11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

மூதாட்டி ஒருவர் 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் வைத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

வாகனங்களை ஓட்டுவதில் பலருக்கும் பேரார்வம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ராதாமணி (Radhamani). கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இவருக்கு 71 வயதாகிறது. இவர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லும் சாதாரண பாட்டி கிடையாது. அவர் சற்று வித்தியாசமானவர். நம்மில் பலருக்கும் இவர் உத்வேகம் அளிக்க கூடியவர். இவரை ரோல் மாடலாக கூட எடுத்து கொள்ளலாம்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸை ராதாமணி வைத்திருப்பதுதான், அவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாக்குகிறது. எக்ஸ்காவேட்டர், ஃபோர்க்லிஃப்ட், க்ரேன், ரோடு ரோலர், டிராக்டர், கன்டெய்னர் ட்ரெய்லர் ட்ரக், பஸ் மற்றும் லாரி உள்பட 11 வகையான வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸை ராதாமணி வைத்துள்ளார்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

ராதாமணி 30 வயதாக இருந்தபோது, முதலில் கார் ஓட்ட பழகினார். ராதாமணியின் கணவர்தான் வாகனம் ஓட்ட பழகும்படி, அவரை வலியுறுத்தினார். இதன் பேரில் ராதாமணியும் முதலில் கார் ஓட்டுவதற்கு கற்று கொண்டார். அப்போது வாகனம் ஓட்டுவதில் அவருக்கு ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது. ராதாமணியின் கணவர் கடந்த 1970ம் ஆண்டுகளில் டிரைவிங் ஸ்கூலை தொடங்கினார்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கொச்சியில் இந்த டிரைவிங் ஸ்கூல் தொடங்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக ராதாமணியின் கணவர் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தனது குடும்பத்தால் நடத்தப்படும் டிரைவிங் ஸ்கூலை நிர்வகிப்பதில் தனது குழந்தைகளுக்கு ராதாமணி உதவி செய்ய தொடங்கினார்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் மற்றும் கற்று கொடுப்பவர்கள் முதலில் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். என்ன வாகனத்தை ஓட்டுவதற்கு மற்றவர்களுக்கு கற்று கொடுக்கிறோமோ, அந்த வாகனத்திற்கான டிரைவிங் லைசென்ஸை அவர்கள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இந்த விஷயத்தில் ராதாமணி மிகவும் சிறப்பானவர்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

ஏனெனில் அவரிடம் 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் இருக்கிறது. ஆனால் ராதாமணி தற்போது இந்த வாகனங்களை எல்லாம் ஓட்டுவதில்லை. ஏனெனில் டிரைவிங் ஸ்கூலுக்கு வரும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கற்று கொடுக்கும் குழுவில் அவர் தற்போது இல்லை. இருந்தாலும் ஒரு காலத்தில் மாணவர்களுக்கு அவர் வாகனங்களை ஓட்ட கற்று கொடுத்து கொண்டிருந்தார்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

தற்போதைய நிலையில் டிரைவிங் ஸ்கூலின் கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இங்கே ஆச்சரியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், ராதாமணி இன்னமும் ஒரு மாணவிதான். டிரைவிங் ஸ்கூலின் கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளை கவனித்து கொள்வதோடு, பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் ராதாமணி படித்து வருகிறார்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் அவர் தற்போது டிப்ளமோ படித்து கொண்டுள்ளார். இந்த வயதில் இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். இதன் காரணமாகதான் ராதாமணி நமக்கெல்லாம் உத்வேகம் கொடுக்க கூடியவராக இருப்பார் என்றும், அவரை நாம் ரோல் மாடலாக கூட எடுத்து கொள்ளலாம் என்றும் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே நாங்கள் கூறி விட்டோம்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

உண்மையில் இவரது கதை பலருக்கும், குறிப்பாக பெண்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக உள்ளது. சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதையும் ராதாமணியின் கதை நமக்கு உணர்த்துகிறது. இந்த வயதில் கூட அவர் தொடர்ச்சியாக புதிய புதிய விஷயங்களை கற்று கொண்டே இருக்கிறார். எனவே இளைய தலைமுறையினருக்கும் அவர் ஒரு முன்மாதிரிதான்.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதை அதிகம் காண முடிகிறது. ஆனால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை மட்டுமே பெண்கள் அதிகளவில் ஓட்டுகின்றனர். நாகரிகமும், தொழில்நுட்பமும் நன்றாக வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் கூட கனரக வாகனங்களை இயக்கும் பெண்களை பார்ப்பது அரிதாக உள்ளது.

11 வகையான வாகனங்களுக்கு லைசென்ஸ் வைத்திருக்கும் மூதாட்டி... இவரோட வயசு எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

பஸ், லாரி போன்ற வாகனங்களை இயக்க கூடிய பெண்கள் தற்போதும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இப்படிப்பட்ட ஒரு சூழலில், 11 வகையான வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸை ராதாமணி வைத்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 16:12 [IST]
English summary
Meet kerala grandma who holds licenses for 11 types of vehicles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+