இவரிடம் இருக்கும் பணத்திற்கு 10 ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்க முடியும்... டொயோட்டா கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்
சிரஞ்சீவி (Chiranjeevi), முன்னணி தெலுங்கு நடிகர். இந்தியாவின் முக்கியமான நடிகர்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் சிரஞ்சீவியும் ஒருவராக இருப்பார். ரசிகர்களால் அன்போடு மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவி அவரது 68வது பிறந்தநாளை இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடினார். சினிமாவில் நீண்ட வருடங்களாக நடித்துவரும் சிரஞ்சீவி ஏறக்குறைய ரூ.1,650 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். இத்தனை கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரருக்கு விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவது எல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது.
அந்த வகையில், நடிகர் சிரஞ்சீவியும் லக்சரி கார் பிரியர் ஆவார். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் வரையிலான கார்கள் சிரஞ்சீவியிடம் உள்ளன. குறிப்பாக, டொயோட்டா நிறுவனத்தின் கார்களை அதிகம் விரும்பக்கூடியவராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளார். இவரிடம் உள்ள லக்சரி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

1. ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் (Rolls-Royce Phantom): நடிகர் சிரஞ்சீவியிடம் உள்ள விலையுயர்ந்த கார் இதுவாகும். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10 கோடியில் இருந்து ரூ.11 கோடி வரையில் உள்ளன. 5 இருக்கைகளை கொண்ட அல்ட்ரா லக்சரி காரான பாண்டோம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சீரிஸ் 2, எக்ஸ்டெண்ட் வீல்பேஸ் என்பன அந்த 2 வேரியண்ட்கள் ஆகும்.
2. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography): மெகா ஸ்டாரிடம் உள்ள இரு ரேஞ்ச் ரோவர் கார்களில் ஒன்று இதுவாகும். லேண்ட் ரோவர் நிறுவனம் உருவாக்கும் ரேஞ்ச் ரோவர் கார்கள் இந்தியாவில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ஆட்டோபயோகிராபி ஆகும். ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.99 கோடியில் இருந்து ரூ.3.43 கோடி வரையில் உள்ளன.

3. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 4வது ஜென்ரேஷன் (Toyota Land Cruiser 4th Generation): நடிகர் சிரஞ்சீவி ஒரு லேண்ட் க்ரூஸர் கார் பிரியர் ஆவார். இவரிடம் 4வது தலைமுறை லேண்ட் க்ரூஸர் கார் உள்ளது. தற்சமயம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவது 5ஆம் தலைமுறை லேண்ட் க்ரூஸர் ஆகும். 4ஆம் தலைமுறை லேண்ட் க்ரூஸர் காரை ரூ.1.50 கோடி என்கிற அளவிலான விலையில் சிரஞ்சீவி வாங்கினார்.

4. டொயொட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire): டொயோட்டா நிறுவனத்தின் அளவில் பெரியதான எம்பிவி கார் வெல்ஃபையர் உள்ளது. மினி தியேட்டர் அளவிற்கு பிரம்மாண்டமாக, மிகவும் சொகுசான பயணத்தை வழங்கக்கூடியதாக வெல்ஃபையர் உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான சினிமா நடிகர், நடிகைகள் வெல்ஃபையரை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் இந்த காரை நடிகர் சிரஞ்சீவியும் வைத்துள்ளார்.
5. ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vouge): மெகா ஸ்டாரிடம் உள்ள மற்றொரு ரேஞ்ச் ரோவர் கார் இதுவாகும். ரேஞ்ச் ரோவரின் வோக் வேரியண்ட் காரில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ரேஞ்ச் ரோவர் காரின் தற்போதைய விலை ரூ.2.48 கோடி என்கிற அளவில் உள்ளது. நடிகர் சிரஞ்சீவி வாங்கிய சமயத்தில் இந்த காரின் விலை சற்று குறைவாக இருந்திருக்கலாம்.

6. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 3வது தலைமுறை: 4வது தலைமுறை மட்டுமின்றி, 3வது தலைமுறை லேண்ட் க்ரூஸரையும் நடிகர் சிரஞ்சீவி வைத்துள்ளார். 3வது ஜென்ரேஷன் லேண்ட் க்ரூஸர் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர் விற்பனையில் இருந்தது. இருப்பினும், இப்போதும் இந்த காரை சிரஞ்சீவி பத்திரமாக பாதுகாத்து வருகிறார் என்றால், இந்த காரின் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் உள்ளார் என்பதை அறியலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் & பைக்குகளை வாங்கி குவிப்பதில் ஆர்வம் கொண்ட நடிகர்களுள் ஒருவர் சிரஞ்சீவி ஆவார். இந்த தொகுப்பில் பார்த்துள்ளவை மெகா ஸ்டாரிடம் உள்ள லக்சரி கார்களை பற்றி மட்டுமே ஆகும். விலை குறைவான கார்களையும் சேர்த்தால், இந்த லிஸ்ட் இன்னும் நீண்டு கொண்டே போகும். மேலும், கம்பீரமான தோற்றம் கொண்ட கார்களையே சிரஞ்சீவி விரும்பி வாங்குபவராக உள்ளார்.


Click it and Unblock the Notifications









