ஹாலிவுட் படமே தோத்துடும்! காஸ்ட்லியான காரில் வந்து சினிமா ஸ்டைலில் வித்தை காட்டியவருக்கு ரூ54 ஆயிரம் அபராதம்!
ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி விட்டால் அதில் டிரிஃப்டிங் செய்வது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். இது கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு குதூகலமான அனுபவத்தை தரும் என்பதால் பலர் இதை முயற்சி செய்ய நினைப்பார்கள். இந்த டிரிஃப்டிங் எல்லாம் தனியாக பிரைவேட் சாலைகளில் செய்தால் நிச்சயம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் இதை பொதுசாலைகளில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி காஸ்ட்லியான கார் ஒன்றில் டிரிஃப்டிங் செய்து ஒருவர் ரூபாய் 54,000 அபராதம் கட்டிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றை டிரைவர் ஒருவர் டிரிஃப்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோவை பார்க்கும் போது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகத்திறமையாக டிரிஃப்டிங் செய்தார். ஆனால் இவர் பொதுசாலையில் செய்ததால் இவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் அவர் பழைய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரை டிரிஃப்டிங் செய்வதற்காக பயன்படுத்தி உள்ளார். இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நொய்டாவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. முதலில் ஆன்டி கிளாக் முறையில் இவர் டிரிஃப்டிங் செய்தார். அதன் பின்னர் இவர் தனது ஸ்டிரீங் வீலை மாற்றி கிளாஸ் வைஸ் முறையில் டிரிஃப்டிங் செய்தார்.அதிர்ஷ்டவசமாக இந்த டிரிஃப்டிங் செய்யும்போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை.
சிறப்பாக டிரிஃப்டிங் செய்தாலும் இது பொது சாலையில் நடந்ததால் இது ஒரு அபாயகரமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்த காரை ஓட்டிய டிரைவருக்கு ரூபாய் 54 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று பலர் டிரிஃப்டிங் செய்ய ஆசைப்படுகிறார்கள். இதை புதுசாலையில் செய்யக்கூடாது. இது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. அவர்களுக்கெல்லாம் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் வகையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கார்களில் டிரிஃப்டிங் செய்வது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது. கார் ஓட்டும் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். அதே நேரம் கார்களை பற்றிய புரிதலும் சிறப்பாக இருந்தால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். இன்று இளைஞர்கள் பல டிரிஃப்டிங் குறித்த பெரிய புரிதல், விழிப்புணர்வு இல்லாமலும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். இதனால் அவர்கள் கார் விபத்தில் சிக்குகிறது இது சமீப காலமாக பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
இப்படியாக டிரிஃப்டிங் செய்து வீடியோ வெளியிடும் சம்பவம் இது ஒன்றும் முதல் முறையில்ல. கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஹூண்டாய் வெர்னா காரை ஒருவர் டிரிஃப்டிங் செய்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அடுத்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலை தினங்களில் பதிலாக பரவி வருகிறது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் கார் டிரிஃப்டிங் என்பது ஒரு பொழுதுபோக்காகவும் ஃபன்னான விஷயமாக மட்டும் பார்க்கப்படுகிறது .இது ஒரு தனித்துவமான ஸ்கில் என்றாலும், இதே பொது சாலையில் செய்யக்கூடாது. இதில் ஆபத்து இருக்கிறது. பொது சாலையில் பலர் டிரிஃப்டிங் முயற்சி செய்து விபத்தில் சிக்கி விடுகிறார்கள். இதனால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரிஃப்டிங் என்பது கார் ஓட்டுபவர்களுக்கு தனிப்பட்ட ஒரு ஸ்கில் தான் இதை செய்வது மண்ணாகவும் இருக்கும். அதே நேரத்தில் ரிஸ்க் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் தனியாக ஒரு இடத்தில் தான் செய்ய வேண்டும் .பொது சாலைகளில் இதை செய்ய அனுமதி கிடையாது. தனியாக பிரைவேட் சாலைகளில் டிரிஃப்டிங் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம் ட்ரிப் செய்வதற்கு டிஃப்ட் பேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று உங்கள் காரில் டிரிஃப்டிங் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









