காரோட விலை ரூ. 7 லட்சம்.. ஆனா நம்பர் பிளேட்டோட விலை 1 கோடி ரூபாயாம்! இப்படியும் நம்பரை தருவாங்களா!..

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 7 லட்சம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் குட்டியான ஹேட்ச்பேக் ரக மின்சார காராகும். நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் மலிவு விலை காருக்கே அதன் உரிமையாளர் ஒருவர் ரூ. 1 கோடி மதிப்புள்ள பேன்சி நம்பரை பயன்படுத்தி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கார்குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆட்டோ ஜர்னல் எனும் இன்ஸ்டா பக்கமே இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பேன்சி நம்பரைக் கொண்டிருக்கும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் வீடியோவைப் பகிர்ந்து இருக்கின்றது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்த தகவல் நம்பும்படியாக இல்லை என்கிற கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

Rs 1 crore vip number plate

குறிப்பாக, ஆர்என்க்யூ 4 (RNQ 4) என்கிற எண்ணை அது கொண்டிருப்பதே பலரின் சந்தேகத்திற்கு காரணமாக உள்ளது. மேலும், இந்த மாதிரியான ஓர் பதிவெண் எந்தவொரு மாநிலத்திலும் வழங்கப்படவில்லை என்பதே பலரின் வாதமாகவும் இருக்கின்றது. மாநிலத்தின் குறியீடு, ஆர்டிஓ எண், இரண்டு இலக்க ஆங்கில எழுத்து மற்றும் நான்கு இலக்க எண்களே பதிவெண்ணாக வழங்கப்படும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் 'TN 01 AB 1111' இதுபோன்ற எண்களே வாகனத்தில் வழங்கப்படும் ஆனால், கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பதிவெண் முற்றிலும் மாறுபட்டதாகக் காட்சியளிகின்றது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பதிவெண் ஓர் ஸ்பெஷல் எண் ஆகும்.

இத்தகைய எண்களை மிக பழைய மற்றும் விண்டேஜ் கார்களில் காண முடியும் என்பதையும் நாம் இங்கே நினைவு கூற வேண்டும். இத்தகைய எண்ணையே பழைய வாகனத்தில் இருந்து புதிய வாகனமான கோமெட் இவிக்கு அதன் உரிமையாளர் மாற்றி இருக்கின்றார். இதுபோன்று பழைய வாகனத்தில் இருந்து புதிய வாகனத்திற்கு அந்த பதிவெண்ணை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று பலர் தாங்கள் அதிகம் விரும்பும் பதிவெண்ணை பழைய வாகனத்தில் இருந்து புதிய வாகனத்திற்கு மாற்றியிருக்கின்றனர். இதற்கு கணிசமான தொகையைக் கட்டணமாக ஆர்டிஓ-விற்கு செலுத்த வேண்டும். அதேவேளையில், அந்த குறிப்பிட்ட பதிவெண்ணை நீங்கள் வாங்கி குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகவது ஆகியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் இருக்கின்றது.

இதை பூர்த்தி செய்யும்பட்சத்தில் ஆர்டிஓ உதவியுடன் புதிய வாகனத்திற்கு அந்த பழைய பதிவெண்ணை பதிவு செய்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக பேன்சி நம்பருக்காக பல லட்ச ரூபாய் செலவிடுவதை தவிர்த்துக் கொள்ள முடியும். இந்தியாவில் செல்வந்தர்கள் சிலர் தாங்கள் விரும்பிய பதிவெண்ணைப் பெற லட்சக் கணக்கான ரூபாயைச் செலவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓர் பணக்காரர் ரூ. 16 செலவிட்டு அவருடைய ஜாகுவார் சொகுசு காருக்கு 'ஆர்ஜே 45 சிஜி 1' என்கிற எண்ணை வாங்கியிருந்தார். இதுபோல் அம்பானி முதல் திரை நட்சத்திரங்கள் வரை பலர் தங்களின் ராசி எண் மற்றும் விருப்ப எண்களை லட்சக் கணக்கான ரூபாயைக் கொட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே ரூ. 1 கோடி மதிப்புள்ள பதிவெண் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஹன் தளத்தில் ஆராய்ந்ததில் இந்த பதிவெண் போலி இல்லை என்பதும், கோமெட் இவி-யில் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. ஆகஸ்டு 25ஆம் 2024-லேயே இந்த கார் பதிவு செய்யப்பட்டும் இருக்கின்றது. இருப்பினும், இந்த பதிவெண்ணின் மதிப்பு ரூ. 1 கோடி என்பது நம்பும் வகையில் இல்லை என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு கோடி எனும் விலைக்கு ஓர் ஆடம்பர காரையே வாங்கிவிட முடியும். ஆனால், இந்த தொகையை கோமெட் போன்ற பட்ஜெட் விலை காருக்கான நம்பர் பிளேட்டுக்கு செலவிட்டிருப்பது பெருத்த வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மிகவும் குட்டியான, அதேவேளையில், அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் காரே கோமெட் இவி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2024, 15:00 [IST]
English summary
Mg comet ev has vip number plate worth rs 1 crore here is more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+