மைக்கேல் ஷூமேக்கரின் 2001 எஃப்1 பந்தைய கார் ரூ.48 கோடிக்கு ஏலம்...இன்பதிர்ச்சியில் ஃபெராரி..!!

மைக்கேல் ஷூமேக்கரின் 2001 எஃப்1 பந்தைய கார் ரூ.48 கோடிக்கு ஏலம்...இன்பதிர்ச்சியில் ஃபெராரி..!!

By Azhagar

முன்னணி கார் பந்தைய வீரரான மைக்கேல் ஷூமேக்கர் பயன்படுத்திய ரேஸ் கார் ஒன்று ரூ.48 கோடிக்கு ஏலம் போயிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

சர்வதேச கார் பந்தய உலகில் வீரர் மைக்கேல் ஷூமேக்கருக்கு நிகர் யாருமில்லை என்பது தான் ரேஸ் கார் ரசிகர்களின் கருத்து.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

தன்னுடை அசரடிக்கும் கார் டிரைவிங் திறமையால் இந்தியா உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருந்தவர் ஷூமேக்கர்.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

அவர் ஒவ்வொரு முறையும் கார் பந்தயங்களில் ஈடுபடும் போது ஷூமேக்கர் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணங்களுக்கு மத்தியில், ரேஸில் அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வேண்டுதலும் ரசிகர்ளிடம் நிலவும்.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

அந்தளவிற்கு சர்வதேச கார் பந்தயங்களில் மைக்கேல் ஷூமேக்கர் ஒரு கடவுள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

போட்டி நாடுகளாக இருந்தாலும் எஃப் 1 பந்தையங்களில் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட தலைசிறந்த வீரரும் மைக்கேல் ஷூமேக்கர் தான்.

Recommended Video

[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

உலகளவில் கார் ஆர்வலர்கள் பலருக்கும் முன்னோடியாக இருக்கும் மைக்கேல் ஷூமேக்கர் பயன்படுத்திய கார் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

நியூயார்க் நகரில் கலை பண்பாட்டு நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், மைக்கேல் ஷூமேக்கர் பயன்படுத்திய காரை வாங்க எட்டு பேர் முன்வந்தனர்.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

சுமார் 6 நிமிடங்களே நடைபெற்ற இந்த ஏலத்தில், ஏலம் விட்ட ஃபெராரி நிறுவனம் எதிர்பார்த்ததை விட சுமார் இருமடங்கு விலையில் அந்த கார் ஏலம் போனது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

அதாவது மைக்கேல் ஷூமேக்கர் ஓட்டிய ஃபெராரி எஃப் 2001 கார் அதிகப்பட்சமாக 40 லட்சம் டாலர்கள் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

ஆனால் ஃபெராரியின் ஃபார்முலா ஒன் ரேஸ் கார் இந்திய மதிப்பில் ரு. 48 கோடி வரை விற்பனையாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

ஏலத்தொகையில் குறிப்பிட்ட பங்கு மைக்கேல் ஷூமேக்கரின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஃபெராரி நிறுவனம் கூறியுள்ளது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

கடந்த ஆண்டில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் மைக்கேல் ஷூமேக்கர் கலந்துகொண்டு பட்டம் வென்ற கார்கள் ரூ.48.7 கோடி வரை ஏலம் போனது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

ஏலத்தில் விற்கப்பட்ட ஃபெராரி எஃப் 2001 கார் 211 என்ற சேஸிஸ் எண் கொண்டது. இதனை வாங்கியவருக்கு போக்குவரத்து மற்றும் கராஜ் உள்ளிட்ட வசதிகளை பிரத்யேகமாக செய்து தருவதாக ஃபெராரி கூறியுள்ளது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

ஃபெராரி எஃப் 2001 காரில் 3.0 லிட்டர் வி10 எஞ்சின் உள்ளது. இது 800 முதல் 900 பிஎச்பி பவர் வழங்கும் அபார ஆற்றலை கொண்டது.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

2013-ம் ஆண்டில் நடைபெற்ற கார் பந்தைய விபத்தில் வீரர் மைக்கேல் ஷூமேக்கருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல மாதங்களாக சுயநினைவின்றி இருந்தார்.

ரூ.48 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஷூமேக்கரின் எஃப்1 ரேஸ் கார்

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் பல போராட்டங்களை கடந்து காபாற்றப்பட்டார். மெல்ல மெல்ல மைக்கேல் ஷூமேக்கர் காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும், இன்னும் அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, November 21, 2017, 12:43 [IST]
English summary
Read in Tamil: Michael Schumacher's 2001 F1 Championship Winning Car Auctioned Off For Rs. 48 Crores. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+