ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

ஆட்டோமேட்டிக் கார்களை பழுது பார்க்கும்போது எந்த அளவிற்கு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விபத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

ஒரு கார் ஆனது நூற்றுக்கணக்கான பாகங்களால் உருவாக்கப்படுகிறது. எரிபொருள் என்ஜின் கார்களில் இருந்து மக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வந்தாலும், அவற்றில் பயன்படுத்தப்படும் பவர் ஸ்டேரிங் சக்கரம், சஸ்பென்ஷன் & பிரேக்கிங் அமைப்புகள் அனைத்தும் ஒன்றே. காலம் மாற மாற இந்த அமைப்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

இதன்படி, தற்போதைய மாடர்ன் கார்களில் ஓட்டுனர் உதவி அம்சங்களும் வந்துவிட்டன. அதேபோல் கியர்பாக்ஸை பொறுத்தவரையில், மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட கார்களுக்கு இணையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரங்களில் வசிப்போர் எளிமையான கார் பயன்பாட்டிற்காக ஆட்டோமேட்டிக் கார்களையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் ஆட்டோமேட்டிக் கார்களில் ஓட்டுனர் அவ்வப்போது க்ளட்ச் பெடலை அழுத்தவும், கியர் லிவரை மாற்றவும் தேவை இருக்காது. ஆனால் சில சமயங்களில் இத்தகைய சவுகரியங்களே ஆட்டோமேட்டிக் கார்களை பயன்படுத்துவதில் பின்னடைவாக அமைந்துவிடுகின்றன.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை இதற்குமுன் பார்த்துள்ளோம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றில், முதல்முறையாக ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்துபவர்களினாலேயே அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. ஆனால் இங்கு ஒரு மெக்கானிக், கார் ஒன்றை பழுது பார்க்கும்போது விபத்தில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

இந்த சம்பவத்தில் தொடர்பான கார் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார் என கூறப்படுகிறது. வீடியோவில், காருக்குள் இருந்து வெளிவரும் மெக்கானிக் பின்னர் காரின் முன்பக்க பொனெட் பகுதியை திறக்கிறார். பிறகு மீண்டும் கேபினுக்குள் செல்லும் அவர், காரை ஸ்டார்ட் செய்வதுபோல் தெரிகிறது. ஆனால் அந்த சமயத்தில் காரில் எந்தவொரு நகர்வும் இல்லை.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

ஆனால் அதன்பின் அவர் மீண்டும் என்ஜின் பகுதிக்கு வந்து சில திருகல்களை செய்தவுடன் கார் தன்னிச்சையாக முன்னோக்கி வேகமாக நகர ஆரம்பிக்கிறது. இதனை அந்த மெக்கானிக் சிறிதும் எதிர்பார்க்கவில்லை போலும். அவர் சூதாரித்து நகர்வதற்குள், கார் அவரை நோக்கி பாய ஆரம்பித்துவிட்டது. இதில் நிலை தடுமாறி மெக்கானிக் கீழே விழ, அவரை தள்ளிக்கொண்டு சென்ற கார் எதிரே இருந்த இரும்பு கதவில் மோதி நிற்கிறது.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

அந்த சமயத்தில், கார் மற்றும் இரும்பு கதவிற்கு இடையில் மெக்கானிக் சிக்கிக்கொண்டதை மேலுள்ள வீடியோவில் காணலாம். அதன்பின் அருகில் இருந்தவர்கள் மெக்கானிக்கை காப்பாற்றும் முயற்சியில் இரும்பு கதவை திறக்கவும், காரை பின்னோக்கி வர வைக்கவும் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கானிக்கிற்கு என்ன ஆனது? எத்தகைய காயங்கள் ஏற்பட்டன? என்பது தெரியவில்லை.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

அதேபோல், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பதையும் உறுதியாக கூற முடியவில்லை. காரில் இடதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் சிசிடிவி கேமிராவில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து பார்க்கும்போது, இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மெக்கானிக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

இந்த சிசிடிவி காட்சிகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர்கள், "பழுது பார்ப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு தானியங்கி வாகனம் பழுதாகிவிட்டால், அதன்முன் நிற்கவே கூடாது" என குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவினை கண்ட பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது, ஒரு சிலர் இது ஆட்டோமேட்டிக் காரே கிடையாது, மேனுவல் காராக இருக்கலாம் என கூறுகின்றனர்.

ஆட்டோமேட்டிக் காரை பழுது பார்க்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ஒரு நொடியில் எல்லாம் முடிஞ்சிரும்!

அதில் ஒருவர், "கியர் லிவர் நியூட்ரலில் இல்லையென்றாலும் அல்லது நீங்கள் ட்ரைவ் (அ) ரிவர்ஸ் மோடில் வைத்து ஸ்டார்ட் செய்தாலும் ஆட்டோமேட்டிக் கார்கள் ஸ்டார்ட் ஆகாது. பிரேக் அழுத்தினால் மட்டுமே ஸ்டார்ட் ஆகும். இப்படிதான் எனது கார் செயல்படுகிறது" என கூறியுள்ளார். ஆதலால் இந்த சம்பவத்தில் விபத்திற்கான காரணம் என்ன என்பதை உறுதியாக கூற இயவில்லை.

Article Published On: Wednesday, September 14, 2022, 17:06 [IST]
English summary
Mechanic injured by automatic car that moves itself video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+