காரில் மணிக்கு 240கிமீ வேகத்தில் சென்றவர் இவ்வளவு பெரிய பிரபலமா? எல்லாருக்கும் புத்தி சொல்றவரே இப்படியா!!
இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே கிடையாது. குறிப்பாக, வட இந்தியாவில் ஊருக்கு ஒரு சாமியார் அல்லது குருமார்கள் இருப்பதை பார்க்க முடியும். என்னதான் வழக்கமான மக்களிடம் இருந்து வேறுப்பட்டு ஆன்மீகத்தில் ஊறிப்போய் இருந்தாலும், நிறைய சாமியார்கள் மாடர்ன் விஷயங்களிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதாவது, பழமையான வேதாதங்களை பற்றி கற்பிக்கும் அவர்களுக்கு உள்ளேயும் மாடர்ன் வாழ்க்கை முறையின் மீது சிறிய ஆசைய இருப்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அவ்வாறான ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய சாலைகளில் அதிவேக பயணம் எப்போதுமே ஆபத்தானது ஆகும். இதன் விளைவாக அவ்வப்போது சாலை விபத்துகள் நடக்கின்றன. என்றாலும், அதிவேகமாக கார்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை. பெரும்பாலும் அதிவேக பயணங்களை இளைஞர்களும், ஏதேனும் போதையில் இருப்பவர்களும் தான் மேற்கொள்கின்றனர்.

ஆனால், இங்கு ஒரு சாமியார் 2 கோடி ரூபாய் மதிப்பலான மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் மணிக்கு 244கிமீ வேகத்தில் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த வீடியோவில், டிரைவர் காரை அதன் அதிகப்பட்ச வேகமான 260kmph-ஐ எட்டும் அளவிற்கு வேகமாக ஓட்டுவேன் என சொல்லிக் கொண்டே ஓட்டுவதையும் கேட்க முடிகிறது.
இந்த சாமியாரின் பெயர் பரமன் சுவாமிகள் ஸ்ரீ சச்சிதானந்த ஜி மகாராஜ் (Paramhans Swami Shri Sachidanand Ji Maharaj) ஆவார். இந்தியாவில் நெடுஞ்சாலையில் கூட 120kmph வேகத்திற்கு மேல் செல்வது அபராதத்திற்குரிய குற்றமாகும். ஆனால், இந்த ஸ்ரீ சச்சிதானந்த இந்த பென்ஸ் காரை சிங்கிள்-லேன் சாலையில் ஓட்டியுள்ளார். அதாவது, எதிர் திசையில் வரும் வாகனங்களும் அதே சாலையில் தான் செல்ல வேண்டும்.
நெடுஞ்சாலையில் இவ்வளவு வேகத்தில் செல்வதை காட்டிலும் இவ்வாறான சாலையில் செல்வது இன்னும் ஆபத்தானது ஆகும். கார் மணிக்கு 244kmph வேகத்தில் செல்வதை குறிக்கும் விதமாக வீடியோவில் ஸ்பீடோ மீட்டரை காட்டுகின்றனர். ஸ்பீடோ மீட்டரை காட்டவில்லை என்றாலும், கார் சாலையை கிழித்துக் கொண்டு அதிவேகத்தில் செல்வது வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.
காரின் வேகத்தை வீடியோவில் பார்க்கும்போதே நமக்கு பயமாக இருக்கும்போது, காருக்குள் வீடியோ எடுத்த நபருக்கும், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்ரீ சச்சிதானந்தாவுக்கும் எப்படி இருந்திருக்கும் என யோசித்து பாருங்கள். ஆனால், சாமியார் இந்த வேகத்திற்கு பயப்பட்டது போல் தெரியவில்லை. 230kmph வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த போது கூட ஸ்டேரிங் சக்கரத்தில் டிரைவர் தனது கைகளை இறுக்கமாக வைத்திருக்கவில்லை.
காரின் வேகம் 235kmph-ஐ தொட்ட பின்னரே ஸ்டேரிங் சக்கரத்தை சாமியார் வலுவாக பிடிக்க ஆரம்பித்தார். 240kmph வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது டிரைவர் மற்றும் ஸ்ரீ சச்சிதானந்தாவை தவிர்த்து காருக்குள் இருந்த அனைவரும் அலறல் உடன் கூச்சலிடுவதை வீடியோவில் கேட்க முடிகிறது. ஸ்ரீ சச்சிதானந்தாவுக்கு இவ்வாறு கார்கள் ஓட்டுவது ஒன்றும் புதியதில்லை. ஏனெனில், இதற்கு முன்னர் இதேபோன்று அதிக வேகத்தில் ஸ்ரீ சச்சிதானந்தா காரில் பயணம் செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு வேகத்தில் செல்வது எந்தவொரு காரிலும் ஆபத்தானது ஆகும். இதனை மற்றவர்கள் செய்தாலே ஆபத்து எனும்போது, மற்றவர்களுக்கு நல்வழியை கற்பிக்கும் சாமியார் செய்யும்போது முகம் சுளிக்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications








