வெறும் 23 வயசு தான் ஆகுது... லக்சரி மெர்சிடிஸ் காரில் சாலையை அதிர வைத்த இளைஞர் - அதிரடியாக தூக்கிய போலீஸ்!!

மத்திய பிரதேசத்தில் நடு ரோட்டில் ட்ரிஃப்ட்ஸ் (Drifts) செய்த 23 வயது இளைஞரின் லக்சரி மெர்சிடிஸ்-பென்ஸ் இ400 காரை போலீஸார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொது சாலையில் ஸ்டண்ட்களில் ஈடுப்படுவோர் பற்றியும், பின்னர் அவர்கள் போலீஸாரிடம் சிக்குவதை பற்றியும் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். இதில் பெரும்பாலானவை வாகன ஓட்டிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததையே வெளிக்காட்டுவதாக இருந்தன. அவற்றின் தொடர்ச்சியாக தற்போது இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

லக்சரி மெர்சிடிஸ் காரில் சாலையை அதிர வைத்த இளைஞர் - வீடியோ!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் கடந்த மார்ச் 19ஆம் தேதி இரவு பொது சாலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ400 கேப்ரியோலெட் கார் ஒன்று ட்ரிஃப்ட்ஸ் செய்யப்பட்டுள்ளது. மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாகவும் இந்த ட்ரிஃப்ட்ஸை செய்தது 23 வயது மட்டுமே ஆன ஓர் இளைஞர் என்பது இதில் நாம் கவலைப்பட வேண்டிய விஷயமாக அமைந்துள்ளது.

இந்த இளைஞர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இந்த சம்பவத்தை அறிந்த இந்தூர் மாநகர போலீஸார் சம்பந்தப்பட்ட இளைஞரின் மெர்சிடிஸ்-பென்ஸ் இ400 கேப்ரியோலெட் காரை அதிரடியாக பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் அதனை தங்களது டுவிட்டர் பக்கத்திலும் இந்தூர் மாநகர போக்குவரத்து போலீஸார் பதிவிட்டுள்ளனர். இந்த டிரிஃப்ட்ஸ் ஆனது எதர்ச்சையாக செய்யப்பட்டது கிடையாது.

முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், ட்ரிஃப்ட்ஸ் செய்வதற்கு முன்பே காரை காட்சிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்டோர் சாலையோரத்தில் நின்றவாறு தங்களது மொபைல் போனில் இந்த நிகழ்வை காட்சிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்த வீடியோக்களை வெளியிட்டவர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரின் நண்பர்களாகவோ அல்லது அவருக்கு தெரிந்தவர்களாகவோ தான் இருக்க வேண்டும்.

அந்த இளைஞர் முன்னரே அவர்களிடம் தெரிவித்துவிட்டு, இவ்வாறு நடுரோட்டில் சாகசம் செய்திருக்கலாம். முன்னரே திட்டமிட்டு செய்தாலும் சரி, எதர்ச்சையாக செய்தாலும் சரி இவ்வாறு செயல்களில் ஈடுப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஏனெனில் இவ்வாறான செயல்கள் ஈடுப்பட்டவருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளையும் விபத்தில் சிக்க வைத்துவிடும்.

லக்சரி மெர்சிடிஸ் காரில் சாலையை அதிர வைத்த இளைஞர் - வீடியோ!!

காலி சாலையில் இவ்வாறான ஸ்டண்ட்களில் ஈடுப்பட்டாலே தவறு எனும்போது, இந்த இளைஞர் கணிசமான வாகனங்கள் செல்லும் நகரத்தின் முக்கிய சாலையில் இந்த சாகசத்தை செய்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கார் உரிமையாளர் மற்றும் செயலில் ஈடுப்பட்ட 23 வயது இளைஞர் மட்டுமின்றி, இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட நபர் மீதும் இந்தூர் போலீஸார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ400 கேப்ரியோலெட் காரை பொறுத்தவரையில், இந்த மெர்சிடிஸ் காரை இந்திய சாலைகளில் காண்பது அரிதானது. இது வழக்கமான மெர்சிடிஸ் இ-கிளாஸ் செடான் காரின் கன்வெர்டபிள் வெர்சன் ஆகும். மேற்கண்ட சம்பவத்தில் ஈடுப்படுத்தப்பட்டு இருப்பது பழைய தலைமுறை இ400 கேப்ரியோலெட் கார் ஆகும். இதில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 22, 2023, 16:55 [IST]
English summary
Mercedes benz e400 cabriolet car drifts on public road in indore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+