ஏலத்திற்கு வருகிறது மைக்கேல் ஷூமேக்கர் பயன்படுத்திய பென்ஸ் கார்!

Written By: Krishna

கார் பந்தய உலகின் தன்னிகரற்ற ஜாம்பவானாக விளங்கியவர் மைக்கேல் ஷூ மேக்கர். ஃபார்முலா ஒன் ரேஸில் 7 முறை சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்த இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தொன்றில் சிக்கிய மைக்கேல் ஷூமேக்கர் படுத்த படுக்கையாகி விட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் தொடர்பான செய்திகள் அதிகமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் ஷூமேக்கர் பயன்படுத்திய கார் ஒன்று தற்போது விற்பனைக்கு வந்திருப்பதன் மூலம் ஊடகங்கள் மீண்டும் அவரது பெயரை உச்சரிக்கத் தொடங்கியுோள்ளன.

ஏலம்

ஏலம்

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் செயல்பட்டு வரும் சிடிஎஸ் (கார் டிரேட் சென்டர்) டீலர்கள்தான் அந்தக் காரை ஏல முறையில் விற்பனைக் கொண்டு வந்துள்ளனர்.

 அடிப்படை விலை

அடிப்படை விலை

மெர்சிடைஸ் பென்ஸ் இ-55 ஏஎம்ஜி மாடலான அந்தக் காரின் அடிப்படை விற்பனை விலை 1,19,950 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் அது சுமார் ரூ.89 லட்சமாகும்.

பெருமை

பெருமை

அந்த காரின் செயல்திறன், வடிவமைப்பு, மாடல் ஆகியவற்றைத் தாண்டி, அது மைக்கேல் ஷூமேக்கர் அமர்ந்து சென்ற வாகனம் என்ற ஒரு பெருமைக்குத்தான் இவ்வளவு விலை.

வசதிகள்

வசதிகள்

காரின் உள்புறத்தில் குளிர்சாதன வசதி, சாட்டிலைட் வழிகாட்டி நேவிகேசன், பார்க்கிங் சிஸ்டம், வாய்மொழி உத்தரவுகளை இடுவதற்கான வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஓடோமீட்டர் ரீடிங்

ஓடோமீட்டர் ரீடிங்

இந்தக் காரை எத்தனை ஆண்டுகள் மைக்கேல் ஷூமேக்கர் வைத்திருந்தார் என்பது தொடர்பான தகவல்களை வெளியிட சிடிஎஸ் டீலர்கள் மறுத்து விட்டனர்.அந்தக் கார் மொத்தமாக 1,98,000 கிலோ மீட்டர் பயணித்துள்ளதாகத் தெரிகிறது.

ஃபெராரி லோகோ

ஃபெராரி லோகோ

காரின் முகப்புப் பகுதியில் ஃபெராரி நிறுவனத்தின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. உள் இருக்கைகள் அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் லெதர் கவரிங் செய்யப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் கார்

பவர்ஃபுல் கார்

மெர்சிடைஸ் பென்ஸ் இ-55 ஏஎம்ஜி மாடல் கார்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சினானது 349 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

அதிர்ஷ்டசாலி யார்?

அதிர்ஷ்டசாலி யார்?

மொத்தத்தில் ஷூமேக்கரால் நேசிக்கப்பட்ட காரை, அவரை நேசிக்கும் யாரோ ஒருவர் வாங்கிச் செல்லப் போகிறார். அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என மனதார நினைக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையால் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து வருவார் ஷூமேக்கர்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Michael Schumacher's Mercedes-Benz E55 AMG Family Wagon Up For Sale.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark