விஜய்க்கு ஜோடியா நடிச்சிட்டு சாதாரண கார்ல போறாங்க! மாஸ்க் போட்டு முகத்த மறச்சும் யார்னு கண்டுபிடித்த ரசிகர்கள்

திரைப்பட நடிகைகள் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். குறிப்பாக விமான நிலையங்களுக்கு வரும்போதும், விமான நிலையங்களில் இருந்து வீடு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும்போதும், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதை நாம் அடிக்கடி பார்க்கலாம். விமான நிலையங்கள் என்பதால், அப்போது பொதுமக்கள் உள்ளிட்ட நபர்களால் எடுக்கப்படும் வீடியோக்கள் வைரலாக பரவும். இந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நடிகை ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் நாங்கள் மேலே குறிப்பிட்டதை போல், அவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை எல்லாம் பயன்படுத்தவில்லை.

Meenaakshi Chaudhary Spotted In Toyota Innova Crysta

மாறாக அவர் பயன்படுத்தியது மிகவும் எளிமையான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகும். இது சற்று விலை உயர்ந்த கார்தான் என்றாலும் கூட, திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில் மிகவும் எளிமையான ஒன்றுதான். தற்போதைய நிலையில் 19.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபக்கம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 26.82 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த வீடியோவை நீங்கள் நன்றாக கவனித்தால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் ஏறி சென்ற நடிகை மீனாட்சி சௌத்ரி (Meenaakshi Chaudhary) என்பது தெரியும்.

Meenaakshi Chaudhary

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். விஜய் (Vijay) நடிப்பில் கடைசியாக வெளியான கோட் (GOAT) மற்றும் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் (Lucky Baskhar) உள்ளிட்ட திரைப்படங்களில் எல்லாம் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

தற்போது வைரலாக பரவி வரும் அவரது வீடியோ ஐதராபாத் விமான நிலையத்தில் (Hyderabad Airport) எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அவர் பயன்படுத்திய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அனேகமாக டாக்ஸியாக இருக்கலாம் என தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இந்தியாவில் அதிகளவில் டாக்ஸிக்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விமான நிலையங்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸிக்களை அதிகளவில் காணலாம். ஆனால் இந்த வீடியோவில் நம்பர் பிளேட் தெரியாத காரணத்தால், அது டாக்ஸியா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இந்த காரில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த ஒரே ஒரு இன்ஜின்/கியர் பாக்ஸ் காம்பினேஷனை மட்டுமே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கொண்டுள்ளது. இருப்பினும் நம்பகத்தன்மை வாய்ந்த கார் என்பதால், இதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மீனாட்சி சௌத்ரி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற மிகவும் எளிமையான கார்களில் பயணம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக அவர் ஆட்டோ ரிக்ஸாவில் கூட பயணம் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 20:13 [IST]
English summary
Meenaakshi chaudhary spotted in toyota innova crysta viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+