இந்த தம்மாதுண்டு காரின் விலை இத்தன லட்ச ரூபாயா! இதோட ஓனருக்கு முன்னாடி அம்பானியே ஓரமாதான் நிக்கணும்!

மிட்சுபிஷி பஜீரோ (Mitsubishi Pajero) என்றவுடன், கம்பீரமான ஒரு பெரிய எஸ்யூவி-தான் நம் அனைவரின் நினைவிற்கும் வரும். அப்படி இருக்கும்போது ஜப்பான் சந்தைக்காக மிட்சுபிஷி பஜீரோ காரின் மினி வெர்ஷன் உருவாக்கப்பட்டது என்று நாங்கள் சொன்னால் நம்புவீர்களா? நாங்கள் பொய் சொல்கிறோம் அல்லது வேடிக்கையாக பேசுகிறோம் என்பதுதான் இந்த கேள்விக்கு பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்.

உங்களுடைய பதிலும் இதுவாக இருந்தால், உங்கள் எண்ணத்தை உடனே மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் ஜப்பான் சந்தைக்காக உண்மையிலேயே மிட்சுபிஷி பஜீரோ காரின் மினி வெர்ஷன் உருவாக்கப்பட்டது. மிகவும் அரிதான இந்த மினி மிட்சுபிஷி பஜீரோ காரை இந்தியாவில் ஒருவர் வைத்துள்ளார். அவரது நடத்தப்பட்ட நேர்காணலின் வீடியோ யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Mini Mitsubishi Pajero

அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த செய்தியின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நிகழ்ச்சியை வழங்கும் நபர், இந்த மினி மிட்சுபிஷி பஜீரோ மற்றும் அதன் உரிமையாளரை அறிமுகம் செய்வதுடன், இந்த வீடியோ தொடங்குகிறது.

இந்த மினி மிட்சுபிஷி பஜீரோ காரில், 660 சிசி டர்போ பெட்ரோல் (Turbo Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் கூட, இந்த மினி மிட்சுபிஷி பஜீரோ காரில், 4X4 சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mitsubishi Pajero Sport

இந்தியாவை பொறுத்தவரையில்தான் இது மிகவும் அரிதான ஒரு கார். ஆனால் ஜப்பானில் சாலைகள் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், இந்த மினி மிட்சுபிஷி பஜீரோ அங்கு மிகவும் பிரபலம். இந்த மினி மிட்சுபிஷி பஜீரோ காரில், சன்ரூஃப் வசதிகள் எல்லாம் இருக்கிறது என்பது நமது ஆச்சரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

மும்பை (Mumbai) நகரை சேர்ந்த ஒரு குடும்பத்திடம் இந்த கார் இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்த அரிதான காரை அவர்கள் விற்பனை செய்ய முடிவு செய்தனர். இந்த தகவலை அறிந்ததும், தற்போதைய உரிமையாளர், அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் இந்த காரை சொந்தமாக்க பலரும் போட்டி போட்டு கொண்டிருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டம் தற்போதைய உரிமையாளருக்கு அடித்துள்ளது. முந்தைய உரிமையாளரிடம் எப்படியோ பேசி, இந்த காரை அவர் தனதாக்கி கொண்டுள்ளார். இந்த காரின் விலை சுமார் 65 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது! ஆனால் இந்த காரில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அரிதான கார்களை சொந்தமாக்க எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கும் மனிதர்கள் இந்தியாவில் உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. பலரும் ஓட்டும் கார்களை காட்டிலும் அரிதான கார்களை ஓட்டுவது என்பது உண்மையிலேயே வித்தியாசமான உணர்வை தரும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 17:45 [IST]
English summary
Meet mini mitsubishi pajero that costs rs 65 lakh viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+