உலகின் பணக்கார நிழல் உலக தாதா எல் சாப்போவின் கார்கள்!

அமெரிக்க கண்டத்தை ஆட்டி படைக்கும் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான கஸ்மேன் சிறையிலிருந்து மீண்டும் தப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் 50 மில்லியன் டாலர் செலவில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அவன் தங்கியிருந்த சிறை அறைக்கு சுரங்கம் அமைத்து சினிமா பாணியில் அவன் தப்பியுள்ளான். பல அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி சிறையிலிருந்து அவன் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், நிழல் உலகிலிருந்து செயல்படும் அவன் மிக மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த கஸ்மேன் கார்களை மெக்ஸிகோ அரசு பறிமுதல் செய்தது. அதில், கிட்டத்தட்ட அவன் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கார்களில் பெரும்பாலானவை குண்டு துளைக்காத பாதுகாப்பு அம்சம் கொண்டது. இது ஒரு சின்ன சாம்பிள்தானாம்.

அவனிடம் பல பாதாள பங்களாக்கள் உள்ளதாம். அதிலும் பல நூற்றுக்கணக்கான கார்கள் இருக்கின்றனவாம். இந்த நிலையில், அவன் கைது செய்யப்பட்டபோது ஒரு வீட்டில் இருந்து மட்டும் 43 கார்களை மெக்சிகோ போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் முக்கியமான கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 செவர்லே கார்கள்

செவர்லே கார்கள்

குண்டு துளைக்காத செவர்லே கேப்டிவா, செவர்லே செயென் கார்கள். நான்கு டாட்ஜ் ராம் பிக்கப் டிரக்குகள், டாட்ஜ் சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜீப் பிராண்டு

ஜீப் பிராண்டு

4 ஜீப் செரோக்கீ எஸ்யூவிகள், ஒரு ஜீப் லிபர்டி, இரண்டு ஜீப் ரேங்க்லர், ஜீப் கமான்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு ஃபோர்டு லோபோ பிக்கப் டிரக்குகளும் உண்டு. இவை அனைத்தும் குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்டவை.

 மெர்சிடிஸ் பிராண்டு

மெர்சிடிஸ் பிராண்டு

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டுதான் சொகுசு கார்களில் பிடித்தமானது போலிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, மெர்சிடிஸ் பென்ஸ் சி63 ஏஎம்ஜி பிளாக் சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, மெர்சிடிஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி மற்றும் மெக்லாரன் மெர்சிடிஸ் எஸ்எல்ஆர், நிசான் ஜிடிஆர், நிசான் ஃப்ரான்டியர் ஆகியவையும் பறிமுதல் பட்டியலில் அடங்கும்.

கார்வெட் கார்கள்

கார்வெட் கார்கள்

செவர்லே கார்வெட் இசட்ஆர்1 மற்றும் செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே கார்களும் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

டுகாட்டி பைக்

டுகாட்டி பைக்

எந்நேரமும் பாதுகாவலர்கள் புடை சூழ வரும் கஸ்மேனின் வீட்டிலிருந்து டுகா்டடி ஹைப்பர்மோட்டார்ட் 1100 பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இது அவன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுக்கு ஓட்டம்

வெளிநாட்டுக்கு ஓட்டம்

அமெரிக்காவின் போதை மருந்து மார்க்கெட்டில் 25 சதவீதம் கஸ்மேன் கட்டுப்பாட்டில் உள்ளதாம். மேலும், கஸ்மேனிடம் நூற்றுக்கணக்கான கார்கள் மட்டுமின்றி விமானம், ஆடம்பர படகு ஆகியவையும் உள்ளன. எனவே, இப்போது சிறையிலிருந்து தப்பிய கஸ்மேன் தனி விமானம் அல்லது ஆடம்பர படகு மூலம் வெளிநாடுகளுக்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பரிசுத் தொகை

பரிசுத் தொகை

சிறையிலிருந்து தப்பிய கஸ்மேன் பற்றி துப்பு கொடுப்போருக்கு 2,520 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், அவனை பிடிப்பது மிக கடினம் என்று மெக்சிகோ போலீசார் தெரிவிக்கின்றனர்.

 ஃபோர்ப்ஸ் பட்டியலில்..

ஃபோர்ப்ஸ் பட்டியலில்..

மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கஸ்மேன் இன்று போதை மருந்து மாஃபியா கும்பலின் தலைவனாக பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளான். மேலும், ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் கஸ்மேனும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. உலகின் பணக்கார கேங்ஸ்டெர் என்ற பட்டமும் இவனுக்கு உண்டு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mexican Government Seizes Drug Lord Chapo Guzman’s car Collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X