கடவுள் ராமர் மேல் இந்த அளவுக்கு பக்தி எல்லாம் கொஞ்சம் ஓவர்!! குஜராத் கார் ஓனர் செய்த செயல்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு குஜராத், சூரத்தில் எம்ஜி ஹெக்டர் (MG Hector) கார் உரிமையாளர் ஒருவர் தனது காரை ராமர் கோயில் தொடர்பான ஸ்டிக்கர்களுடன் அலங்கரித்து கெத்தாக சாலையில் ஓட்டி வருகிறார். யார் அந்த நபர்? இந்த வகையில் தனது ஹெக்டர் காரில் என்னென்ன மாற்றங்களை அவர் செய்துள்ளார்? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இதற்குதான் மொத்த நாடும் காத்திருக்கிறது என்றுகூட சொல்லலாம். இதனால் இப்போதே, நாடு முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்து மதத்திற்கும் காவி நிறத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பது நமக்கு தெரியும். இதனால்தான், அயோத்திக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் குறைந்தது காவி துண்டை ஆவது கொண்டுள்ளனர். ஆனால், குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஒருவர் ஒருபடி மேலே சென்று தனது எம்ஜி ஹெக்டர் கார் முழுவதையும் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றியுள்ளார்.
மேலும், இந்த ஹெக்டர் காரை சுற்றிலும் நிறைய இடங்களில் கடவுள் ராமர் மற்றும் அயோத்தி கோயிலின் படங்களும், 'ஜெய் ஸ்ரீ ராம்' வாசகங்கள் ஹிந்தியிலும் இடம்பெற்றுள்ளன. அயோத்தி ராம் மந்திர் திறப்புகாக இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட இந்த ஹெக்டர் காரில் அதன் உரிமையாளர் பனோராமிக் சன்ரூஃப் வழியாக, ராமர் படம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய கொடியை பிடித்துக் கொண்டிருப்பதை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த குறிப்பிட்ட ஹெக்டர் காரின் உரிமையாளர் பெயர் ரவி கரடி. ராமர் கோயில் திறப்புக்காக சூரத்தில் இருந்து அயோத்திக்கு இந்த காரில் சென்றுக் கொண்டிருக்கும் ரவி கரடி இதுகுறித்து ஊடகம் ஒன்றில் பேசுகையில், "நான் ராமரின் தீவிர பக்தன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
எனது காரை வடிவமைத்து 4 நாட்களில் புத்தம் புதிய தோற்றத்திற்கு கொண்டுவந்து, அயோத்திக்கு எடுத்துச் செல்கிறேன். தனிப்பட்ட அளவில், இந்த வடிவமைப்பில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். ஏனெனில் இது ராமருக்கு என் தரப்பில் இருந்து ஒரு சிறப்பு பரிசு" என கூறியுள்ளார். மேலும், இந்த நபர் 108 அடி நீளத்திற்கு பெரிய ஊதுப்பத்தியையும் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவில் காட்சித் தருவது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டிற்கு முந்தைய ஹெக்டர் கார் ஆகும். இந்தியாவில் 2019இல் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் கார் ஹெக்டர் ஆகும். 2019ஆம் ஆண்டிற்கு பிறகு பல்வேறு அப்டேட்களை பெற்றுள்ள எம்ஜி ஹெக்டர் தற்சமயம் வெளிப்பக்கத்திலும், உட்பக்கத்திலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் விற்பனையில் உள்ளது.
சூரத்தில் இருந்து அயோத்திக்கு கிளம்பியுள்ள இந்த ஹெக்டர் கார் பழைய மாடல் என்பதால், லெவல்-2 அடாஸ் இருக்காது. ஆனால், தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெக்டரில் இந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சம் இடம்பெறுகிறது. இந்தியாவில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் எம்ஜி ஹெக்டர் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அயோத்திக்கு காரில் செல்வது மட்டுமின்றி, அந்த காரை பிரத்யேகமான தோற்றத்திற்கு மாற்றியிருப்பது ரவி கரடியின் கடவுள் ராமர் மீதான பக்தியை காட்டுகிறது. இந்த பயணத்திற்காக மட்டுமே இவ்வாறு காரை மாற்றியுள்ளாரா? கோயிலுக்கு சென்றுவந்த பின் காரில் இருந்து ஆரஞ்சு நிற வ்ராப்பை நீக்கிவிடுவாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









