எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... மலைக்க வைக்கும் விலை...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் 'தடுப்பு சுவர்' என அனைவராலும் புகழப்படுபவர் ராகுல் டிராவிட். கிரிக்கெட் வாழ்க்கையில் ராகுல் டிராவிட் படைத்த சாதனைகள் ஏராளம். கிரிக்கெட் களத்திற்குள் ஒரு வீரர் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கு ராகுல் டிராவிட் ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட் களத்திற்கு உள்ளே மட்டுமல்ல. வெளியேயும் ஒழுக்கத்தில் டிராவிட்டிற்கு நிகர் டிராவிட்தான்.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

அத்துடன் எளிமையான வாழ்க்கைக்காவும் ராகுல் டிராவிட் அறியப்படுகிறார். இந்த சூழலில் ராகுல் டிராவிட் தற்போது புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ராகுல் டிராவிட் கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை தேர்வு செய்துள்ளார்.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

சாலைகளில் வரும்போது இது மிரட்டலாக காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாலிவுட் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத்தும் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே காரை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெலிவரி எடுத்தபோது, அவர் காருடன் போஸ் கொடுத்தார்.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

அதேபோல் ராகுல் டிராவிட்டும் புதிய காரை டெலிவரி எடுத்தபோது அதனுடன் அட்டகாசமாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அத்துடன் காருக்குள் வைத்து ராகுல் டிராவிட் கேக்கும் வெட்டியுள்ளார். பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ராகுல் டிராவிட்டின் ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் இந்திய மார்க்கெட்டில் சமீப காலமாக மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. பிரபல நடிகர்களான சல்மான் கான், ஷாகித் கபூர் மற்றும் நடிகை ஹுமா குரேஷி ஆகியோர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை வைத்துள்ளனர். இதில், சல்மான் கான், ஷாகித் கபூர் ஆகியோரிடம் ஹை-பெர்ஃபார்மென்ஸ் ஜிஎல்இ 43ஏஎம்ஜி உள்ளது.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

இதுதான் அதிக சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே வேண்டாம். இதன் பிராண்டு வேல்யூ மிகவும் அதிகம். அத்துடன் இதன் இன்டீரியரில் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த எஸ்யூவி காரில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. இதன் பேஸ் மாடலில், 2.1 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்ததாக திகழ்கிறது.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜிஎல்இ காரின் நடுத்தர வேரியண்ட்டில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 333 பிஎச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதே சமயம் ஜிஎல்இ எஸ்யூவி காரின் டாப் எண்ட் வேரியண்ட் 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜினை பெற்றுள்ளது.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 255 பிஎச்பி பவர் மற்றும் 620 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது. இந்த மூன்று இன்ஜின் ஆப்ஷன்களும் ஸ்டாண்டர்டு 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வருகின்றன. இதனிடையே ராகுல் டிராவிட் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் விலை 61.75 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது 250டி (250D) பேஸ் வெர்ஷனின் விலையாகும். அதே சமயம் டாப் எண்ட் 350ஜி (350G) வேரியண்ட்டின் விலை 77.82 லட்ச ரூபாய். இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமைக்கு பெயர் பெற்ற ராகுல் டிராவிட் மிரட்டலான சொகுசு காரை வாங்கினார்... விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார்தான் ராகுல் டிராவிட்டின் முதல் சொகுசு கார் என நினைத்து விட வேண்டாம். ஆடி க்யூ5 லக்ஸரி எஸ்யூவி (Audi Q5) மற்றும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் செடான் (BMW 5-Series) உள்ளிட்ட கார்களை ராகுல் டிராவிட் ஏற்கனவே வைத்துள்ளார். எனினும் அவர் சொந்தமாக்கும் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார் இதுவே.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2019, 7:00 [IST]
English summary
Mercedes Benz GLE Luxury SUV Added To Rahul Dravid Car Collection. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+