அரபு நாடுகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட போகும் இந்தியா... இதுக்காகதான் இவ்ளோ நாளா காத்துகிட்டு இருந்தோம்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) பிரபலமாக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். தற்போதைய நிலையில் உலகிலேயே கச்சா எண்ணெய்யை (Crude Oil) அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய்தான், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருள் ஆகும். அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், இந்தியாவின் பொருளாதாரம் (Economy) மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம். இதன் விளைவாக இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என அரசு நம்புகிறது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பது அரசின் நம்பிக்கையாக உள்ளது.

HPCL Petrol Bunk

இந்த 2 முக்கியமான காரணங்களால்தான், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போதிய அளவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Charging Stations) இருந்தால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் முன்வருவார்கள். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு, மாநில அரசுகள், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் பணிக்காக 2 பிரபலமான நிறுவனங்கள் தற்போது கூட்டணி அமைத்திருக்கின்றன.

MG And Hindustan Petroleum Partner To Expand EV Charging Network

அவை எம்ஜி இந்தியா (MG India) மற்றும் ஹெச்பிசிஎல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL - Hindustan Petroleum Corporation Ltd) ஆகியவை ஆகும். இந்த 2 நிறுவனங்களும் 50kW/60kW DC ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைக்கவுள்ளன.

நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எம்ஜி இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 2 நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இது குறித்து எம்ஜி இந்தியா நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அலுவலர் கௌரவ் குப்தா கூறுகையில், ''வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள்தான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கான முக்கிய தேவை ஆகும்'' என்றார். எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டுள்ளவர்களும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற நிறுவனங்களும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த விஷயத்தில் எம்ஜி இந்தியா நிறுவனமும் தீவிரமாக பணியாற்றி வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகளவில் உயரும் என நாங்கள் கருதுகிறோம். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 14:40 [IST]
English summary
Mg and hindustan petroleum partner to expand ev charging network in india
மேலும்... #off beat #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+