தீயில் கருகிய புத்தம் புதிய பென்ஸ் கார்: மகிழ்ச்சியில் திளைத்த உரிமையாளர் - காரணம் என்ன?

Written By:

ரூ.34.22 லட்சம் விலையுள்ள வாங்கி 5 நாட்களே ஆன புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் கடந்த மாதம் சாலையில் சென்று கொண்டிந்த போது தீயில் கருகி நாசாமானது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

பென்ஸ் சிஎல்ஏ காரின் உரிமையாளரான கல்லூரி மாணவர் ஒருவர் அக்காரை சாலையில் ஓட்டிச் சென்ற போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வருவதைக்கண்டார்.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

கல்லூரி மாணவர் உடனடியாக காரை விட்டு இறங்கிய நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. சிறிது நேரத்தில் ரோட்டிலேயே அவரின் கார் எரிந்து சாம்பலானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

இச்சம்பவம் குறித்து விவரம் அறிந்த மெர்சிடிஸ் நிறுவனம், சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் எரிந்து போன பென்ஸ் சிஎல்ஏ மாடல் காரின் உரிமையாளருக்கு புத்தம் புதிய ஜிஎல்சி எஸ்யூவி காரை இழப்பீடாக அளித்துள்ளது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக அந்த வாடிக்கையாளருக்கு ஆப்பிள் லேப்டாப் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளது அந்நிறுவனம். வாடிக்கையாளர் மனநிறைவு பெரும் வகையில் மெர்சிடிஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது ஆகும்.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

ஏனெனில் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 200 மாடலை ஒப்பிடும் போது, ஜிஎல்சி எஸ்யூவி அளவிலும், ஆற்றலிலும் பெரியது என்பதோடு கூடுதல் விலை கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

தீயில் எரிந்து நாசமான மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 200 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 181 பிஹச்பி ஆற்றலயும், 300 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும்.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

இந்த காருக்கு மாற்றாக அளிக்கப்பட்ட பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 241 பிஹச்பி ஆற்றலையும், 370 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும்.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

பென்ஸ் சிஎல்ஏ 200 மாடல் ரூ.34.22 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) என்ற விலை கொண்டதாகும்.

அதே நேரத்தில் ஜிஎல்சி எஸ்யூவி காரின் தொடக்க விலை ரூ. 55 லட்சமாக உள்ளது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

சிஎல்ஏ மாடலுக்கு மாற்றாக அளிக்கப்பட்ட ஜிஎல்சி எஸ்யூவி காரின் விலை கிட்டதட்ட 20 லட்ச ரூபாய் கூடுதலானது என்பது ஆச்சரியம் அளிக்கத்தக்க வகையில் உள்ளது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

ஜிஎல்சி எஸ்யூவி கார் ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

மெர்சிடிஸ் நிறுவனம் ஸ்டார்டர் மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக உலகலாவிய அளவில் 10 லட்சம் கார்களை திரும்பப்பெற்றது. இதில் 2015 - 2017 ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட சி-கிளாஸ், சிஎல்ஏ, ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி மாடல்களும் அடங்கும்.

இதன் காரணமாகவே இந்த மாடல்களை திரும்பப்பெருவதாக மெர்சிடிஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வாக ஸ்டார்டர் மோட்டாரில் கூடுதல் ஃபியூஸ் ஒன்றினை இணைத்தது மெர்சிடிஸ் நிறுவனம்.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

இந்தியாவில் இந்த பிரச்சனையால் எத்தனை கார்கள் பாதிப்படைந்துள்ளது என்ற விவரத்தை மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிடாத நிலையில், தற்போது இப்பிரச்சனையை அந்நிறுவனம் சரிசெய்து தருவதாக கூறுகிறது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

எரிந்த காரின் விலையை விட கூடுதலாக 20 லட்ச ரூபாய் விலை கொண்ட காரையும், ஆப்பிள் லேப்டாப்பையும் இழப்பீடாக அளித்து மெய்சிலிர்க்க வைத்துள்ள மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

சிறிது நாட்களுக்கு முன்னர் அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதார்த் என்ற 5 வயது சிறுவனம் மெர்சிடிஸ் கார்கள் மீது பிரியம் கொண்டிருந்ததை அறிந்த மெர்சிடிஸ் நிறுவனம், சிறுவனை மெர்சிடிஸ் காரில் பயணிக்க வைத்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளரை திக்குமுக்காட வைத்து பாராட்டை பெற்ற மெர்சிடிஸ் நிறுவனம்..!!

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற சமீப காலமாக மெர்சிடிஸ் நிறுவனம் கடும் சிரத்தையுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதே.

English summary
Read in Tamil about mercedes benz customer happy after his car catches fire and destroyed

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark