மெர்சிடிஸ் ஏ 45 ஏஎம்ஜி காரும், ஸ்கேட்டிங் வீரருக்கும் இடையிலான சவால்!
மனிதனும், எந்திரமும் என்ற தாத்பரியத்துடன் ஏ 45 ஏஎம்ஜி காரை வைத்து மெர்சிடிஸ் பென்ஸ் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஸ்கேட்டிங் வீரர் டேசியோ லூரென்கோவும், பென்ஸ் ஏ 45 ஏஎம்ஜி காரும் மலைப் பாதையில் போட்டிப் போட்டு செல்லும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது இந்த வீடியோ.
இந்த போட்டியின் இறுதியில் லூரென்கோ முந்திவிடுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, மலைப் பாதையில் வேகமாக இறங்கியது போன்று, திரும்பவும் ஏற முடியாது என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ முடிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் அந்த கார் மலை மீது வேகமாக ஏறுவது போன்றும், மனிதனைவிட எந்திரமே பெரிது என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. கீழே போறது ரொம்ப ஈஸி.. ஆனால், மேலே போறது ரொம்ப கஷ்டமாம்... வாழ்க்கையிலும்தான்...!!!
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/n_oGSt0r49g?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








