வயசு வெறும் 33 தான்... இந்தியாவின் யங் மெர்சிடிஸ்-மேபக் கார் ஓனர் - தொழிலில் அசூர வளர்ச்சினா இதுதான்!!
வெறும் 33 வயதில் மும்பையை சேர்ந்த நபர் மிகவும் இளமையான வயதில் இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 (Mercedes-Maybach S680) சொகுசு காரை வாங்கியுள்ளார். யார் அந்த நபர்? அவர் வாங்கியுள்ள சொகுசு மேபக் காரில் அப்படி என்னென்ன அம்சங்கள் உள்ளன? என்பதை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸின் கார்கள் பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என 3 விதமான பிரிவுகளின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மேபக் கார்கள் கூடுதல் லக்சரி தரத்தில் விலைமிக்கவைகளாக விளங்குகின்றன. அதிலிலும் குறிப்பாக, மேபக் எஸ்-கிளாஸ் உலகளவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலைமிக்க மெர்சிடிஸ் காராக உள்ளது.

மேபக் எஸ்-கிளாஸ் ஆனது வழக்கமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் செடான் காரின் கூடுதல் லக்சரி தரத்திலான வெர்சன் ஆகும். வழக்கமான மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களே சொகுசு வசதிகள் மிகுந்தவை எனும்போது, அவற்றின் லக்சரி வெர்சன்களாக மேபக் கார்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். மேபக் காரின் வெளிப்பக்கத்தில் இருந்து உட்பக்க கேபின் வரையில் அனைத்து பகுதிகளும் பளபளப்பான தோற்றத்தில் மின்னும்.
இதனாலேயே மெர்சிடிஸ்-மேபக் கார்களை பலரால் வாங்க முடிவதில்லை. அல்லது பெரும் தொழிலதிபர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. ஆனால், மும்பையை சேர்ந்த 33 வயதான ஐஐடி பட்டதாரி ஒருவர் சமீபத்தில் மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அபிஷேக் 'மோண்டி' அகர்வால் என பெயர் கொண்ட அந்த நபர் வாங்கியிருப்பது மேபக் எஸ்-கிளாஸ் காரின் எஸ்680 வேரியண்ட் ஆகும்.

இத்தகைய காரை வாங்கியிருப்பதன் மூலம், இந்தியாவிலேயே இளம் வயதில் மெர்சிடிஸ்-மேபக் செடான் கார் ஒன்றை வாங்கிய நபராக அபிஷேக் அகர்வால் விளங்குகிறார். இந்தியாவின் பெரிய ஃபேஷன் நிறுவனங்களுள் ஒன்றான பர்பிள் ஸ்டைல் லேப்ஸின் நிறுவனர் அபிஷேக் அகர்வால் ஆவார். மேலே குறிப்பிட்ட மேபக் காரை இவர் மும்பையில் டெலிவிரி எடுத்துள்ளார். அபிஷேக் மேபக் எஸ்680 காரை டெலிவிரி எடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த படங்களை புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் பயானி க்ளிக் செய்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாவில் பதிவிடுவதற்கான புகைப்படங்களுக்கே இவ்வளவு செலவு செய்துள்ள அபிஷேக் அகர்வால், காரின் நம்பர் பிளேட் விஷயத்தில் இதனை காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார். இந்த புதிய காருக்கு பாரத் பதிவெண் பிளேட்டை வழங்கியுள்ளார். இதனால் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திற்கும், எந்தவொரு யூனியன் பிரதேசங்களுக்கும் எந்தவொரு பிரச்சனையும் இன்றி இந்த காரை எடுத்து செல்ல முடியும்.

வழக்கமான நம்பர் பிளேட்டை வாங்கினால், வேறொரு மாநிலத்திற்கு மொத்தமாக குடிபெயரும் போது பதிவெண்ணை மாற்ற வேண்டி இருக்கும். ஆனால் பாரத் நம்பர் பிளேட்டை பெற்றால், அவ்வாறான பிரச்சனை இருக்காது. அபிஷேக் அகர்வால் இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் அளவிற்கு மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 காரில் ஏகப்பட்ட லக்சரி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து பெற்று கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பரபரப்பான மும்பையில் ஓர் மிக பெரும் ஃபேஷன் அலங்கார நிறுவனத்தை வைத்துள்ளவர் இவ்வாறான விலைமிக்க சொகுசு காரை வாங்குவதில் ஆச்சிரியமில்லை. ஆனால் அத்தகைய நிலைமையை வெறும் 33 வயதில் இந்த நபர் எட்டியிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த மும்பை நபர் வாங்கி இருக்கும் மேபக் 680 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.3.80 கோடி ஆகும். ஆன்-ரோடு விலை ரூ.4.50 கோடியை நெருங்கும்.


Click it and Unblock the Notifications
