இந்த சம்பவத்தை சாகும்வரை மறக்கமாட்டாரு... புது கார் வாங்கும் ஆசையே போயிருக்கும்!! வைரல் வீடியோ

புதிய காரை வாங்கிய சில நாட்களில் விபத்து எல்லாம் போய், இப்போதெல்லாம் ஷோரூம்களில் இருந்து டெலிவிரி எடுக்கும்போதே கார் விபத்துகள் நடந்துவிடுகின்றன. அதுகுறித்த வீடியோக்களையும், படங்களையும் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட, கர்நாடகாவில் மாருதி சுஸுகி செலேரியோ காரை டெலிவிரி எடுத்த பெண் ஒருவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸலரேட்டரை அழுத்தியதால் ஏற்பட்ட விபத்தை பற்றி பார்த்திருந்தோம். அந்த வரிசையில், இங்கு ஒரு எம்ஜி ஹெக்டர் கார் டீலர்ஷிப் ஷோரூமின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

புதியதாக கார் வாங்க வேண்டும் என்கிற கனவு நிச்சயமாக நம் எல்லாருக்கும் இருக்கும். காரை புக் மற்றும் டெஸ்ட் டிரைவ் செய்யும் போதெல்லாம் அமைதியாக இருப்பவர்கள், காரை டெலிவிரி எடுக்கும் நாளில் மட்டும் வீட்டிற்கு ஓட்டி செல்ல போகிற காரை ஷோரூமில் பார்த்தவுடன் மிகவும் குஷியாகி விடுவார்கள். திடீரென எங்கிருந்துதான் அவ்வளவு பெரிய புத்துணர்ச்சி கிடைக்கும் என்றே தெரியாது.

mg mector crashed at dealership

ஆனால், அந்த உணர்ச்சிவசம் தான் சில நேரங்களில் ஆபத்தாக முடிந்துவிடுகிறது. சமீப ஆண்டுகளில், கார் ஷோரூமில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், எம்ஜி டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து ஹெக்டர் எஸ்யூவி காரை டெலிவிரி பெற சென்ற நபர் தவறுதலாக ஆக்ஸலரேட்டரை அழுத்தியதால், ஹெக்டர் கார் ஷோரூம் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளது.

யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவை வைத்து பார்க்கும்போது, இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் நடந்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கரீம்நகரில் உள்ள ஒரு எம்ஜி டீலர்ஷிப் ஷோரூமில் வழக்கம்போல் ஒருவர் ஹெக்டர் கார் ஒன்றை வாங்குவதற்காக காரை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக டீலர்ஷிப் அதிகாரிகள் காரை பற்றி அவருக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

mg mector crashed at dealership

அந்த சமயத்தில், காரில் உள்ள வசதிகளை பார்க்க வேண்டும் என கூறி காரை ஸ்டார்ட் செய்ய கூறியுள்ளார். டீலர்ஷிப் அதிகாரிகளும் அதன்படி காரை ஸ்டார்ட் செய்து கொடுத்தனர். ஹெக்டர் காரின் தொழிற்நுட்ப வசதிகளை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர் தவறுதலாக கியரை நகர்த்தியுள்ளார். இதனால், கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. இதில் சற்று பதற்றமடைந்த அந்த கஸ்டமர், பதற்றத்தில் ஆக்ஸலரேட்டர் பெடலை அழுத்தியுள்ளார்.

இதனால், வேகமெடுத்து ஷோரூமில் இருந்து கார் சீறிப்பாய்ந்தது. ஷோரூமின் கண்ணாடி சுவர்களை உடைத்துக் கொண்டு சாலையை நோக்கி கார் வேகமாக செல்வதை வீடியோவில் காணலாம். இதற்கிடையில், காருக்கு குறுக்கே நடந்து சென்ற இருவர், மயிரிழையில் உயிர்தப்பி உள்ளனர். வீடியோவின் இறுதி வரையில், காரின் வேகம் குறையவே இல்லை.

mg mector crashed at dealership

மற்ற வாகனங்கள் செல்லும் சாலையை நோக்கி சென்றதால், பதறிப்போன ஷோரூம் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் காரை விரட்டி கொண்டு சென்றனர். அதன்பின், கார் பத்திரமாக நிறுத்தப்பட்டதா? காருக்குள் இருந்தவரின் கதி என்ன? என்பது குறித்த விபரங்கள் இல்லை. சம்பவத்தின்போது, காருக்குள் கஸ்டமர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.

இது, எம்ஜி ஹெக்டர் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டாக இருக்கலாம். ஏனெனில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்களை ஓட்டுவது சற்று சிரமம் ஆகும். பழகிக் கொண்டால், எளிதாகிவிடும். இருந்தாலும், இந்த கஸ்டமருக்கு ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டிய அனுபவம் இல்லாதது போல் தெரிகிறது. ஆட்டோமேட்டிக் கார்களில் ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் என இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்துவது பிரச்சனையை உண்டாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷோரூமிற்குள் கார் இருந்த இடத்திற்கும், உடைப்பட்ட கண்ணாடி சுவருக்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளதை காணலாம். அதாவது, கஸ்டமர் நினைத்திருந்தால் காரை உடனடியாக நிறுத்தி இருக்க முடியும். ஆனால், அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி, கார் ஷோரூமை தாண்டி சாலையை நோக்கி சென்றுள்ளது. இடையில் காரின் வேகம் எந்த இடத்திலும் குறையவே இல்லை. இதில் இருந்து, விபத்தை ஏற்படுத்திய கஸ்டமருக்கு கார் டிரைவிங்கில் அனுபவம் இல்லாதது போல் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 11:40 [IST]
English summary
Mg hector car crashed at dealership showroom while take delivery
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X