இந்தியாவின் ஃபாஸ்ட்டஸ்ட் மெட்ரோ ரயிலை பற்றிய இந்த ஆச்சரியமான தகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் ஃபாஸ்ட்டஸ்ட் மெட்ரோ ரயில் சேவையாக மீரட் மெட்ரோ (Meerut Metro) ரயில் அமைய இருக்கின்றது. இந்த ரயிலையே என்சிஆர்டிசி (NCRTC) அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ரயில் வேற லெவல் டிராவல் அனுபவத்தை வழங்கும் வகையில் தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ரயிலை வெளிக்காட்டக் கூடிய படங்களை என்ஆர்சிடிசி வெளியீடு செய்து இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பான வந்தே மெட்ரோ (Vande Metro) ரயில் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ரயிலும் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
நமோ பாரத் ரேபிட் ரயில் (Namo Bharat Rapid Rail) என்கிற பெயரிலேயே வந்தே மெட்ரோ ரயில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மினி வெர்ஷனாகும். தற்போது என்சிஆர்டிசி-ஆல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மீரட் மெட்ரோ ரயிலின் சிறப்புகள், வேகம் மற்றும் எந்த ரூட்டில் இயக்கப்பட இருக்கின்றது என்பதுபற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

சொகுசு மற்றும் கம்ஃபோர்ட்டான பயண அனுபவம் கிடைக்கும்: இந்த ரயிலை முழுக்க முழுக்க ஏசி வசதிக் கொண்டதாகவே தயார் செய்திருக்கின்றனர். இத்துடன், இரண்டு பக்கமும் 2பேர் அமருகின்ற வகையிலேயே அதன் இருக்கை தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், அந்த இருக்கைகள் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்பவும் தயார் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், ஒட்டுமொத்தமாக 700பயணிகள் இந்த ரயில் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். ஆனால், 173பேரால் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியுமாம்.
எந்த ரூட்டில் இந்த ரயில் இயக்கப்பட இருக்கின்றது? மீரட் மெட்ரோ ரயில் 23கிமீ தூர இடைவெளியை வெறும் 30 நிமிடங்களில் கடந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஒட்டுமொத்தமாக 13 நிலையங்களிலும் அது நின்று செல்லும். மீரட் தெற்கு, பரட்பூர், ரித்தன உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்களிலும் அது நின்று செல்லும். எனவே மோடிபுறம் மற்றும் மீரட் சென்ட்ரல் இடையே தினசரி பயணத்தை மேற்கொள்வோருக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

மீரட் மெட்ரோ ரயிலின் அதி-வேக திறன்: இந்தியாவிலேயே அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட மெட்ரோ ரயிலாகவே இது தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 135 கிமீ ஆகும். ஆனால், இதனை அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்கவே என்ஆர்சிடிசி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது.
நவீன கால அம்சங்கள்: நவீன கால மக்களை கவரும் பொருட்டு இந்த ரயிலில் நவீன கால சிறப்பம்சங்களும் மிக அதிகமாக வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ரூட் மற்றும் நிறுத்தத்தின் பெயரைக் காட்டக் கூடிய மேப், சிசிடிவி கேமிரா, கிரிப்பான கைப் பிடிகள், லக்கேஜ் ரேக் உள்ளிட்டவை இதில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
பாதுகாப்பு அம்சங்கள்: பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ரயிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அிதில் மிக முக்கியமானதாக அலாரம், டால்க்-பேக் தொடர்பு சிஸ்டம், அவசரகால தொடர்பு சிஸ்டம், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் வீல் சேர்களுக்கான பிரத்யேக இட வசதி ஆகியவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்சிஆர்டிசி இத்தகைய சூப்பரான மெட்ரோ ரயிலையே தற்போது தயார் செய்திருக்கின்றது. விரைவில் இந்த ரயில் மக்கள் சேவைக்காக இணைக்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த ரயிலின் மீதான வரவேற்பு இப்போதே மக்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








