டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி... 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது...

எம்ஜி மோட்டார் நிறுவனம் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தெளிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெகுசில கார்களை மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் ஏகப்பட்ட கார்களை வைத்திருக்கிறது. இதை ஒவ்வொன்றாக இந்தியாவிற்குள் இந்திய மார்கெட்டை புரிந்து கொண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மீது மக்கள் மோகம் சென்றுள்ளது இதனால் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை வரிசையாக அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

இந்தியாவில் தற்போது டாடா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியிலிருந்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் பட்டியலில் நம்பர் ஒன் இடத்திலிருந்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே உள்ள பெட்ரோல் கார்களை அப்படியே எலெக்ட்ரிக் கார்களாக கன்வெர்ட் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

இந்த நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. இது மட்டுமல்ல மஹிந்திரா நிறுவனத்துடன் தற்போது எம்ஜி நிறுவனமும் இறங்கியுள்ளது. இந்நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் தனது தடத்தை பெரியதாகப் பதிக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே எம்ஜி ஸிஎஸ் இவி என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

ஆனால் இது பிரிமியம் ரக கார் என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் விற்பனை எண்ணிக்கையும் குறைவுதான். இந்நிலையில் தான் எம்ஜி நிறுவனம் தனது சர்வதேச மார்கெட்டில் உள்ள எம்ஜி ஏர் என்ற காரை இந்தியாவில் எம்ஜி சிட்டி என்ற பெயரில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இது முற்றிலுமான சிறிய ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் வரும் 2023ம் ஆண்டு ஏப்-ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

எம்ஜி நிறுவனம் இந்த காரை ரூ11-15 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த விலை செக்மெண்டில் டாடா நிறுவனத்தின் டியாகோ இவி, டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகிய கார்கள் இருக்கின்றன. தற்போது டாடா நிறுவனத்திடம் ரூ8.49 லட்சம் முதல் ரூ17.5 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

இந்த புதிய இவி காரின் அறிமுகம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் சாபா கூறும் போது : "இவிக்கான மிகப்பெரிய மார்கெட்டில் எம்ஜியும் இணையுள்ளது. இதற்காக குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எந்த பேட்டரியையும் சார்ஜிங் தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என ஆய்வு செய்து வருகிறோம்." எனக் கூறினார்.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

எம்ஜி டெவலப்மெண்ட் புரோகிராம்மின் கீழ் இந்நிறுவனம் சிலடெக் ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து பேட்டரிக்கான கெமிஸ்ட்ரி, மற்றும் சார்ஜிங் சொல்யூசன் ஆகியவற்றை ஆய்வு செய்ய களம் இறங்கியுள்ளது. இந்த கார் குஜராத்தில் அந்நிறுவனம் நடத்தி வரும் தயாரிப்பு ஆலையிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் தான். தற்போது ஸிஎஸ் இவி கார்களும் இதே ஆலையில் தான் தயாராகிறது.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

தற்போது இந்த ஆலையில் மாதம் 300-350 ஸிஎஸ் இவி கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதை 500 கார்கள் தயாரிக்கும் அளவிற்கு கேபாசிட்டியை உருவாக்கியுள்ளது. அதே ஆலையில் தற்போது மாதம் 2000 ஹெக்டேர் கார்கள் தயாரிக்கப்படுகிறது. இது 4000 கார்களாக உயர்த்தப்போவதாகத் திட்டமிட்டுள்ளது. இந்த உயர்வு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

டாடா விற்கு டஃப் போட்டி கொடுக்க ரெடியான எம்ஜி . . . 6 மாசத்துல ஆப்பு வைக்க ரெடியாகுது . . .

இதற்கு முக்கியமான காரணம் தற்போது, எம்ஜி நிறுவனம் இந்தியாவில் ஆண்டிற்கு 55,000-56000 கார்களை விற்பனை செய்து வருகிறது. இதை 2023ம் ஆண்டு இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது எம்ஜி நிறுவனம் வெளியிடவுள்ள எம்ஜி சிட்டி காரை பொருத்தவரை சீனாவில் உள்ள யூலிங் ஏர் இவி காரை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த காரில் 40 பிஎச்பி திறன் கொண்ட மோட்டார் மற்றும் 20-25 கிலோவாட்ஹவர் பேட்டரி பவர் கொண்டது. இது முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2022, 14:04 [IST]
English summary
MG Motors plans to launch a small EV car in a cheap budget
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+