காரை ரோட்டோரம் பார்க் பண்ணா இப்படிலாம் கூட ஆகுமா! பெருசா காசு பாக்க ஆசைப்பட்ட போலீஸ்.. கடைசில நடந்ததோ வேற!!

கார் உரிமையாளர்கள் சந்தித்து வரும் மிக மோசமான பிரச்னைகளில் ஒன்று பார்க்கிங். குறிப்பாக, நகரங்களில் வசிப்பவர்களே இந்த சிக்கலுக்கு அதிகம் ஆளாகின்றனர். அதேவேளையில், முறையற்ற பார்க்கிங்கே பல்வேறு போக்குவரத்து பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் இங்கே ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதனாலேயே முறையற்ற பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே முறையற்ற பார்க்கிங் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஓர் போலீஸ் கான்ஸ்டபிள் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட முயற்சித்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

இந்த நிகழ்வு நகர காவல் ஆணையர் வரைக்கு பஞ்சாயத்துக்கு சென்று தற்போது அதில் தீர்வு காணப்பட்டு இருக்கின்றது. குஜராத் மாநிலம் வதோதரா-விலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மெர்குரி இவி (Mercury EV), நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயேஷ் தாக்கர் இவரே போலீஸாரால் பாதிப்பிற்குள்ளாகியவர் ஆவார்.

Mercedes s-class seized for wrong parking

Source இவருக்கு சொந்தமாக இருக்கும் கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes-Benz S-Class)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.79 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரையே முறையற்ற பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டதாகக் கூறி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பறிமுதல் செய்திருக்கின்றார்.

மேலும், காரை விடுவிக்க ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கின்றார். மேலும், உயர் அதிகாரியான ஏசிபி டிஎம் வியாஷை சந்திக்கும்படியும் அவர் கூறியிருக்கின்றார். அப்போது ஏசிபி டிஎம் வியாஷ், உங்கள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது என கூறி பென்ஸ் காரின் உரிமையாளரை அதிரவிட்டிருக்கின்றார்.

இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான பென்ஸ் காரின் உரிமையாளர் போலீஸாரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அது தோல்வி அடைந்தது. காவலர்கள் அந்த காரை காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் மட்டுமே அந்த சொகுசு காரை விடுவிப்போம் என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர்.

இதற்கிடையில் மிகப் பெரிய வாக்குவாதம் காரின் உரிமையாளர் மற்றும் போலீஸ் இடையே நடைபெற்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே மெர்குரி இவி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயேஷ் தாக்கர், கடைசியாக நிகழ்வுகுறித்து நகர காவல் ஆணையரிடத்தில் முறையிட்டிருக்கின்றார். தங்கள் தரப்பில் இருந்த நியாயங்கள் சிலவற்றை அவர் எடுத்துரைத்திருக்கின்றார்.

போக்குவரத்திற்கு இடையூறாக கார் நிறுத்தப்படவில்லை. தன்னை பிக்-அப் செய்ய வரும்போது சில நிமிடங்கள் மட்டுமே கார் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஏசிபி வியாஷ், அந்த காரில் இருந்த ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியாக தெரிவித்தார்.

இதற்கு பின்னரே கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த போலீஸ் கூறினார். இந்த நிலையிலேயே காவலர் மற்றும் சொகுசு கார் உரிமையாளரை சமாதானம் செய்து காவல் ஆணையர், காரை விடுவிக்கும்படி உத்தரவிட்டார். இறுதியாக அந்த ரெண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காரை சாலையோரத்தில் நிறுத்தியதற்காக இவ்வளவு பெரிய அக்கப்போரா என நீங்கள் கேட்கலாம். இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் நிலவக் கூடிய மிகப் பெரிய சிக்கலாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கக் கூடிய முக்கியமானவற்றில் முறையற்ற பார்க்கிங்கும் ஒன்றாகும். இதனால்தான் மிகப் பெரிய தொகை முறையற்ற பார்க்கிங் செய்யப்படும் வாகங்களுக்கு அபராதமாக போலீஸார் விதிக்கின்றனர். எனவே சாலையில் வாகனங்களை நிறுத்தும்போது சற்றே யோசித்து நிறுத்துவது நல்லது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 14:10 [IST]
English summary
Mercedes s class owned by mercury ev founder seized for wrong parking in gujarat
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+