மது போதையில் ஆண் இருப்பார்னு காரை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! போலீசார் திணறிட்டாங்க!!

கார் விபத்துகளுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு கார் விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் நாங்கள் கார் விபத்தை மட்டுமே சொல்கிறோம். மற்ற வாகன விபத்துகளை எல்லாம் கணக்கிட்டால் எண்ணிக்கை எங்கேயோ போகும். கார் விபத்துகளை மட்டும் ஏன் குறிப்பிட்டு சொல்கிறோம் என்றால், இன்றைய கால மாடர்ன் கார்களில் ஏர்பேக் (Airbag), அடாஸ் (ADAS) என ஏகப்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கார் விபத்துகள் நடைபெறுகின்றன என்றால், நிச்சயமாக அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கார் விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகள் பலரிடம் சாலை போக்குவரத்து குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையும், போதையில் வாகனம் ஓட்டுவதும் ஆகும். சாலை போக்குவரத்து விதிமுறைகள் நன்கு தெரிந்தவர்கள் கூட மது போதையில் வாங்க ஓட்டினால் தங்களை அறியாமல் விதிமுறைகளை மீறி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

mentally unstable woman in telangana

மது போதையில் கார் ஓட்டும்போது என்ன செய்கிறோமோ என்பதே பலருக்கு தெரிவதில்லை என்பதற்கு தற்போது நடந்துள்ள இந்த நிகழ்வு சரியான சாட்சியாகும். தெலுங்கானா மாநிலத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கியா சோனட் (Kia Sonet) காரை இரயில் தண்டவாளத்தில் ஏற்றி, தண்டவாள கம்பிகள் மீது காரை ஓட்ட முயற்சித்துள்ளார். சம்பவத்தின்போது இவர் முழு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை.

இவரது இந்த ஆபத்தான செயலை கண்ட அங்கு இரயில்வே பராமரிப்பு பணியில் இருந்த பணியாளர்கள் உடனே இரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் தள்ளாடும் நிலையில் இருந்த அந்த பெண்மணியை காரில் இருந்து வெளியேற்றி, சோனட் காரையும் தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

mentally unstable woman in telangana

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட பெண் உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ஆபத்து என்பதை உணராமல் தண்டவாளத்தில் வேகமாக சென்றவரின் சோனட் காரை 7 கிமீ-க்கு கிட்டத்தட்ட 20 பேர் விரட்டி, மடக்கி நிறுத்தினர். பின்னர், ஜன்னல்களை எல்லாம் மூடிக்கொண்டு காருக்குள் இருந்தவரை வெளியே கொண்டுவந்து அடக்குவதற்குள் இரயில்வே போலீசாருக்கும், பணியாளர்களுக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது.

அருகில் இருந்த உள்ளூர் மக்களின் உதவியுடன் காரில் இருந்து பெண்ணை வெளியே கொண்டுவந்ததும், அவரது கைகள் இரண்டையும் கட்டி போட்டனர். இந்த உபி பெண்ணின் செயலால் அந்த வழியாக செல்ல வேண்டிய ஏறக்குறைய 15 பயணிகள் இரயில்கள் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டன.

mentally unstable woman in telangana

ஒரு சில இரயில்களை மாற்று பாதைக்கு திருப்பிவிட முடியாததால் வெவ்வேறான இரயில் நிலையங்களில் பல நிமிடங்களுக்கு நின்றதாக இரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பெண் தற்சமயம் இரயில்வே போலீசாரின் விசாரணையில் உள்ளார். இந்த சம்பவம் மது போதையினால் நடந்ததா அல்லது வேண்டுமென்றே தற்கொலை முயற்சியாக நடந்ததா என இரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட பெண்ணை வேண்டுமாயின் குறை சொல்லலாமே தவிர்த்து, இதில் பயன்படுத்தப்பட்ட கியா சோனட் காரை எந்தவொரு குறையும் சொல்ல முடியாது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்த கியா நிறுவனம் 2020இல் கொரோனா வைரஸ் பரவல் சூழலுக்கு மத்தியில் அறிமுகம் செய்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் தான் சோனட் ஆகும். இதில், 'சப்-காம்பெக்ட்' என்பது இந்த காரின் நீளத்தை குறிக்கிறது. அதாவது, 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட அளவில் சிறியதான எஸ்யூவி கார், சோனட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நன்கு படித்த, வேலையில் உள்ள நபரை கூட இன்றைய கால மாடர்ன் சமூகம் எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடும் என்பதை இந்த 34 வயது பெண்மணியை பார்க்கும்போது உணர முடிகிறது. இந்த சம்பவத்தில், தண்டவாளத்தில் காரை ஏற்றியதினால் நிச்சயமாக சோனட் காரின் அடிப்பகுதி சேதமடைந்து இருக்கும். போதை தெளிந்த பின் காரின் பழுது பார்ப்பிற்காக இந்த பெண் பல ஆயிர ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, June 26, 2025, 23:59 [IST]
English summary
Drunk woman in telangana drove kia sonet car on railway track
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X