ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கியூ7 வரை.. தெலுங்கு மெகா ஸ்டார் குடும்பத்தின் அசரடிக்கும் கார் கலெக்ஷன்..!
ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கியூ7 வரை.. தெலுங்கு மெகா ஸ்டார் குடும்பத்தின் அசரடிக்கும் கார் கலெக்ஷன்..!!
தெலுங்கு சினிமாவின் ஸ்டார் என்றாலும், இந்தியா சினிமாவில் தனக்கென ஒரு இடம் வைத்திருப்பவர் சிரஞ்சீவி.
அமிதாப் பச்சன், ரஜினி காந்த் போன்ற நடிகர்களை போல இவருக்கான ரசிகர்கள் வட்டமும் இந்திய திரைத்துறையில் அதி முக்கியமாக உள்ளது.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரன் தேஜ் மற்றும் சகோதரர் பவன் கல்யான் ஆகியோரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களாக வலம் வருகிறார்கள்.

சமீபத்தில் அரசியலில் கால்பதித்திருக்கும் பவன் கல்யான், சிரஞ்சீவியை காட்டிலும் பல உயரங்களுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகபெரிய நட்சத்திர வட்டத்தை கொண்டுள்ள இந்த குடும்பம் தெலுங்கு சினிமா உலகில் தங்களுக்கான வாகன பயன்பாட்டிலும் தனித்து இருக்கிறது.

சிரஞ்சீவி
ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம்
தெலுங்கு சினிமாத்துறையில் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகராக வலம் வருகிறார் சிரஞ்சீவி. ரூ.3.34 கோடி மதிப்பில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார்.

6.58 லிட்டர் கொண்ட நெச்சுரலி ஏஸ்பிரேடட் வி12 எஞ்சினை இந்த காரில் இருக்கிறது. 460 பிஎச்பி பவர், 720 என்.எம் டார்க் திறன் தரும் வல்லமை கொண்ட சிரஞ்சீவியின் ஃபான்டம் காரின் பதிவு எண் 1111.

டொயோட்டா லேன்டு க்ரூஸர்
சிரஞ்சீவியின் 59வது பிறந்தநாளுக்கு அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தேஜ் பரிசளித்த கார் தான் டொயோட்டா லேன்டு க்ரூஸர்.

வி8 டீசல் எஞ்சினைக்கொண்ட இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடலையும் சிரஞ்சீவி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவியின் புதிய லேண்டு க்ரூஸர் 4.5 லிட்டர் வி8 டர்போ டீசல் எஞ்சினை கொண்டது. ரூ.1.19 கோடி மதிப்பிலான அந்த கார் 262 பிஎச்பி பவர் மற்றும் 650 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ரேஞ்ச் ரோவர் வோக்
ரேஞ்ச் ரோவர் வோக் காரின் முந்தைய மாடலை சிரஞ்சீவி பெருமளவில் பயன்படுத்துவார். இன்னும் அதன் செயல்திறனுக்கு வேறு எந்த காரும் ஈடு இல்லை என்பது அவரது பெருமிதம்.
இந்தியாவிலும் மிகப்பெரிய விற்பனை திறனை பெற்றுள்ள ரேஞ்ச் ரோவர் கார்களின் தற்போதைய ஆரம்ப விலை ரூ.1 கோடியாகும்.

சிரஞ்சீவியின் கார் கலெக்ஷன் கிளாஸ் என்றால், அவரது மகன் ராம் சரண் தேஜா மிகவும் மாஸான கார்களை வைத்திருக்கிறார்.

ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் வி8
ஆரம்பமே ஆச்சர்யத்தை தருகிறது அல்லவா. ஆமாம், இந்தியாவில் ஆஸ்டன் மார்டின் காரின் வான்டேஜ் வி8 மாடலை வைத்திருக்கிம் வெகு சிலரில் ஒருவர் ராம் சரண் தேஜா.

தனது திருமணத்தின் போது தான் ஆஸ்டன் மார்டினின் இந்த மாடல் காரை ராம் சரண் வெளி உலகிற்கு காட்டினார்.
ஆனால் இது ராம் சரண் மனைவி வீட்டார் அவருக்கு திருமண பரிசாக அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பிரிட்டன் மாடல் ஸ்போர்ட்ஸ் காரில் 4.8 லிட்டர் வி8 பெட்ரொல் எஞ்சின் உள்ளது. இதன் மூலம் 313 பிஎச்பி பவர் மற்றும் 370 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.86 கோடி விலை பெறும் இந்த கார். நேரடியாக இங்கிலாந்தில் இருந்து வரவழைத்து தான் வாங்க முடியும்.

எஸ்யூவி வகைகளும் ராம் சரண் தேஜிற்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர் லேண்டு ரோவரின் காதலர். இந்த காரில் நீங்கள் அதிகம் ராம் சரணை பார்க்கலாம்.

வி8 பெட்ரோல் எஞ்சின் கொண்ட ராம் சரணின் லேண்டு ரோவர் மாடல் கார் 799 பிஎச்பி பவர் மற்றும் 625 என்.எம் டார்க் திறனை கொடுக்கும்.

இந்தியாவில் ரேஞ்ச் ரோவரின் டாப்-என் டு வேரியண்டு மாடல் ரூ.2.75 கோடிக்கு விற்பனைக்கு ஆகிறது. நமது நாட்டில் மிகவும் விலை அதிகம் கொண்ட எஸ்யூவி என்ற பெருமையும் ரேஞ்ச் ரோவருக்கு உள்ளது.

பவன் கல்யான்
தற்போது ஆந்திராவில் புயலை கிளப்பி வரும் சிரஞ்சீவியின் உடன்பிறந்த சகோதரரான பவன் கல்யானும் கில்லியான பல ஆடம்பர கார் கலெக்ஷனை வைத்துள்ளார்.

மெர்சிடிஸின் காதலரான பவன் கல்யான், அதிலேயே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆர்-கிளாஸ் என இரண்டு மாடல்களை வைத்துள்ளார்.

மேலும் லோக்கல் பயணங்கள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு ஆடி கியூ7 காரை அதிகம் பயன்படுத்தி வருகிறார்.
பவன் கல்யானின் கார் கலெக்ஷன் என்பது ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியை ஒப்பிடும் போது மிகவும் சிம்பிள் தான்.

காரணம் ஆந்திராவை பொறுத்த வரை பவன் கல்யான் எளிமையின் நாயகன். அதுபோன்ற இமேஜை திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறார்.

சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் பவன் கல்யான் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். சொந்த வாழ்க்கையில் மட்டுமில்லாது தங்களது திரைப்படங்களிலும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.

குறிப்பாக ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி நடிக்கும் படங்களில் கப்பல் முதல் ஹெலிகாப்ட்டர் வரை பிரம்மாண்ட வாகனங்கள் பல காட்சிகளில் வந்துபோகும்.


Click it and Unblock the Notifications








