எம்ஜி விண்ட்ஸர் இவி காரை இத்தன பேரு பரிசா பெற போறாங்களா!.. பட்டியல் பெருசா இருக்கே நிச்சயம் கொடுப்பாங்களா!

எம்ஜி (MG) நிறுவனம் இந்தியாவில் கூடிய விரைவில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. ஏனெனில் இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் சியூவி (CUV) ரக கார் மாடல் ஆகும். இதுதவிர, வேறு எந்த கார் மாடலிலும் இல்லாத சிறப்பம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனால்தான் இந்த காருக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. மேலும், இந்த காரின் வருகைக்காக சில ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் காத்திருக்கின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு விண்ட்ஸர் இவி பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

Windsor ev awarded to olympic medalists

ஆகையால், விண்ட்ஸர் இவி விற்பனைக்கு வந்த உடன் பல ஒலிம்பிக் வீரர்கள் இந்த காரை பரிசாக பெற இருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. அவர்கள் யார் என்பது பற்றிய விபரத்தையும், விண்ட்ஸர் இவி-யின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற பெண் வீராங்கனை மனு பாகர், ஆண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங், 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே ஆகியோரே இந்த காரை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, ஈட்டி எறிதல் போட்டியில் சில்வர் மெடல் வாங்கிய நீரஜ் சோப்ரா, ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் மெடல் வாங்கிய அமன் ஸ்ரவந்த் ஆகியோருக்கும் விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் கார் பரிசாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களுடன் சேர்த்து 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியன் ஹாக்கி குழுவிற்கும் இந்த கார் பரிசாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு 19 பேர் விண்ட்ஸர் இவி-யை பரிசாக பெறலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எஸ்யூவி கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிக இட வசதிக் கொண்ட காராகவே விண்ட்ஸர் இவி இருக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, சிறப்பம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாகக் கொண்டிருக்கும் என்பதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீசர் படங்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், இதுவரை எந்தவொரு எம்ஜி நிறுவன தயாரிப்பும் பெற்றிராத வகையில் பெரிய திரை, பெரிய சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட், 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற இருகின்றன. விண்டஸர் இவி, இந்தோனேசியாவில் உல்லிங் கிளவுட் இவி எனும் பெயரில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அங்கு 50.6 kWh மற்றும் 37.9 kWh இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலேயே அது விற்கப்படுகின்றது. இதே பேட்டரி பேக் ஆப்ஷன்களே இந்தியாவிற்கான விண்ட்ஸர் இவி காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே எம்ஜி நிறுவனத்தின்கீழ் இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி என இரண்டு விதமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

இவற்றின் வரிசையிலேயே மூன்றாவது எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் இவி இணைய இருக்கின்றது. இந்த காரை மட்டுமில்லைங்க அடுத்த சில ஆண்டுகளுக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஓர் புதுமுகம் என கார்களை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய தனித்துவமான தோற்றம் மற்றும் அம்சஙக்ள் விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரை களமிறக்குவதற்கான பணியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 1, 2024, 11:00 [IST]
English summary
Mg windsor ev awarded to indian olympic medalists here is list of who are going to get
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+