றக்கூடிய 7-ஸ்பீடு தடையற்ற ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
McLaren tries to overtake at 320 kmph, ends up mangled; baby escapes unhurt.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X