இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

முதல் அமைச்சரின் பயன்பாட்டிற்காக புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

மேகாலயா மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பவர் கான்ராட் சங்மா (Conrad Sangma). இவர் தனது அலுவலக பணிகளுக்கு இனி எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் மற்ற துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும், எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை சார்ந்து இருக்கும் நிலைமையை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தவுள்ளதாக மேகாலயா மாநிலத்தின் முதல் அமைச்சர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நம்முடைய பங்களிப்பாக இது இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைப்பதில் நம்முடைய பங்களிப்பு இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் மேகாலயா முதல் அமைச்சர் கான்ராட் சங்மா பேசினார்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

அப்போது அவர் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்துவதால் அலுவலக செலவு குறையும். அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் நாம் நம்முடைய பணியை செய்வதையும் இது உறுதி செய்யும்'' என்றார். முதல் அமைச்சர் கான்ராட் சங்மாவின் பயன்பாட்டிற்காக புதிய எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று சமீபத்தில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

அந்த வாகனம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 20ம் தேதி), டெலிவரி செய்யப்பட்டது. அந்த வாகனத்தைதான் முதல் அமைச்சர் கான்ராட் சங்மா இனி பயன்படுத்தவுள்ளார். அவருக்காக வாங்கப்பட்டிருப்பது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS Electric SUV) கார் ஆகும். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மட்டும்தான், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக மாறியுள்ளது.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. இது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றுக்கு நேரடி போட்டி கிடையாது. ஏனெனில் இதன் விலை குறைவு. அத்துடன் சிறிய பேட்டரி தொகுப்புதான் பொருத்தப்பட்டுள்ளது.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டிருப்பதால், ஸ்டாண்டர்டு மாடலை விட அதிக ரேஞ்ச் கிடைக்கும்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றுக்கு இது நேரடி போட்டியாகவும் அமையும். மேகாலயா மாநிலத்தின் முதல் அமைச்சர் கான்ராட் சங்மாவின் பயன்பாட்டிற்காக தற்போது வாங்கப்பட்டுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி சற்று விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாகும்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 22 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டின் விலை 25.88 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இது காஸ்ட்லியான மாடல் ஆச்சே... முதல் அமைச்சருக்காக வாங்கப்பட்ட புது எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி மோட்டார் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களும் அடக்கம். இந்திய சந்தையில் 10-15 லட்ச ரூபாய் விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Meghalaya cm conrad sangma gets new mg zs electric suv
Story first published: Monday, May 23, 2022, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X