எல்லார் முன்னாடியும் 2 பொண்ணுங்க செய்யற காரியமா இது! கண்ட்ரோல் பண்ண முடியாம நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி!

கடந்த சில நாட்களாக பொது இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் பல்வேறு விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில்களில் (Metro Trains) நடக்க கூடிய சம்பவங்கள், நாம் எங்கே சென்று கொண்டுள்ளோம்? என்ற கேள்வியை மனதில் எழுப்புவையாக உள்ளன.

சமீபத்தில் வெளியான ஒரு வைரல் வீடியோவில் (Viral Video), ஒரு காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபடுவதை நம்மால் காண முடிந்தது. எதோ படுக்கை அறையில் இருப்பதை போன்று, அவர்கள் இருவரும் கட்டியணைத்து கொண்டும், முத்தமிட்டு கொண்டும் பயணம் செய்தனர். ஆனால் டெல்லி மெட்ரோ ரயில்களில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல.

Metro Turns Battleground

கடந்த காலங்களிலும் காதல் ஜோடிகள், டெல்லி மெட்ரோ ரயில்களை படுக்கை அறையாக மாற்றியுள்ளனர். இந்த சூழலில் டெல்லி மெட்ரோ ரயிலில் தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவமும், நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோவில், 2 பெண்கள் கடுமையாக சண்டையிட்டு கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

முந்தைய காலங்களில் காதல் ஜோடிகள் டெல்லி மெட்ரோ ரயில்களை படுக்கை அறையாக மாற்றிய நிலையில், இவர்கள் இருவரும் போர்க்களமாக மாற்றியுள்ளனர். இவர்களுக்கு இடையே ஏன் சண்டை ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவது நமக்கு தெரிகிறது.

Metro Turns Battleground

இதில் ஒரு பெண் காலில் அணிந்திருந்த ஷூ-வை கழற்றி மற்றொரு பெண்ணை மிரட்டுகிறார். அந்த பெண்ணோ, கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொண்டு சண்டை செய்கிறார். வீடியோவின் இறுதியில், அவர் மற்றொரு பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றுவதையும் நம்மால் காண முடிகிறது.

மெட்ரோ ரயில் மற்றும் பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்து தரப்பினரும் பயணம் செய்ய கூடியது. அங்கு இதுபோன்ற முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தால், பொது போக்குவரத்து முறையை பலர் வெறுக்க கூடும். அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிறைய பேர் இப்படி செய்யும்பட்சத்தில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விடும். இந்திய சாலைகளில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி கொண்டுள்ளது. இதன் காரணமாகதான் சொந்த வாகனங்களுக்கு பதிலாக, முடிந்த வரை பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தும்படி, மக்களை அரசு வலியுறுத்தி வருகிறது.

அப்படி இருக்கும்போது, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால், மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து மீதான ஆர்வம் குறையக்கூடும். எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் முகம் சுழிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் மட்டுமல்லாது, சொந்த வாகனங்களில் கூட தற்போது பலர் அநாகரீகமாக நடந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 2 இளம்பெண்கள் டூவீலரில் முத்தமிட்டு கொண்டு பயணம் செய்ததை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இதை தொடர்ந்து, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, 2 இளைஞர்கள் டூவீலரில் முத்தமிட்டு கொண்டு பயணம் செய்தனர். சரியாகதான் படித்துள்ளீர்கள். முதல் சம்பவத்தில் 2 இளம்பெண்களும், 2வது சம்பவத்தில் 2 இளைஞர்களும்தான் முத்தமிட்டு கொண்டு டூவீலரில் பயணம் செய்தனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை.

இத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தலைவிரித்தாட தொடங்கி விடும் என்பதை அரசு அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். அத்துடன் இத்தகைய சம்பவங்கள் சாலை விபத்துக்கள் மற்றும் பயணங்களில் இடையூறு ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 13:24 [IST]
English summary
Metro turns battleground as two women involved in brawl viral video details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+