118மீ நீளமுள்ள சொகுசு படகை வாங்கிய ஃபேஸ்புக் ஓனர்.. இது கப்பலா இல்ல மிதக்கும் அரண்மனையா! வீடே தேவைப்படாது போல!

மெட்டா (Meta) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன மார்க் சுக்கர்பெர்க் சொந்தமாக ஓர் பிரமாண்ட சொகுசு படகை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருக்கும் அந்த படகின் நீளம் 118 மீட்டர் நீளம் கொண்டது என கூறப்படுகின்றது. அரண்மனைகளுக்கு டஃப் கொடுக்கும் வசதியையும் இந்த படகு தாங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

படகு என்ற உடன் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் சாதாரணமான விசைப்படகு என நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஓர் பிரமாண்ட தோற்றம் கொண்ட படகாகும். தோற்றத்தில் மட்டுமின்றி சிறப்பு வசதிகளிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையிலேயே அந்த படகு இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பெரிய பெரிய க்ரூஸ் கப்பல்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்த படகின் சிறப்பம்சங்கள் இருக்கும்.

Mark zuckrberg magayacht

இத்தகைய மெகா சைஸ் படகையே மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான மார்க் சுக்கர்பெர்க் தற்போது வாங்கி இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல் வெளியிட்டு இருக்கின்றது. மேலும், அந்த படகின் நீளம் மட்டுமே 118 மீட்டர் என கூறப்படுகின்றது. அதாவது 387 அடி நீளம் கொண்டதாகும்.

மேலும், இந்த மெகா சைஸ் அளவுள்ள படகை மார்க் சுக்கர்பெர்க் ப்ளோரிடாவில் உள்ள கோட்டைக்கு அருகில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பல் லாஞ்ச்பேட் (Launchpad Yacht) என்று அழைக்கப்படுகின்றது. இந்த 118 மீட்டர் நீளமுள்ள படகு சமீபத்தில் ஜிப்ரால்டரில் இருந்து செயிண்ட் மார்டனுக்கு அதன் முதல் பயணத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது.

உலக செல்வந்தர்கள் பலர் இதுபோன்ற மெகா சைஸ் படகுகளை தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அமேசான் சேர்மேன் ஜெஃப் பெசோஸ், கூகுளின் இணை நிறுவனர் சர்கே பிரின், ஓராக்கிள் இணை நிறுவனர் லேரி எல்லிசன் மற்றும் லேரி பேஜ் உள்ளிட்டோர் சொகுசு அம்சங்கள் நிறைந்த மெகா சைஸ் படகை பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களின் வரிசையிலேயே தற்போது மார்க் சுக்கர்பெர்க்-ம் இணைந்திருக்கின்றார். அதேவேளையில், இவரிடத்தில் ஏற்கனவே யுலிஸ்செஸ் எனும் அதிக சொகுசு படகு ஒன்று பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது சற்று சிறியதாகவும், இதைவிட மிக மிக பெரியதான லான்ச்பேட்-டையே அவர் தற்போது வாங்கி இருக்கின்றார்.

ஆனால், இதைவிட ஜெஃப் பெசோஸ் வைத்திருக்கும் படகு மிக பெரியது ஆகும். மார்க் சுக்கர்பெர்க்கின் மெகா சைஸ் படகைவிட 9 மீட்டர் அதிக நீளம் கொண்டது அது என்பது குறிப்பிடத்தகுந்தது. மார்க் சுக்கர்பெர்க் இந்த படகை எவ்வளவு கொடுத்து வாங்கி இருக்கின்றார் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை.

சொகுசு படகை தயாரித்த ஃபீட்ஷிப் (Feadship)-பும் இதுபற்றிய தகவலை பகிர்ந்துக் கொள்ளவில்லை. இது ஓர் நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசு படகு தயாரிப்பு நிறுவனம் ஆகும். புதிய லான்ச்பேட் சொகுசு படகின் வெளிப்புறத்தை எஸ்பென் இனோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனமும், உட்பக்கத்தை ஜூரெட்டி இன்டீரியர் டிசைன் நிறுவனமுமே வடிவமைத்திருக்கின்றது.

படகின் கட்டுமானத்தில் முழுக்க முழுக்க ஸ்டீல் மற்றும் அலுமினியமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், 4 எம்டியூ எஞ்சின்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் டாப் ஸ்பீடு 24 நாட்டிக்கல் ஆகும். உலகின் தலைசிறந்த சூப்பர் படகுகளில் இந்த படகு 45வது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த படகில் என்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கலாம். நாம் நம்ப முடியாத அளவிற்கு அதில் சிறப்பம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் ஃபீட்ஷிப் வழங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், துள்ளியமான அம்சங்கள் விபரத்தை அது வெளியிடவில்லை. அதேநேரத்தில், இதில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் அரண்மனைக்கே டஃப் கொடுக்குமாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 5:00 [IST]
English summary
Meta ceo mark zuckerberg buys 118 meter megayacht launchpad
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+