இந்த மனசு தான் சார் கடவுள்!! மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள் - இதுதான் காரணம்!

பெரிய, பெரிய சிலைகளை செதுக்கும் சிற்பிகள் அம்மி கல்லை கொத்தி கொடுப்பது போல, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கால்களை இழந்த நாய்க்கு பிரத்யேகமாக சக்கர நாற்காலி ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளது. பலரது மனதை கவர்ந்துள்ள இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.

ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய புதிய தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்களை ஜெர்மனி மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கொண்டுள்ளது. இந்த மையங்களில் கண்டுப்பிடிக்கப்படும் தொழிற்நுட்பங்கள் பின்னர் காலத்தில் மெர்சிடிஸ் கார்களில் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் வேறு பொருட்களிலும் கூட பயன்படுத்தப்படுவது உண்டு.

mercedes benz custom build wheelchair

இந்த வகையில், கால்கள் ஊனமுற்ற நாய்க்கு சக்கர நாற்காலியை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. பண்ணி என பெயர் கொண்ட இந்த நாய் ஒரு சாலை விபத்தில் தனது பின்னங்கால்களை இழந்துள்ளது. இந்த விபத்து குறித்தும், அதன்பின் நாய் சந்தித்துவரும் சிரமங்கள் குறித்தும் நாயின் உரிமையாளர் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவன அதிகாரிகளை மனம் உருக வைத்தது.

இதனால் அந்த நாய்க்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணிய மெர்சிடிஸ் நிறுவன அதிகாரிகள் நாய்க்கு பயன்படும் வகையில் வீல்சேர் ஒன்றை பிரத்யேகமாக உருவாக்கி வழங்கியுள்ளனர். தனது நாய்க்கு மெர்சிடிஸ் நிறுவனம் சார்பில் வீல்சேர் வழங்கப்பட்டு இருப்பது குறித்த வீடியோவை நாயின் உரிமையாளர் ஹென்ரி ஃப்ரைட்மேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பண்ணிக்கு வீல்சேர் பொருத்தப்பட்ட பின்பு, மற்றொரு வீடியோ ஒன்றையும் ஃப்ரைட்மேன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், "பண்ணியின் பென்ஸ்!! வழக்கமான வீல்சேரை விட இது அருமையாக உள்ளது. இந்த சக்கரங்கள் பண்ணியின் உலகத்தை திறந்து வைத்துள்ளன மற்றும் அவளால் (பண்ணி) இந்த சக்கரங்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது" என ஃப்ரைட்மேன் குறிப்பிட்டு உள்ளார்.

வீல்சேர் பொருத்தப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட இந்த 2வது வீடியோவில், பண்ணி நாய் வீல்சேரின் உதவியுடன் சந்தோஷமாக, சுதந்திரமாக உலா வருவதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே கூறியதுபோல் இந்த வீல்சேரை மெர்சிடிஸ் நிறுவனம் தனது சொந்த முயற்சியில் உருவாக்கி உள்ளது. இதனால்தான் மற்ற சாதாரண வீல்சேர்களை காட்டிலும் மெர்சிடிஸ் வழங்கியுள்ள இந்த வீல்சேர் தனித்துவமாக உள்ளதாக நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு தனது பிராண்டின் லோகோவை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு, இந்த வீல்சேரிலும் சக்கரங்கள், நாயை வீல்சேர் உடன் இணைக்கும் பெல்ட் மற்றும் பின்பக்கத்தில் மெர்சிடிஸ் லோகோவை பார்க்க முடிகிறது. நாய்க்கு வீல்சேர் வழங்குவதை ஓர் சிறிய நிகழ்ச்சி போல் மெர்சிடிஸ் நிறுவன அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கால்கள் செயலிழந்த நாயின் வாழ்க்கையை மீண்டும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் பிரகாசமாக்கி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எதற்காக குறிப்பாக மெர்சிடிஸ்-பென்ஸின் கதவுகளை நாயின் உரிமையாளர் தட்டி உள்ளார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, மெர்சிடிஸ் கார் மோதியதில் பண்ணி நாய் தனது கால்களை இழந்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 24, 2023, 11:22 [IST]
English summary
Mercedes benz custom build wheelchair for abandoned dog
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+