மனைவி கொடுத்த இந்த சர்பிரைஸ் பரிசை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார்! காரின் விலையை மட்டும் பார்க்காதீங்க?

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), சைபர்ஸ்டர் (Cyberster) ஆகும். எம்ஜியில் இருந்து விலையுயர்ந்த காராக அறிமுகம் செய்யப்பட்ட சைபர்ஸ்டர் ஆனது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) ஆகும்.

இதனாலேயே மக்கள் மத்தியில் சைபர்ஸ்டர் காருக்கு அதிக கவனம் உருவான நிலையில், சில தினங்களுக்கு முன்பு இருந்து சைபர்ஸ்டர் கார்கள் எம்ஜி மோட்டாரின் செலக்ட் டீலர்ஷிப் ஷோரூம்களை (Dealership Showrooms) வந்தடைய துவங்கி உள்ளன. இந்த நிலையில், அவ்வாறு டீலர்ஷிப் ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட சைபர்ஸ்டர் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை எம்ஜி நிறுவனம் துவங்கி உள்ளது.

first mg cyberster electric car customer

அதன்படி, இந்தியாவில் முதலாவதாக எம்ஜி சைபர்ஸ்டர் காரை இங்கு ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் டெலிவிரி (Delivery) பெற்றுள்ளார். இதுதொடர்பான தகவல்கள் ஏஸ் மீடியாஹௌஸ் (Ace Mediahouse) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல் சைபர்ஸ்டர் காருக்கு உரிமையாளராகி உள்ள இந்த நபரின் பெயர் விஷ்ணு கவுடா (Vishnu Gowda) ஆகும். ஆனால், இந்த நபர் இந்த எம்ஜி சைபர்ஸ்டர் காரை வாங்கவில்லை.

விஷ்ணு கவுடாவின் மனைவி தான் அவருக்கு சர்பிரைஸ் (Surprise) பரிசாக வழங்கி உள்ளார். விஷ்ணு கவுடாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது கணவரை ஆச்சிரியப்படுத்தும் விதமாக இந்த சைபர்ஸ்டர் கார் பரிசை அவரது மனைவி வழங்கி உள்ளார். அதாவது, கணவருக்கு இன்ப அதிர்ச்சியாக சைபர்ஸ்டர் காரை வழங்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் தெரியாமல் எம்ஜி ஷோரூமில் இருந்து காரை டெலிவிரி பெற்று விஷ்ணு கவுடாவின் மனைவி வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்.

first mg cyberster electric car customer

பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தனியாக ஒரு இடம் மற்றும் காரை மறைத்து வைப்பதற்காக தனியாக ஒரு இடம் இருப்பதில் இருந்து விஷ்ணு கவுடாவின் குடும்பத்தினர் எந்த அளவிற்கு லக்சரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், சர்பிரைஸ் ஆக பிராண்ட்-நியூ எம்ஜி சைபர்ஸ்டர் காரை பார்த்ததும் விஷ்ணு கவுடாவுக்கு ஆச்சிரியம் தாங்கிக் கொள்ளவில்லை என்பது அந்த சமயத்தில் அவரது முகத்தை பார்த்தாலே தெரிகிறது.

சைபர்ஸ்டர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கிய அதிவேகத்தில் இயங்கக்கூடிய மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார், சைபர்ஸ்டர் ஆகும். இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்த பின் எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துவரும் நிலையில், அந்த வரிசையில் சைபர்ஸ்டர் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

first mg cyberster electric car customer

ரூ.75 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலைகளை (Ex-showroom Prices) கொண்ட சைபர்ஸ்டர் காரை எம்ஜி மோட்டாரின் பிரத்யேகமான எம்ஜி செலக்ட் டீலர்ஷிப் ஷோரூம்களில் (Dealership Showrooms) மட்டுமே பார்க்க முடியும். வெறும் 2 கதவுகளை மட்டும் பட்டாம்பூச்சி டிசைனில் கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் 77kWh பேட்டரி பேக் மற்றும் இரட்டை-மோட்டார் செட்-அப் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெலிவிரி செய்யப்பட்டுள்ள முதல் எம்ஜி சைபர்ஸ்டர் கார் இது என்று இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் சைபர்ஸ்டர் கார் டெலிவிரி செய்யப்பட்டது போன்று வேறு எந்தவொரு குறிப்பும் இல்லாததால், விஷ்ணு கவுடா தான் இந்தியாவில் எம்ஜி சைபர்ஸ்டர் காரை டெலிவிரி பெற்ற முதல் கஸ்டமராக இருப்பார்.

More from DriveSpark

Article Published On: Monday, August 11, 2025, 15:57 [IST]
English summary
Mg cyberster electric car owned by first indian customer vishnu gowda check all details here
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X