ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லப்போகும் முதல் பெண் ரோபோ! பெயரே செம மாஸா இருக்குதே!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வரும் அக்டோபர் மாதம் விண்வெளிக்கு ரோபோ ஒன்றை அனுப்பப் போவதாக மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு இஸ்ரோவை உலக நாடுகள் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இஸ்ரோவின் செயல்பாடுகளை எல்லாம் பலர் நுணுக்கமாக நோக்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இஸ்ரோ அடுத்த திட்டமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் பிடி இஸ்ரோ 3 மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி இஸ்ரோ ஆய்வு செய்ய உள்ளது.

ககன்யான் திட்டத்தின்படி இஸ்ரோ 3 விண்வெளி வீரர்களை தயார் செய்து அவர்களை ராக்கெட்டில் வைத்து பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு கூட்டி சென்று அங்கு நிலைநிறுத்தி அங்கு மூன்று நாட்கள் ஆய்வு செய்து பின்னர் அவர்களை பத்திரமாக பூமியில் தரை இறக்கி இந்திய பெருங்கடல் பகுதியில் அவர்கள் இருக்கும் கேப்சூலை விழ வைத்து பின்பு அந்த கேப்சூலிலிருந்து அவர்களை இந்திய கடற்கரை மூலம் மீட்க திட்டமிட்டுள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இஸ்ரோ இது தான் முதல் முறை என்பதால் பல்வேறு கட்ட சோதனைகள் மற்றும் ஆய்வுகளை அதற்கு முன்னர் செய்ய உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் போது எந்த விதமான பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்து வருகிறது. அதன்படி இந்த ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லாத ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதில் மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் சமீபத்தில் ஒரு முக்கியமான ஒரு அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்த ககன்யான் திட்டத்தின் படி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் அதேபோல இரண்டு முறை மனிதர்கள் அல்லாமல் அதே ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையின் போது மனிதர்களைப் போலவே செயல்படும் ஒரு ரோபோவை ராக்கெட்டில் வைத்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த ரோபோவிற்கு இஸ்ரோ வாயோம்மித்ரா என பெயர் வைத்துள்ளது. இந்த ரோபோவை ஒரு பெண் வடிவில் உருவாக்கி அதை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமியில் தரையிறக்கப் போகிறது. இந்த வாயோம்மித்ரா ரோபோ விண்வெளியில் மனிதர்கள் செய்யப் போகும் அதே விதமான செயலை தானியங்கியாக செய்யும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரோபோவிற்கு வாயோம்மித்ரா என பெயரிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் வாயோம் என்றால் விண்வெளி என்று அர்த்தம், மித்ரா என்றால் நண்பர் என்று அர்த்தம். விண்வெளியின் நண்பர் என்ற பெயரில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு இது விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இரண்டு முறை வாயோம்மித்ரா ரோபோ விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு முறையிலும் கிடைக்கும் முடிவுகளை வைத்து தான் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இஸ்ரோ இந்த ககன்யான் திட்டத்தை சற்று தள்ளி வைத்திருந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 பெற்றுள்ள நிலையில் இந்த ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கிடையில் ஆதித்யா எல்1 விண்கலத்தையும் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரே தயாராகி வருகிறது. ஒரு செப்டம்பர் 2ம்தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்த படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதித்யா விண்கலம் சூரியனின் ஹாலோ எல்1 என்ற சுற்ற வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தூரம் பயணிக்கப்போகிறது. இதை தெடாந்து தான் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்பார்க் கருத்து: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல்வேறு முக்கியமான ஆய்வுகளை செய்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாயோம்மித்ரா என்ற ரோபோவை தயார் செய்யப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. இந்திய விண்வெளி துறையில் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்று இது தெளிவாக காட்டுகிறது.


Click it and Unblock the Notifications