Just In
- 7 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 10 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 10 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 12 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் தீவிரமாகும் ஊரடங்கு... இந்த முறை வேற-லெவல் நடவடிக்கை எடுக்க போறாங்களாம்!! காவல்துறை அறிவிப்பு!
மீண்டும் ஊரடங்கு தீவிரப்படுத்து வரும்நிலையில் முன்பைவிட மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்ட நகரத்தைச் சேர்ந்த காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியிருக்கின்றது. இதனால், குறிப்பிட்ட சில மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த வண்ணம் இருக்கின்றது.

இவற்றைக் கூடுதலாக்கும் பணியிலேயே மாநில அரசுகள் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, கடுமையான விதிகள் மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

மாலை 6 மணி தொடங்கி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கின்றது. மாநிலத்தின் முக்கிய நகரங்களான புனே, மும்பை ஆகியவற்றில் இந்த விதி மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை மீறுவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக மஹாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.

மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதற்காக, கடும் கண்கானிப்பை காவல்துறை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. புதிய ஊரடங்கு உத்தரவின் காரணமாக அலுவலங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை மாலை 6 மணிக்கு முன்னதாகவே வெளியேற்றத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், மக்கள் வீடு வந்து சேர சற்று தாமதாகி விடுகின்றது. அத்தகையோருக்கு உரிய காரணம் இருப்பதால் காவலர்கள் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என புனேவின் இணை ஆணையர் ரவிந்தர ஷிஸ்வே கூறியிருக்கின்றார்.

அதேசமயம், உரிய காரணமில்லாமல் சாலையில் சுற்றித் திரிவோர்மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். குறிப்பாக, உரிய காரணமின்றி சாலையில் வாகனங்கள் வாயிலாக சுற்றி திரியும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது, அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர்.

மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் வருவதைத் தடுக்கும் பொருட்டில் இத்தகைய கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இணை ஆணையர் ரவிந்தர ஷிஸ்வே காரணம் கூறியுள்ளார். தற்போது காண்கானிப்பு பணிகளுக்காக புனே முழுவதிலும் 96க்கும் அதிகமான செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகின்றது.

மாலை 6 மணி தொடங்கி காலை 7 மணி வரை தேவையில்லாமல் வெளியில் வருவோர்மீது இங்கு வைத்தே காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐபிசி 188 பிரிவின்கீழ் விதிமீறுவோர் மீது காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டுமின்றி வாகன பறிமுதலும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஆசை ஆசையாக வாங்கிய வாகனங்களைப் போலீஸாரிடத்தில் இருந்து பத்திரப்படுத்த வேண்டுமானால் நிச்சயம் ஊரடங்குக்கு கட்டுப்பாட்டிற்கு அடங்கியே ஆக வேண்டும் என்ற நிலை நகரங்களில் உருவாகியுள்ளது.

இதற்காக மட்டுமல்ல உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்தும் நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால் விதிகளை நிச்சயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இதற்காகவே அரசும், காவல்துறையும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடுமையன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ஊரடங்கு விதிகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நாள் முதலே மாநில போலீஸார் மிகக் கடுமையான கண்கானிப்பு பணியில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர். இதனால், மக்களின் வழக்கமான நடமாட்டம் படி படியாகக் குறையத் தொடங்கியிருக்கின்றது.
Source: Punekar News