ஆக்டிவா ஸ்கூட்டரை விற்று இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய டாக்டர்! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
தற்போது இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி வரும் நிலையில் பலர் எலvக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் ஒருவர் ஸ்கூட்டருக்கு பதிலாக எலvக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி ஒரு வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்துள்ளார். இதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். இது பற்றிய விரிவான விவரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
சமூக வலைதளங்களில் பலர் தங்கள் வாகனம் வாங்கி அனுபவம் குறித்த தகவல்களை பகிர்வார்கள் இப்படியாக சமீபத்தில் டாக்டர் ஒருவர் தான் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை விற்றுவிட்டு அதற்கு பதிலாக எம்ஜி காரை வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த காரை அவர் தனது அம்மாவிற்காக வாங்கியுள்ளார். இதில் சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன. ஸ்கூட்டரை விட கார் எவ்வளவு சிறந்ததாக அவர்களுக்கு இருந்தது என பார்க்கலாம்.

இவர் ஏற்கனவே தனக்கு சொந்தமாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் என்ற காரை பயன்படுத்தி வருகிறார். மேலும் உள்ளூர்களில் பயணிப்பதற்காக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரை சொந்தமாக வைத்துள்ளார். இந்த ஸ்கூட்டரை பெரும்பாலும் இவரது அம்மா தான் பயன்படுத்தி வந்துள்ளார். உள்ளூர்களுக்கு கடைகளுக்கு செல்லவும் மற்ற பணிகளுக்காகவும் இதை பயன்படுத்தி வந்துள்ளார். வெளியூர் பயணங்கள் மற்றும் குடும்பத்துடன் பயணிக்க ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் தன் தாயார் அதிகமாக பயன்படுத்தி வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக சிறிய கார் ஒன்றை வாங்கலாம் என யோசித்தார். இது இவரது வீட்டிற்கு இரண்டாவது காராகும். ஏற்கனவே ஒரு கார் இருக்கும் நிலையில் மற்றொரு பெரிய காரை நிறுத்த இவரது வீட்டில் போதிய இடம் இல்லை. அதனால் சிறிய காராகவும் இருக்க வேண்டும் அதே நேரம் சிட்டி பயன்பாட்டிற்கும் இருக்க வேண்டும் என யோசித்தார்.

இதற்காக இவர்கள் மார்கெட்டில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை எல்லாம் அலசி ஆராய்ந்து டாடா டியாகோ இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகிய இரண்டு கார்களை தேர்வு செய்தனர். இந்த இரண்டு கார்களில் எதை வாங்கலாம் என முடிவு செய்ய யோசித்தனர்.
அவர்கள் இந்த கார்களில் உள்ள அம்சங்கள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து முதலில் பார்க்க ஆரம்பித்தார்கள். இவர்களிடம் காரை நிறுத்த போதிய இடம் இல்லை அதே நேரம் இவரது தாயார் தான் அதிகமாக ஓட்டுவார் என்பதால் இதில் சில அம்சங்கள் முக்கியமான தேவையாக இருந்தது.

உதாரணமாக, பிலிப் கீ, மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரானிக்கலி அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம், பவர் விண்டோ உள்ளிட்ட அம்சங்கள் இவர்களுக்கு முக்கிய தேவையாக இருந்தன. இந்த இரண்டு காரையும் ஒப்பிடும்போது டாடா டியாகோ இவி சற்று அகலமான காராக இருக்கிறது. இதனால் பார்க்கிங்கில் பிரச்சனை ஏற்படலாம். அதே நேரம் இவர்களுக்கு தேவையான அம்சங்கள் எல்லாம் டியாகோ காரில் குறைந்த பட்ஜெட் காரில் இல்லை.
இவர்களிடம் பட்ஜெட்டும் ரூபாய் 8 லட்சம் தான் என இருந்தது. இதே நேரம் இவர்கள் கோமெட் இவி காரை பார்த்தபோது அதில் இவர்கள் எதிர்பார்த்த அத்தனை அம்சங்களும் இருந்தன. அதுவும் பேஸ் வேரியண்டிலேயே இருந்தன. இதுபோக கூடுதலாக ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ஒன் டச் பவர் விண்டோ ஆகிய அம்சங்களுடன் இந்த கார் வெறும் ரூபாய் 7.90 லட்சம் என்ற விலையில் தான் விற்பனைக்கு வந்தது.
இது மட்டுமல்லாமல் இதில் ரிவர்ஸ் கேமரா அம்சமும் இருந்தது. இந்த காரை வாங்க முடிவு செய்து நேரடியாக எம்ஜி ஷோரூமை தொடர்பு கொண்டு பேசிய போது இவர்கள் புக் செய்த அடுத்த இரண்டு நாட்களிலேயே இவர்களுக்கு கார் டெலிவரி செய்யப்பட்டு விட்டது. தற்போது இந்த காரை அவரது தாயார் பயன்படுத்தி வருகிறார். உள்ளூர்களில் கடைக்கு செல்லவும் பொருட்களை எடுத்துச் செல்லவும் இந்த கார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இந்த காரை ஒருமுறை சார்ஜ் போட்டால் ஸ்போர்ட்ஸ் மோடில் 180 கிலோமீட்டர் வரை பயணிக்க முடிகிறது என தெரிவித்துள்ளனர். இந்த காரை வழங்கும் எம் ஜி நிறுவனம் 230 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இந்த காரின் உரிமையாளர் சரியாக இதை டிரைவ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை நிச்சயம் பயணிக்கலாம் என கூறியுள்ளார்.
இந்த காரை பயன்படுத்தும் போது சில சிக்கல்களும் இருக்கிறது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. அதேநேரம் குறுகிய தூரத்திற்கு மட்டுமே இந்த காரை பயன்படுத்த முடியும். சிறிய வீல் மற்றும் கனமில்லாத டயர் காரணமாக சாலையில் பள்ளமேடுகளில் செல்லும் போது இந்த கார் பிரச்சினையை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பெரிய அளவில் ஸ்டோரேஜ் வசதி கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் விற்பனை என்பது மிக அதிகமாக இருக்கிறது. டூவீலரில் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் வருங்காலங்களில் இது போன்று மக்கள் சிந்திக்க துவங்கினால் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும். குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களின் வருகை இதற்கு ஒரு பாலம் அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications









