மனிதர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த பென்ஸ், இனி ரோபோக்களை வச்சு தான் கார் தயாரிக்க போறாங்களாம்!
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது வாகன தயாரிப்பு ஆலையில் மனிதர்களுக்கு பதிலாக அப்பல்லோ என்ற ரோபோக்களை தற்போது பணியில் அமர்த்த துவங்கி உள்ளது. இதன்படி இனி கார் தயாரிப்புகளை ரோபோக்களே செய்யும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகில் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இன்றளவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். என்ன விலை சொன்னாலும் சரி இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இதனால் பிரீமியம் செக்மெண்ட் மக்கள் மத்தியில் இந்நிறுவனம் நல்ல பெயரை பெற்றுள்ளது.

இப்போது வரை உலகில் உள்ள அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வாகன தயாரிப்புக்காக மிஷினரிகளை பயன்படுத்தினாலும் அந்த மிஷினரிகளை ஆப்ரேட் செய்ய மனிதர்களையே பயன்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான மனிதர்கள் தற்போது வாகன தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த பணிகளிலிருந்து மனிதர்களை நீக்கிவிட்டு ரோபோக்களை பணியமர்த்த தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதன்படி மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது அமெரிக்காவில் உள்ள எலெக்ட்ரானிக் சென்ற ரோபோடிக் நிறுவனத்துடன் இணைந்து தற்போது அப்பல்லோ என்ற ரோபோவை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்களை தற்போது மெர்சிடீஸ் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகளில் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்டு மனிதர்கள் செய்யும் பணியை செய்கிறது.

இந்த ரோபோக்களை பொறுத்தவரை தற்போது வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் மனிதர்களுக்கு உதவி செய்யும் வகையில் டூல்ஸ்களை எடுத்து வருவது, இணைக்கப்பட்ட உதிரி பாகங்களை சரி பார்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்கிறது. இந்த அப்பல்லோ ரோபோவை பொருத்தவரை 5 அடி 8 அங்குலம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுமார் 80 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோக்கள் எல்லாம் ஒவ்வொன்றும் சுமார் 25 கிலோ எடையை தூக்கி செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் எல்லாம் வடிவமைக்கப்படும்போதே ஆலையில் ஏற்கனவே பணியில் இருக்கும் மனிதர்களுக்கு எந்தவிதமான ஆபத்துகளோ பாதிப்புகளோ ஏற்படாத வகையில் செயல்படுவதற்காக புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இதுபோக குறைவான ஸ்டில் கொண்ட பணிகளை ரோபோக்கள் மூலம் செய்ய மெர்சிடீஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மெர்சிடீஸ் நிறுவனம் மட்டுமல்ல தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனமும் இதே போன்ற ரோபோவை தனது தயாரிப்பாலையில் கொண்டு வருவது, குறித்த திட்டத்தை வைத்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு ரோபோ தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளது. விரைவில் இந்த நிறுவனமும் ரோபோக்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் முதல் கட்டமாக இந்த ரோபோக்களை பணிக்கு அமர்த்தி சோதனை செய்ய முயற்சி செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு ஆகும் செலவு குறையவும் அதே நேரம் உற்பத்தி திறன் அதிகரிக்கவும் வழிவகைகளை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் வாகன தயாரிப்பு முழுவதையும் ரோபோக்களை செய்யக்கூட வாய்ப்புகள் உள்ளன.
இப்படியாக ரோபோக்கள் வாகன தயாரிப்பு பணியில் ஈடுபட்டால் பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. படிப்படியாக இது உலகம் முழுவதும் உள்ள வாகன தயாரிப்பாலையில் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம் பலர் வேலை இழக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் இதுபோன்ற ரோபோக்களை பணியமர்த்துவது என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த மாதிரியான பணியில் இருந்து மனிதர்கள் விடுவிக்கப்படும் போது அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கு மற்றொரு வழியை செய்யவும் நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








