சீனாவை போல ஆகபோகுது நம்ம சென்னை.. கட்டிடங்களுக்கு நடுவுல புகுந்து போக இருக்கும் சென்னை மெட்ரோ ரயில்கள்!
கட்டிடங்களுக்கு இடையில் ரயில்கள் புகுந்து பயணிப்பதை நாம் இதுவரை வெளிநாடுகளிலேயே பார்த்திருப்போம். முதல் முறையாக இந்தியாவிலும் இந்த மாதிரியான சேவை பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. அதுவும் நம்முடைய சென்னையில் இதுபோன்ற ரயில்களை நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.
கட்டிடங்களுக்கு இடையில் ரயில் புகந்து பயணிப்பதை நாம் இதுவரை வெளிநாடுகளிலேயே பார்த்திருப்போம். குறிப்பாக, சீனாவிலேயே இதுபோன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையில் அவை புகுந்து பயணிக்கும். இந்த மாதிரியான ஓர் நிகழ்வையே விரைவில் இந்தியாவிலும் நம்மால் காண முடியும்.

இதனை உருவாக்கும் பணியிலேயே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது களமிறங்கி இறுக்கின்றது. சென்னை மெட்ரோ நம்முடைய சென்னையிலும் இதுபோன்று மெட்ரோ ரயில்கள் கட்டிடங்களுக்கு இடையில் புகுந்து பயணிக்கும் என்று அறிவித்து இருக்கின்றது. சென்னையில் கட்டம் 2 மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் சுமார் மூன்று பகுதிகளில் இதுபோன்று ரயில்கள் கட்டிடங்களுக்கு இடையில் பகுந்து பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக 12 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. ஒன்று திருமங்கலத்தில் இடம் பெறும் என்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது.

இந்த 12 அடுக்குமாடி கட்டிடங்களின் 3 தளத்திலேயே ரயில்கள் உள்ளே நுழைந்து பயணிக்க இருக்கின்றன. இந்த கட்டிடங்கள் எப்படி இருக்கும், ரயில்கள் எப்படி உள்ளே நுழைந்து பயணிக்கும் என்பது பற்றிய கான்செப்ட் படங்களையே தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கின்றது.
திருமங்கலத்தை அடுத்து கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகிய பகுதிகளிலேயே ரயில்கள் 12 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையில் புகுந்து பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், இந்த 12 அடுக்குமாடி கட்டிடங்கள் குடியிருப்பாக இருக்காது என்றும், அவை மெட்ரோ நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக மட்டுமே இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதேவேளையில், காஃபி ஷாப் மற்றும் பிற குட்டி குட்டி கடைகள் போன்றவற்றை அதில் எதிர்பார்க்கலாம். பயணிகளுக்கு உதவும் விதமாக சில அத்தியாவசிய வசதிகளையும் அந்த கட்டிடங்களில் சென்னை மெட்ரோ ரயில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இந்த கட்டிடங்கள் பொதுப் போக்குவரத்திற்கான ஓர் மேடையாகவும் செயல்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல மேம்பாட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, எதிர்காலத்தை நோக்கியும் இந்த கட்டிடத்தின் அமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில், இந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் இடங்கள் காலி மனையாக இருக்கும் படி செய்யப்பட உள்ளன.
குறிப்பாக, கோயம்பேடு கட்டம் 1இல் அமைக்கப்பட்ட நிலையங்களுக்கு மேலே கட்டம் 2க்கான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. அங்கேயே பெரிய அளவில் காலி மனைகளை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இங்கிருந்து ஆவடிக்கு மூன்றாவது வழித்தடத்தை உருவாக்க இது பெரும் உதவியாக இருக்கும்.
குறிப்பாக, மூன்று வழித்தடங்களையும் இணைக்கும் பாதை இங்கு அமைக்கப்பட உள்ளது. கட்டம் இரண்டின்கீழ் உருவாக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையானது சுமார் 116.1 கிமீ தூரத்தைக் கொண்டது. மூன்று தாழ்வாரங்களாக இது கட்டப்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்த 118 நிறுத்தங்கள் இதில் இருக்கும்.
சோழிங்க நல்லூர் - கோயம்பேடு - மாதாவரம், பூந்தமல்லி - கோயம்பேடு - கலங்கரை விளக்கம், சிருசேரி - சோழிங்கநல்லூர் - திருமயிலை- மாதாவரம் எனும் ரூட்களிலேயே கட்டம் 2 மெட்ரோ ரயில் சேவை வாயிலாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டமானது பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாக இருக்கப் போகின்றது. ஆளில்லாமல் இயங்குவது, கூவம் ஆற்றுக்கு அடியில் பயணிப்பது மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் புகுந்து பயணிப்பது என பல ஆச்சரியங்களை அது தாங்கி இருக்க போகின்றது.


Click it and Unblock the Notifications









