மிகமிக மோசமான விபத்தை சந்தித்தும் இவ்ளோ கம்மியமான சேதம்தான் ஏற்பட்டுச்சா! அதிர்ஷ்டக்காரருங்க காரோட உரிமையாளர்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக உயரிய விலைக் கொண்ட சொகுசு கார் மாடல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக லக்சூரி கார் மாடல் ஆகும். இந்த காரே விபத்து ஒன்றில் சிக்கி மிக மோசமான நொறுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்களில் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி (AMG G63 SUV)யும் ஒன்றாகும். இது ஜி-வேகன் (G-Wagen) என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த சொகுசு காருக்கு இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, பாலிவுட் திரையுலகினர் மத்தியில் இந்த ஆடம்பர காருக்கு டிமாண்ட் மிக மிக அதிகம். இந்த நிலையிலேயே இந்த காரின் பில்டு குவாலிட்டி தரத்தை நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஹரியானா பதிவெண் கொண்ட அந்த சொகுசு கார் அதீத வேகத்தில் குஜராத்தின் அஹமதாபாத் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.
இந்த விபத்து சம்பவத்தின் வாயிலாகவே இந்த கார் அதிக தரமானது என்பது தெரிய வந்திருக்கின்றது. மிக மிக மோசமான விபத்து என கூறும் அளவிற்கு கொடூர விபத்தில் சிக்கிய பின்னரும் அந்த லேசன பாதிப்புகளை மட்டுமே சந்தித்து இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த காரின் வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

கட்டுக்கடங்கா வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையில் போடப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதி இருக்கின்றது. இந்த காரின் வேகத்தை தாங்க முடியாத அந்த இரும்பு ரயில்கள் மிக மோசமாக நொறுங்கி போயின. அவற்றிற்கு மட்டுமல்ல காருக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.
ஆனால், காரில் விபத்தினால் ஏற்பட்டிருக்கும் சேதத்திற்கும் அந்த இரும்பு கம்பிகள் ஏற்பட்டிருக்கும் சேதத்திற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. ஆமாங்க, கரைவிட அதிக சேதத்தை இரும்பு தடுப்புகள் சந்தித்து உள்ளன. இதே விபத்தை வேறு ஏதேனும் கார் சந்தித்து இருந்தால், அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியிருக்கக் கூடும்.
மேலும் உயிர்களையும் பலி வாங்கி இருக்கக் கூடும். ஆனால், இந்த சொகுசு காரோ மிக உறுதியாக நின்றிருக்கின்றது. மிக முக்கியமாக காருக்குள் வந்த பயணிக்கு அதிக பாதுகாப்பை வழங்கி இருக்கின்றது. காரின் முன் பக்கம் முழுமையாக டேமேஜ் ஆகி இருக்கின்றது. அத்துடன், விண்ட்ஷீல்டு நொறுங்கி இருக்கின்றது. இதைத் தாண்டி வேறு எந்த பெரிய பாதிப்பையும் அந்த கார் சந்திக்கவில்லை.
இதேபோல், காருக்குள் பயணித்தவருக்கு சிறு காயம்கூட ஏற்படவில்லை. சொல்லப் போனால் அதிர்ஷ்டவசமாக சொகுசு காரை ஓட்டி வந்தவர் உயிர் தப்பி இருக்கின்றார். இந்த காரின் உறுதித் தன்மையும், பாதுகாப்பு கவசங்களுமே அவரை காப்பாற்றி இருக்கின்றது என கூறலாம். மேலும், அவர் சம்பவத்தை அடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகின்றது.
விபத்து நள்ளிரவில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1 மணி அளவில் அரங்கேறி இருக்கலாம் என கூறப்படுகின்றது. உண்மையில் ஜி-வேகன் சொகுசு காரில் அதிக நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே அது இத்தகைய மாபெரும் விபத்தைச் சந்தித்த போதிலும் பெரிய அளவில் சேதத்தைச் சந்திக்காமல் இருக்கின்றது.
முகப்பு பகுதி முழுமையாக உருக்குலைந்த போதிலும் அதன் பான்னெட்கூட அப்படியே இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இத்தகைய பாதுகாப்ப திறனையே பென்ஸ் ஜே-வேகனுக்கு கொடுத்திருக்கின்றது. இத்தகைய அதீத பாதுகாப்பு திறன் அதிக விலைக் கொண்ட கார்களில் மட்டும்தான் கிடைக்குமா என்று கேட்டால், எங்களின் பதில் 'இல்லை' என்பதாகும்.
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் மலிவு விலை கார்களையே இதுபோன்று அதீத பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டதாக உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, டாடாவின் நெக்ஸான் பாதுகாப்பிற்கு பெயர்போனதாக இருக்கின்றது. இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது.
இந்த கார் மட்டுமில்லைங்க நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான பஞ்ச், அல்ட்ராஸ், டிகோர், டியாகோ, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களும் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டவையாக இருக்கின்றன. தற்போத விபத்தைச் சந்தித்து இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் சொகுசு கார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரில் அதீத திறனை வெளிப்படுத்தக் கூடிய 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையே பென்ஸ் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 577 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதனால் வெறும் 5 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய சூப்பரான அதிக வேகமே தற்போது அந்த கார் விபத்தைச் சந்திக்க காரணமாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பு திறன்மிக்க கார்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, டாடாவின் நெக்ஸான் ஏழைகளுக்கான அதிக பாதுகாப்பை வழங்கும் கார் மாடலாக இருக்கின்றது. இது விலை உயர்ந்த கார்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இரும்புப் பெட்டகம் போல் பாதுகாப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications