எஞ்சின் பிரச்னை... ஆத்திரத்தில் பென்ஸ் காரை கோல்ஃப் ஸ்டிக்கால் கொத்தி எடுத்த உரிமையாளர்!
சீனாவில், எஞ்சின் பிரச்னையை சரிசெய்து தராத டீலரின் மீது ஏற்பட்ட அதிருப்தியில், தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரை கோல்ஃப் ஸ்டிக்கால் அதன் உரிமையாளர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீலர்ஷிப் வாசலில் அந்த காரை நிறுத்தி தனது ஆத்திரம் தீரும் வரை தனது காரை அடித்து உடைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் மாடல்
இந்திய மதிப்பில் 2.6 கோடி மதிப்பு கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி கார்தான் தனது எஜமானரின் தாக்குதலில் சின்னாபின்னமானது.

டீலர் விபரம்
சீனாவின் குவாங்ஸோ நகரில் உள்ள சின் சங் மோட்டார்ஸ் என்ற டீலரில், அந்த நகரத்தை சேர்ந்த 33வயது நபர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி காரை வாங்கியிருக்கிறார். அந்த கார் வாங்கியது முதல் எஞ்சினில் பிரச்னை இருந்துள்ளது.

எஞ்சின் பிரச்னை
ஏற்கனவே அந்த காரின் எஞ்சினில் 3 முறை பிரச்னை ஏற்பட்டு நடுவழியில் நிறுத்திவிட்டதாம். இதனால், அதிருப்தியடைந்த அவரை டீலர் உரிமையாளர் சமாதானப்படுத்தி, அடுத்த முறை பிரச்னை ஏற்பட்டால் காரை திரும்ப எடுத்துக் கொண்டு பணத்தை திருப்பி தருவதாக கூறியிருக்கிறார்.

மீண்டும் பிரச்னை...
இந்த நிலையில், சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் அந்த காரில் அந்த உரிமையாளர் சென்றிருக்கிறார். அப்போது, எஞ்சினில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர் நேராக டீலருக்கு சென்றுள்ளார். டீலரில் இருந்தவர்கள் உரிமையாளர் அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார். வந்தவுடன்தான் தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
Recommended Video


ஆத்திரம்
இதனால், கடும் வெறுப்பும் ஆத்திரமும் அடைந்த அந்த காரின் உரிமையாளர் வாசலில் அந்த காரை நிறுத்திவிட்டு, கோல்ஃப் ஸ்டிக்கால் அடித்து நொறுக்கினார். இதில், அந்த கார் கடுமையாக சேதமடைந்தது.

மதிப்பு
கடுமையாக சேதமடைந்த அந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி கார் இந்திய மதிப்பில் 2.6 கோடி விலை கொண்டது. இருந்தாலும், காரில் ஏற்பட்ட பிரச்னை அவரை இந்தளவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications