டாடா காருடன் மோதி ஒரு கண்ணை இழந்த சீன பிராண்ட் கார்! என்னங்க இந்த விலை உயர்ந்த காரெல்லாம் இப்படி அடி வாங்குது!
இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடல்களில் டாடா நெக்ஸான்-ம் ஒன்று. இந்த கார் மாடலே தன்னுடைய உறுதித் தன்மை மீண்டும் நிரூபிக்கும் விதமாக தரமான சம்பவத்தை செய்திருக்கின்றது.
பொதுவாக விபத்து என்றால் பலர் அதிர்ச்சியிலேயே மூழ்குவார்கள், ஆனால், டாடா நெக்ஸான் கார் சந்தித்து இருக்கும் இந்த விபத்து சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு பதிலாக ஆச்சரியத்திலேயே மூழ்க செய்திருக்கின்றது. ஏனெனில் மோதலைச் சந்தித்த எதிர் தரப்பு காருக்கு தன்னைக் காட்டிலும் கடுமையான சேதத்தை டாடா நெக்ஸான் ஏற்பட செய்திருக்கின்றது.

அதாவது, நெக்ஸானைக் காட்டிலும் சற்று மோசமான பாதிப்புகளை எதிர் தரப்பு கார் சந்தித்து இருக்கின்றது. அந்த கார் பிரபல எம்ஜி நிறுவனமத்தின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றான அஸ்டரே ஆகும். இதுவே நெக்ஸான் உடனான மோதலில் ஒரு பக்க கண்ணைப் போன்று இருக்கும் ஹெட்லைட்டை இழந்திருக்கின்றது.
இதுமட்டும் இல்லைங்க, அந்த காரின் முன் பக்க பம்பரில் டெண்ட் விழுந்து இருக்கின்றது. இதேபோல், நெக்ஸானின் பம்பரிலும் டெண்ட் விழுந்து உள்ளது. இரண்டுமே மிக சிறிய டேமேஜ்தான். இருப்பினும், எம்ஜி ஆஸ்டர் கார் ஒரு கண்ணை இழந்திருப்பதுதான் சற்று கவலை அளிக்கும் நிகழ்வாக அமைந்திருக்கின்றது.

இருப்பினும், காருக்குள் இருப்பவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக அமைந்திருக்கின்றது. இரண்டு கார்களுமே பன்முக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய வாகனங்களாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், எம்ஜி அஸ்டர் காரில் ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட், இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ரியர் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதைபோலவே பாதுகாப்பு விஷயத்தில் மிக சிறந்த காராக டாடா நெக்ஸான் இருக்கின்றது. இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகம். இதனாலேயே இதனால் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற முடிந்திருக்கின்றது. இந்த விபத்தானது எதிர்பாராத நேரத்தில் எம்ஜி ஆஸ்டர் கார் ஓட்டுநரின் அஜாக்ரதையாலேயே அரங்கேறி இருக்கின்றது. பிளைண்ட் ஸ்பாட் பார்க்கிங் பகுதியில் இருந்து டாடா நெக்ஸான் வெளியே வந்திருக்கின்றது.
இதை அறியாமல் அதிக வேகத்தில் வந்த அஸ்டர் கண்ணிமைக்கும் நேரத்தில் நெக்ஸானுடன் மோதி விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்தினால் இரு கார்களுக்கும் ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கக் கூடிய சேதாரம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது.
டாடா நெக்ஸான் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களிலும் ஒன்றாகும். இது ரூ. 8.10 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், எம்ஜி ஆஸ்டர் கரோ ரூ. 10.82 லட்சமாக உள்ளது. இது ஆரம்ப நிலை ஆஸ்டர் காரின் ஆரம்ப விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய கார்களின் லிஸ்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவற்றின் வரிசையில் சமீபத்தில் டாடாவின் புதிய தயாரிப்புகளான ஃபேஸ்லிஃப்ட் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய எஸ்யூவி கார்களும் இணைந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
