மணிக்கு 482 கிமீ வேகத்தில் செல்லும் காரை வாங்கிய விளையாட்டு வீரர்.. உலகின் மிகவும் தனித்துவமான இ-கார்!

பிரபல முன்னாள் கூடைப் பந்தாட்ட விளையாட்டு வீரரும், அமெரிக்க தொழிலதிபருமான மைக்கேல் ஜோர்டான், உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்டோமொபிலி பினின்ஃபரினா (Automobili Pininfarina) நிறுவனத்தின் கை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் (Hypercar) வகை கார் மாடல் டார்கமேரிக்கா (Targamerica). இந்த கார் மாடலையே மைக்கேல் ஜோர்டான் வாங்கி இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக மைக்கேல் ஜோர்டான் அந்த காருக்கு அருகில் நிற்கும் படம் வெளியாகி இருக்கின்றது.

இந்த படத்தை பினின்ஃபரினாவே வெளியிட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலை தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை தழுவியே பினின்ஃபரினா நிறுவனம் தயாரித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இது ஓர் கஸ்டம் பில்ட் (Custom Built) ஹைப்பர்கார் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

Michael jordan acquires electric hypercar pininfarina battista targamerica

மிக மிக அதிக வேகத்தில் செல்லும், அதேவேளையில், அதிக ரேஞ்சையும் தரும் வகையில் இதனை பினின்ஃபரினா வடிவமைத்திருக்கின்றது. இத்தகைய ஓர் தரமான காரையே மைக்கேல் ஜோர்டான் தன்னுடைய கார் சேகரிப்பில் தற்போது இணைத்திருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒன்றின் விலை மட்டுமே 18 கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

ஆனால், துள்ளியமான விலை விபரம் வெளியாகவில்லை. ஆகையால், மைக்கேல் ஜோர்டான் இந்த காரை எவ்வளவு பணம் செலவழித்து வாங்கினார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகவில்லை. பட்டிஸ்டா டார்கமேரிக்கா ஓர் உலகின் முதல் கோச்-பில்டு எலெக்ட்ரிக் ஹைப்பர்காராகவும் காட்சியளிக்கின்றது. மேலும், ரிமூவ் செய்யும் வசதிக் கொண்ட ரூஃபும் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இன்னும் பல கஸ்டமைசேஷனை இந்த காரில் மைக்கேல் ஜோர்டான் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுபோன்று வாடிக்கையாளருக்கு ஏற்ப நிறுவனம் கஸ்டம் செய்து வழங்கும் முதல் பட்டிஸ்டா கார் மாடல் இதுவே ஆகும். பினின்ஃபரினா நிறுவனம் இந்த காரை முதல் முதலில் 2023 மான்டெரே கார் வீக் நிகழ்ச்சியின் வாயிலாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

அப்போதே கார் காதலர்கள் பலரின் கவனத்தை அது கவர தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே ஓராண்டை எடுத்துக் கொண்டு மைக்கேல் ஜோர்டானுக்கு இந்த காரை டெலிவரி வழங்கி இருக்கின்றது பினின்ஃபரினா. அந்த கார் சில்வர் மற்றும் ப்ளூ அக்செண்டுகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் கவர்ச்சியாகக் காட்சியளிக்கின்றது.

Electric hypercar pininfarina battista targamerica

இதுதவிர, இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக பின் பக்கத்தில் சூப்பரான ரெக்கை அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இது காரின் பின் வீலுக்கு அழுத்தை வழங்கி சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, இந்த காரின் உட்பக்கத்திற்கும் மிகுந்த அழகு சேர்ப்பு வேலை பார்க்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், இரண்டு வண்ண அலங்கரிப்பு வேலையே பார்க்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், இந்த காரின் தரை பகுதியை கார்பன் பைபரை பயன்படுத்தி பினின்ஃபரினா தயார் செய்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அழகு சேர்ப்பு வேலை மற்றும் எடை குறைப்பு வேலைகள் பார்க்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, இதன் இருக்கைகள் மிகுந்த சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, இந்த காரில் சிகார் புகையிலை ஸ்டோர் செய்து வைக்கும் சிறிய அறை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 476 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 மைல் ஆகும். அதாவது மணிக்கு 482 கிமீ வேகத்திலேயே இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் செல்லும். இந்த சூப்பரான வேக திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 1,874 பிஎச்பி மற்றும் 2,340 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பேட்டரி பேக்கை பொருத்த வரை மிகப் பெரிய பேட்டரி பேக்காக 120 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரால் வெறும் 2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதுபோன்று அதிக ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் இந்த குறையை போக்கும் விதமாக மிக மிக அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட இ-கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 6, 2024, 15:00 [IST]
English summary
Michael jordan acquires unique pininfarina battista targamerica electric hypercar
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+