ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!
கார் காதலர் என்ற வார்த்தையை இனி பிரயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும் போலிருக்கிறது. ஆம், இந்த அமெரிக்கர் சொல்வதை கேட்டால், அவ்வாறே தோன்றுகிறது.
ஆம், இதுவரை 1,000 கார்களுடன் உறவு கொண்டிருப்பதாக இந்த அமெரிக்கர் பெருமிதம் கூறுகிறார். மேலும், தனது 15 வயதில் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரிடம் கற்பை இழந்ததாகவும் கூறுகிறார்.

அமெரிக்கர்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் எட்வர்டு ஸ்மித். தற்போது 64 வயது ஆகிறது. இவருக்கு சிறு வயது முதலே கார்கள் மீது தீராத காதல் ஏற்பட்டிருக்கிறது. அவரது கார் காதல் விபரீதமானதாக இருந்துள்ளது.

மெக்காபில்
கார், ரயில், விமானம் போன்ற மோட்டார் வாகனங்கள் மீது ஏற்படும் காதலை தாண்டி பாலியல் ரீதியாக ஏற்படும் அதீத மோகம் மெக்காபிலே என்று அழைக்கப்படுகிறது. இந்த உணர்வு ஆட்கொண்டவர்களில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்தான் இந்த எட்வர்டு ஸ்மித்.

விபரீதம்
தனது 15 வயதில் அந்த விபரீத உணர்வு பீறிட்டதாக நினைவு கூர்கிறார் எட்வர்டு ஸ்மித். அதாவது, அவர் மிகவும் நேசித்த ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காருடன் உறவு கொண்டதாக குறிப்பிடுகிறார்.

முதல் காதல்
தனது 13 வயதில் செவர்லே கார்வெட் காரை பார்த்து காதல் வயப்பட்டாதாகவும், அதன் அழகில் மயங்கியதாகவும், அதுவே தன் முதல் காதல் என்று குறிப்பிடுகிறார்.

வெனிலா
தனது ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரை வெனிலா என்ற செல்ல பெயரிட்டு அழைப்பதுடன், முதல் காதல், முதல் முத்தம் போன்று முதல் உறவு கொண்ட கார் என்பதாலேயே இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருவதுடன், அதனை கண்ணும் கருத்துமாக கூடவே வைத்து கவனித்து வருகிறார்.

ஆயிரமாவது சாதனை
சில ஆண்டுகளுக்க முன் தனது கார் காதல் குறித்த தகவல்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர் தெரிவித்தபோது, இதுவரை 1,000 கார்களுடன் உறவு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

டெஸ்ட் டிரைவ்
டெஸ்ட் டிரைவ் செய்வது போன்று சில கார்களை இரவு நேரத்தில் எடுத்துச் சென்று இருளான இடங்களில் வைத்து உறவு கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஈர்ப்பு இல்லை
சிறு வயது முதலே ஆண், பெண் என இருபாலர் மீதும் பாலியல் ரிதீயான ஈர்ப்பே இல்லை என்றும், அதேநேரத்தில் கார்களை கண்டால் எனது மனம் காதல் கொண்டு விடும் என்றும் குறிப்பிடுகிறார். குறிப்பாக, அழகான முன்புறமும், பின்புறம் கொண்ட கார்கள் என்னை எளிதாக வசியம் செய்கிறது என்று தெரிவிக்கிறார்.

காதல் கவிதை
காதலிக்கு கவிதை எழுதுவது போல கார்களை வர்ணித்து கவிதைகளும் எழுதியிருப்பதாக எட்வர்டு குறிப்பிடுகிறார். கார்களின் அழகை வர்ணிப்பதும் அலாதி சுகம் என்கிறார். காதலியை கண்டு பாடல் பாடுவது போன்று கார்களை பார்த்து அவ்வப்போது பாடி மகிழ்வதாகவும் தெரிவிக்கிறார்.

டிவி நிகழ்ச்சிகள்
டிவி நிகழ்ச்சிகளில் வரும் கார் மற்றும் வாகன நிகழ்ச்சிகள் தன்னை வெகுவாக ஈர்த்ததுடன், மனதில் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். கார்களை தாண்டி, 1980ல் வந்த ஏர்வோல்ஃப் தொலைக்காட்சி தொடரில் வந்த ஹெலிகாப்டர் மீதும் தீராத காதல் ஏற்பட்டது. அது ஒரு புதுவித சுகானுபவம் என்கிறார் எட்வர்டு.

அதிக முறை
ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காருக்கு அடுத்து, சினமான் என்று அவர் செல்ல பெயரிட்டு அழைக1973ம் ஆண்டு ஒபல் ஜிடி கார், 1993ம் ஆண்டு ஃபோர்டு பிக்கப் டிரக்குடன் அதிக முறை உறவு கொண்டதாக கூறுகிறார்.

உஷாரய்யா, உஷார்
இவரது உண்மைகளை கேட்ட பலருக்கு அதிர்ச்சி. ஏனெனில், கார் ஷோரூம் மட்டுமின்றி, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுடன் உறவு கொண்டிருப்பதாக இவர் தெரிவித்தார். இது வாஷிங்டன் வாழ் கார் உரிமையாளர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெரியலையே
ஆனால், தான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதனை செய்யவில்லை. சிறு வயதிலிருந்து ஏற்பட்ட அந்த உணர்வு, பின்னாளில் அது இவ்வாறு அதீதமாக மாறிவிட்டது என்று கூறுகிறார். அந்த உணர்வு என்னை எப்படி ஆட்கொண்டது என்று என்னால் விளக்க முடியாது என்று தெரிவித்தார்.
Source: Mirror.co.uk


Click it and Unblock the Notifications