முகேஷ் அம்பானி வீட்டில் இதெல்லாம் கூட நடக்குதா? வளர்ப்பு நாய்க்கு ராஜ வாழ்க்கை.. இந்த கார் எல்லாம் நமக்கு கனவு

அம்பானி வீட்டு நாய் கூட ஏசியில் தான் படுக்கும் என பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், அது உண்மை தான் என்பதுபோல் ஒரு விஷயம் நமக்கு தெரிய வந்துள்ளது. இதை கேட்ட பலருக்கும் தூக்கி வாரிப் போட்டுள்ளது. அது என்னவென்றால், முகேஷ் அம்பானி வீட்டு வளர்ப்பு நாய்க்கு என விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது எந்த மாதிரியான கார்? அதன் விலை எவ்வளவு என்பது போன்றதான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மொத்த இந்தியாவும் பிரம்மிக்கும் வகையில் உலகின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்சண்ட்டை ஆனந்த் அம்பானி மணம் முடித்துள்ளார். இவர்களது திருமணம் கிட்டத்தட்ட 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதாவது, திருமணம் நடந்தது என்னமோ ஜூலை 12 தான். ஆனால் திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.

ambani house dog s mercedes car

இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் இந்த ஆண்டு துவக்கத்தில் துவங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் புது, புது விஷயங்கள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. முகேஷ் அம்பானியின் குடும்பம் என்றாலே விலையுயர்ந்த கார்களை அதிகளவில் பயன்படுத்துபவர்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த திருமணத்திற்காக ஒருபடி மேலே சென்று, விமானங்களை கூட விருந்தினர்களுக்காக பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால், முகேஷ் அம்பானி வீட்டு வளர்ப்பு நாய்க்கு கூட விலையுயர்ந்த கார் இருக்கும் விஷயம் உண்மையில் நாம் எதிர்பார்க்காத ஒன்றாகும். முகேஷ் அம்பானியின் வீட்டில் ஏகப்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ளன. அதில், 'ஹாப்பி' என பெயர் கொண்ட நாய் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானதாக உள்ளது. கோல்டன் ரிட்ரைவர் வகையை சார்ந்த இந்த நாயை அழகாக அலங்கரித்து, புத்தாடை உடன் திருமணத்தில் நிறுத்தி இருந்தனர்.

ambani house dog s mercedes car

வளர்ப்பு நாயை, வீட்டு திருமணத்தில் அட்டகாசமான உடை உடன் நிறுத்தி இருப்பதே முதலில் ஆச்சிரியமானது எனும்போது, இதனைவிட ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த ஹாப்பி நாயின் போக்குவரத்துக்கு என சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி400டி கார் உள்ளதாம். அதாவது, தேவைப்பட்டால் நாயை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த விலையுயர்ந்த கார் பயன்படுத்தப்படுகிறதாம்.

இந்த வகையில், அம்பானியின் வீட்டில் இருந்து ஆனந்த் அம்பானி திருமணம் நடைபெறும் இடத்திற்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி400டி காரில் ஹாப்பி நாயை கொண்டு வந்துள்ளனர். அப்போது அந்த காரை நேரில் பார்க்க முடிந்தது. அப்போது எடுக்கப்பட்ட படத்தில் வெள்ளை நிறத்திலான அந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி400டி காரை காணலாம். நாய்க்கான கார் என்றால், காரில் நாயும் டிரைவரும் மட்டும் இருக்க போவதில்லை.

ambani house dog s mercedes car

நாய் எந்தவொரு அசம்பாவிதமும் செய்துவிடாமல் இருக்க, நிச்சயமாக நாயுடன் ஒருவர் இந்த பென்ஸ் காரில் பயணிப்பார். அம்பானி குடும்பத்தினர் பல்வேறு விதமான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி கார்களை பாதுகாப்பு வாகனங்களாக கான்வேயில் பயன்படுத்துகின்றனர். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி400 காரின் அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் ஏஎம்ஜி ஜி63 ஆகும். ஆனால், ஜி400 மாடலை காட்டிலும், ஏஎம்ஜி ஜி63 ஆனது செயல்திறன்மிக்கது ஆகும். ஆதலால்தான், ஏஎம்ஜி ஜி63 காரை கான்வேயில் பயன்படுத்துகின்றனர்.

முகேஷ் அம்பானி வீட்டு வளர்ப்பு நாய் ஹாப்பியின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுவது டீசல் என்ஜினை கொண்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி400டி கார் ஆகும். இந்த பெயரின் இறுதியில் உள்ள 'டி' என்பது டீசல் என்ஜினை குறிக்கிறது. இந்த மெர்சிடிஸ் காருக்கு முன்னதாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் கார்களில் ஹாப்பி நாய் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாய்க்கு எல்லாம் பென்ஸ் காரா? இது எல்லாம் கொஞ்சம் டூ மச்சாக உள்ளது... என நீங்கள் கூறுவது புரிகிறது. ஆனால், ஆயிரக்கணக்கிலான சொகுசு கார்களை வைத்திருப்பவர் தனது செல்ல வளர்ப்பு நாய்க்கு அதில் ஒரு காரை வழங்கி இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இருப்பினும், சாதாரணமான காரை கொடுக்காமல் 3 கோடி ரூபாய் காரை வழங்கி இருப்பது கொஞ்சம் பொறாமையாக உள்ளது. ஏனெனில், இந்த காரை வாங்க வேண்டும் என்பது இந்தியாவில் செல்வந்தர்கள் பலருக்கு கூட கனவாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 18:04 [IST]
English summary
Mercedes benz g400d for ambani house dog check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X