பணம்-சொத்து சேக்குறதுக்கு பதிலாக இந்த மாதிரி நாளு மனுசங்களுக்கு கொடுக்கலாம்.. காரை சும்மாவே கொடுத்திருக்காங்க!

அதிக லாபத்துக்கு பொருட்களை விற்று எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் எண்ணமாக உள்ளது. இந்த மாதிரியான காலகட்டத்தில் முன்னணி நிறுவனம் ஒன்று தங்களின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலை இலவசமாக வழங்க முன் வந்திருக்கின்றது. எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம்-தான் அது. இந்த நிறுவனம் ஒன்றல்ல, இரண்டல்ல பத்துக்கும் மேற்பட்டோருக்கு தன்னுடைய அதிகம் விற்பனையாகும் காரை வழங்க இருக்கின்றது. விண்ட்ஸர் இவி (Windsor EV) காரையே அது வழங்க உள்ளது. இது ஓர் மின்சார கார் மாடல் ஆகும்.

காரை பரிசாக பெற இருப்பவர்கள் வேறு யாரும் அல்ல அனைவரும் இந்த தேசத்திற்கு பெருமிதம் சேர்த்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆவர். பதக்கம் வென்றுக் கொடுக்கும் அனைவருக்கும் விண்ட்ஸர் இவி கார் பரிசாக வழங்கப்படும் என எம்ஜி அறிவித்திருந்தது. இதையே தற்போது அது செய்தும் காட்டியிருக்கின்றது.

MG gifts windsor to olympians

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் இப்போதைய நிலவரப்படி விண்ட்ஸர் இவி உடன் சேர்த்து கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக விண்ட்ஸர் இவியே இருக்கின்றது.

இந்த பிராண்டின் விலை குறைவான கார் மாடலான கோமெட் இவி-யையே விற்பனையில் ஓரங்கட்டும் அளவிற்கு அதற்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய மின்சார காரையே எம்ஜி ஒலிம்பிக் வீரர்களுக்கு இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அதில், மிக முக்கியமானதாக நிறுவனம் அறிமுகப்படுத்திய 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) எனும் திட்டமே ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக வாங்கப்படும் எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் பேட்டரி பேக்கை நம்மால் சொந்தம் கொண்டாட முடியாது. ஆகையால், ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் அதற்காக தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில், எம்ஜி நிறுவனம் விண்ட்ஸர் இவி-க்கு ஒரு கிமீ பயணத்திற்கு ரூ. 3.5-ம், கோமெட் இவி-க்கு ரூ. 2.5-ம் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கின்றது. இதேபோல், பேட்டரி அஸ் எ சர்வீஸ், திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் காரை வாங்குகையில் பல லட்ச ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும்.

உதாரணமாக, விண்ட்ஸர் இவி-யை இந்த திட்டத்தில் ரூ. 3.5 லட்சம் வரை கம்மி விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டமே விண்ட்ஸர் இவி-க்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்க காரணமாக உள்ளது. இதுமட்டுமில்லைங்க, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் சியூவி ரக கார் மாடலும் இதுவே ஆகும்.

செடான் மற்றும் எஸ்யூவி இரண்டு ரக கார்களுக்கும் இணையான வசதியை வழங்கக் கூடியதே இந்த சியூவி ரக வாகனம் ஆகும். இந்த காரணத்திற்காகவும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை விண்ட்ஸர் இவி பெற்று வருகின்றது. தொடர்ந்து, இன்னும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இந்த கார் மாடலில் ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை எம்ஜி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், விமானங்களில் காணப்படக் கூடிய இருக்கைகளை இந்த காரில் எம்ஜி வழங்கி இருப்பது வரவேற்கதக்க அம்சமாக உள்ளது. இதைபோலவே திரை, நவீன கால தொழில்நுட்ப வசதி என அனைத்திலும் மிக சிறந்த கார் மாடலாக விண்ட்ஸர் இவி சியூவி கார் மாடல் காட்சியளிக்கின்றது.

ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 300க்கும் அதிகமான கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் விலை பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் ரூ. 9.99 லட்சத்திற்கும், பேட்டரியுடன் ரூ. 13.50 லட்சத்திற்கம் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இதற்கு விற்பனையில் டஃப் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது, புதிய விண்ட்ஸர் இவி. ஆகையால், இது வவிற்பனைக்கு வந்த நாள் முதல் டாடா நெக்ஸான் இவிக்கு கூடுதல் தலைவலியான சூழல் ஏற்படத் தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இக்காரை பலருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றது எம்ஜி.

More from DriveSpark

Article Published On: Friday, November 15, 2024, 19:47 [IST]
English summary
Mg motor celebrates indian olympians with windsor ev gifts
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+